சற்று முன்

ஆக்சன்-திரில்லர் திரைப்படம் ‘மாஸ்க்’ ஜனவரி 9, 2026 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!   |    ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது   |    நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான் - இயக்குநர் நாராயணன்   |    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |    Behindwoods Productions நிறுவனம் யூடுயூபில் வெளியிட்ட 'மூன்வாக்' படத்தின் மினி கேசட்!   |    சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |   

சினிமா செய்திகள்

RARA திரைப்படத்தின் முதல் பாடலானா 'சீரா சீரா' பாடலை வெளியிட்ட AMAZON PRIME VIDEO
Updated on : 17 September 2021

கிருஷ்ஷின் இசையில், மகாலிங்கம், ராஜேஸ்வரி மற்றும் கிருஷ் பாடியுள்ள RARA திரைப்படத்தின் முதல் பாடலான சீரா சீரா பாடலை மனதைத் தொடும் வரிகளுடன் யுகபாரதி எழுதியுள்ளார்.



 



சமூக நடப்புகளை நையாண்டி செய்யும் விதமான எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் Amazon Prime Video-இல் செப்டம்பர்-24 அன்று பிரத்தியேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும்



 



சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத் தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்கு முன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 999 Amazon Prime உறுப்பினர் சந்தாவில் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்கு சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பட்டியலிடப்பட்டுள்ள Amazon-இன் தரமான உள்ளடக்கத்தைக் கண்டு ரசிக முடியும். Prime Video மொபைல் பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.



 



மும்பை, செப்டம்பர்-17, 2021 - ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, கிராமப் பின்னணியுடன் கூடிய, மனதைத் தொடும் வரிகளைக் கொண்ட சீரா சீரா பாடல் Amazon Prime Video-இல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் திரைப்படம் செப்டம்பர்-24 2021 அன்று வெளியிடப்பவுள்ளது.



 



மகாலிங்கம், ராஜேஸ்வரி & க்ருஷ் ஆகியோர் பாடியுள்ள இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். சீரா சீரா கிராமப்புற சூழலில் உங்களைப் பயணிக்க வைக்கும் ஒரு அற்புதமான பாடல் ஆகும். வாழ்க்கையின் எளிய சிறுசிறு சந்தோஷங்களை இப்பாடல் அழகாகப் படம் பிடித்துள்ளது. பசுமையான வயல்வெளிகள், வளையல் உழும் காளைகள், கிராமத்து மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும் விதம் ஆகியவற்றைக் காண்பது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக உள்ளது.



 





Song Link: https://youtu.be/aUxMNGgqGzs

 





இந்த பாடலைப் பற்றி RARA திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில், "உலகின் மிகவும் துடிப்பான நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு பாடலை நாங்கள் வழங்க விரும்பினோம்." என்று ராஜசேகர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “மேலும், கிராமத்தில் நாம் அனுபவிக்கும் பழமையான மற்றும் ஆழமாக வேரூன்றிய பண்பாட்டின் சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடலை அமைக்க விரும்பினோம். சீரா சீரா கிராமிய வாழ்க்கையை அழகாக வெளிப்படுத்திப் பார்வையாளர்களை மகிழ்விக்கும் பாடலாக அமைந்துள்ளது. இந்தப் பாடலை மகாலிங்கம், ராஜேஸ்வரி & க்ருஷ் ஆகியோர் தங்கள் மனம் மயக்கும் குரலில் பாடியுள்ளனர். கிருஷ் ஒரு பிரபல பாடகர் என்பது நான் அறிந்ததே, இத்திரைப்படத்தின் மூலம் அவர் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். நாட்டுப்புற இசையை நவீன இசையுடன் இணைத்து மிக அற்புதமாக வழங்கியுள்ளார். சீரா சீரா பாடல் எங்கள் மனதை மயக்கியது போலவே பார்வையாளர்களின் மனதை உருக்கும் பாடலாக அமையும் என நான் நம்புகிறேன்." என்றார்

 



 



அரிசில் மூர்த்தி இயக்கிய இத் திரைப்படத்தை, 2 டி என்டர்டெயின்மென்ட் எனும் தனது பேனரின் கீழ் சூர்யா தயாரித்துள்ளார், RARA செப்டம்பர் 24, 2021 அன்று பிரத்தியேகமாக Amazon Prime vIdeo-இல் வெளியிடப்பட உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா