சற்று முன்

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை ஒரு சேர வென்றுள்ள ZEE5 வின் 'விநோதய சித்தம்' திரைப்படம்   |    வரலட்சுமி சரத்குமார் வழக்கறிஞராக அவதாரமெடுக்கும் புதிய படம் ஆரம்பம்   |    கண்டெய்னருக்குள் படமாக்கப்பட்ட ஊமைச் செந்நாய் படத்தின் சண்டைக்காட்சிகள்   |    பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் வெளியிட்ட படக்குழு   |    ஆவலுடன் எதிர்பார்க்கும் சூர்யாவின் ஜெய் பீம் ட்ரெய்லர் அக்டோபர் 22 அன்று வெளியாகிறது   |    மாணவர்களுக்கான இலவச சினிமா பயிற்சி - தமிழகம் முழுவதும் 5 ஊர்களில் 2வது சுற்று தேர்வு   |    விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு   |    தனுஷ் படத்தை சிறந்த இந்திய திரைப்படமாக தேர்வு செய்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா   |    SKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் ஸ்டோரிஸ் இணையும் படத்தில் நடிக்கும் கலையரசன்   |    தேவா பாடிய காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடல் அபார வெற்றி!   |    ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்ட பிரபல பாடல்   |    இளம் நடிகரின் காலில் விழுந்த பிரியா பவானிஷங்கர்!   |    நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை   |    ஐஸ்வர்யா ராஜேஷ்.கதாநாயகியாக நடிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் படம் பூஜையுடன் துவங்கியது   |    வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சமந்தா; தசரா பண்டிகையில் வெளியான அறிவிப்பு   |    நானி, சாய் பல்லவிக்கு இடையேயான காதலை ஒரு போஸ்டர் மூலமாக வெளியிட்ட படக்குழு   |    ஜெய் பீம் படத்தின் பவர்புல்லான ‘பவர்’ சாங் வெளியானது   |    சமந்தா Dream warrior Pictures நிறுவனத்தில் நடிக்கும் முதல் படம்   |    தனுஷ்,செல்வராகவன் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது!   |    அதர்வாமுரளி நடித்துள்ள 'அட்ரஸ் படபிடிப்பு முடிவடைந்தது.   |   

சினிமா செய்திகள்

இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியராக பல விருதுகளை அள்ளிக்குவித்த ஷபீர்
Updated on : 17 September 2021

ஷபீர்,  இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியராக "சாகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, நீயா 2, கடாரம் கொண்டான் (பின்னணி பாடகர்)" படங்கள் மூலம் பெரும் புகழ் பெற்றவர்.  அவரது பாடல்களில் ஒன்றான "யாயும்" பாடல்  Youtube தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைத் கடந்து மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஷபீர் பங்களிப்பில், முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள "சினம்" திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.  ஷபீர் சிங்கப்பூரில்  பல  திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்த, ஒரு விருது பெற்ற நடிகர் என்பது இந்தியாவில் நம்மில் பலருக்கு தெரியாது. ஷபீர் கதாநாயகனாக ஒரு தமிழ் திரைப்படத்தையும் நடித்து  முடித்துள்ளார். தற்போது "This Land is Mine" எனும் பிரபல தொடரில் அவர் நடித்திருக்கும் பாத்திரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  இத்தொடரின் கதையில் வரும் ஹபிபுல்லா கான் (ஷபீர் நடித்தது)  பாத்திரம் பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயே இந்திய படையில் “The Tiger of Rangoon” அழைக்கப்பட்ட புகழ்மிகு பாத்திரம் ஆகும் ஹபிபுல்லா ஒரு இந்திய ராணுவ அதிகாரி மற்றும் போர் வீரன், ரங்கூனில் போர் நடவடிக்கைகளில் பங்கு கொண்டவர்.  பின்னர் சிங்கப்பூர் வந்து, அங்குள்ள பிரிட்டிஷ் இராணுவ முகாமில் சுதந்திரம், ஒழுக்கம் மற்றும் அடையாளத்திற்கான போரில் சிக்கிக்கொண்டார். போரின் போது ஒரு இயந்திர துப்பாக்கி முனையில் தனது கையை இழந்தவர். இத்தொடரில் ஹபிபுல்லா கானின் கதாபாத்திர அறிமுகம் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது, அது பொதுமக்களிடமிருந்து மிகப்பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. நீண்ட நேரம் படப்பிடிப்பில் தனது ஒரு கையை மடித்து சட்டைக்குள் வைத்துக்கொண்டு, கையிழந்தவர் போல நடித்துள்ள, ஷபீர்  நடிப்பு அற்புதமாக  இருந்ததாக பாராட்டை பெற்றுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா