சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'இராவணகோட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது
Updated on : 17 September 2021

நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்,  Kannan Ravi Group சார்பில்  தயாரிப்பாளர் திரு. கண்ணன் ரவி தயாரிக்கும் “இராவணகோட்டம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. 



 



படம்  குறித்து தயாரிப்பாளர்   திரு. கண்ணன் ரவி கூறியதாவது.... 



 



“இராவணகோட்டம்” படத்தின் திரைப்படத்தின் இந்த பயணம் மனதிற்கு மிக நெருக்கமானதும், ப்ரத்யேகமானதுமாகும். மற்ற அனைத்து படங்கள் போலவே, இந்த பொது முடக்க காலத்தில், இப்படத்தின் படப்பிடிப்பும் பல தடைகளை சந்தித்தது. தற்போது படத்தின் அனைத்து படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்தது, படக்குழு அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. தான் உறுதியளித்தபடி சரியாக திட்டமிட்டு, படப்பிடிப்பை முடித்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இராவணகோட்டம் திரைப்படம் சாந்தனு பாக்யராஜ் திரைப்பயணத்தில்  மிக முக்கியமான திருப்புமுனை திரைப்படமாக இருக்கும். எல்லா தயாரிப்பாளர்களும் தன் நடிகரை புகழ்வது போல் இதை நான் கூறவில்லை. படத்தில் சாந்தனு நடித்திருந்த காட்சிகளை பார்த்துவிட்டே, இதனை கூறுகிறேன். விரைவில் படத்தின் போஸ்ட புரடக்சன் பணிகளும் முடிக்கப்படவுள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆடியோ, இசை, உலக திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம் என்றார். 



 





இயக்குநர் விக்ரம் சுகுமாரன் கூறியதாவது... 





இப்படத்தில் மிகுந்த ஈடுபாடுடனும், அர்ப்பணிப்புடன், உழைத்து உருவாக்கிய தயாரிப்பாளர் திரு கண்ணன் ரவி  அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். படக்குழுவிலுள்ள அனைவருக்குமே  இது ஒரு முக்கியமான திரைப்படம், அவருடைய ஆதரவின் காரணமாக எங்கள் கனவு படைப்பு  மிக அழகாக  உருவானதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ்  மிகத் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த திரைப்படத்தில்  ஒவ்வொரு நடிகரும் தொழில்நுட்பவியலாளர்களும் முழு அர்ப்பணிப்புடன் கடுமையான உழைப்பை  வழங்கியுள்ளனர். இத்திரைப்படம்  அனைத்து உள்ளங்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன் என்றார். 



 





விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்கியுள்ள, இராவணகோட்டம் திரைப்படத்தை Kannan Ravi Group சார்பில்  தயாரிப்பாளர் திரு. கண்ணன் ரவி தயாரித்துள்ளார். சாந்தனு பாக்யராஜ் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இளையதிலகம் பிரபு சார், இளவரசு, குக் வித் கோமாளி தீபா, அருள்தாஸ், சுஜாதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா