சற்று முன்

தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |    மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'   |    'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!   |    நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு   |    மாபெரும் 3D அனிமேஷன் சினிமா 'வாயுபுத்ரா' புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!   |    அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'சம்பராலா ஏடிகட்டு (SYG)'   |    நிவின் பாலியின் அதிரடி லுக்கில் உருவாகும் அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லர் ‘பேபி கேர்ள்’   |    அன்போடு 'ஸ்வீட்டி' என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டிக்கு பிரபாஸ் வாழ்த்து பதிவு!   |    100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லோகா - அத்தியாயம் 1’!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோவில்!   |    கீர்த்தி சுரேஷ் & மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் விமரிசையாக துவங்கியது!   |    ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள 'பூக்கி' பூஜையுடன் துவங்கியது!   |    விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் & வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் 'கட்டா குஸ்தி 2'   |   

சினிமா செய்திகள்

உன்னோடு கா! மனம் திறந்த இசையமைப்பாளர்
Updated on : 07 May 2016

ஆரி மற்றும் மாயா ஆகியோர்களை முதன்மை கதாப்பாத்திரங்களாக கொண்டு அறிமுக இயக்குனர் ஆர்.கே இயக்கியுள்ள கலகலப்பான திரைப்படம் 'உன்னோடு கா'.



 



தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் இந்த படத்திற்கு கதை எழுதி தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் பிரபு, ஊர்வசி, பால சரவணன் மற்றும் மிஷா கோஷல் முக்கிய வேடங்களில் நடித்திருப்பது குறிபிடத்தக்கது. 



 



ஏற்கனவே எங்கேயும் எப்போதும், நெடுஞ்சாலை, இவன்வேறமாதிரி, கதை திரைக்கதை,வசனம்,இயக்கம் போன்ற படங்களுக்கு சிறப்பான இசையை வழங்கியதுபோல் உன்னோடு கா படத்திற்கும் ரசிக்கும்படியான பாடல்களை வழங்கியுள்ளார் சத்யா.



 



இப்படத்திற்கு இசையமைத்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள சத்யா, முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. வரிகள் + டியூன் + வாத்தியங்கள் + குரல். இது தான் எங்களின் தாரகை மந்திரமாக செயல்பட்டது. பொதுவாக பிள்ளைகள் காதலுக்காக வீட்டை விட்டு ஓடி விட்டால் வருத்தப்படும் பெற்றோறரை தான் இதுவரை அனைவரும் கண்டிருப்போம். ஆனால் இந்த படத்தில் அதை அவர்கள் கொண்டாடும் வகையில் 'ஓடிட்டாங்க' என்னும் பாடல் இடம் பெற்றுள்ளது. 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா' பாடலுக்கு பிறகு, மனோ மற்றும் கிருஷ்ணா ராஜ் ஆகிய இருவரும் 15 வருடங்கள் கழித்து இந்த பாடலில் இணைந்துள்ளனர்."



 



"இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் மகள் வைமித்ரா பாடியுள்ள 'ஊதே ஊதே' பாடல். மேலும் அபிராமி ராமநாதன் அவர்களின் பேத்தி மீனாட்சி பெரியக்கருப்பன் இந்த பாடலில் நடித்துள்ளது, படத்திற்கு அமைந்த ஒரு சிறப்பம்சம். முழுக்க முழுக்க குழந்தைகளால் உருவாக்கப்பட்ட இந்த பாடலுக்கு மதன் கார்கியின் தனித்துவமான வரிகள் மேலும் மேலும் அழகு சேர்த்துள்ளது.



 



ரா என்னும் தமிழ் வார்த்தையை தா போல் உச்சரிக்க செய்திருக்கிறார் மதன். இந்த பாடலுக்கு வாத்தியங்கள் வாசிப்பதில் இருந்து கோரஸ் பாடும் வரை அனைத்தும் குழந்தைகளால் கையாளப்பட்டவை. உலகளவில் பியானோ இசை வாத்தியத்தில் திறன் பெற்ற லிடியன், இந்திய அளவில் புல்லாங்குழலில் புகழ் பெற்ற வர்ஷினி, சிம்போனி இசையில் வயோலின் வாசிக்கும் அன்பு ஆகிய குழந்தைகள் இந்த பாடலுக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளனர். பாடலின் குரலுக்கு சொந்தகாரர்களான சிந்தியா, சஜினி, சாஷ்வின், சினேகா மற்றும் உசீஜா ஆகியோர் நிச்சயம் பாடலின் மெல்லிசைக்கு தூணாக அமைந்து இருக்கின்றனர். இந்த பாடலுக்காக கிளாஸ்சிக்கல் கிட்டார் வாசித்த டெல்சி என்னும் சிறுவன், ஜாஸ் இசையில் கைதேர்ந்தவர் மட்டுமில்லாமல் முன்னணி இசை அமைபாளர்களுக்கு வாசிப்பது குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா