சற்று முன்

'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |   

சினிமா செய்திகள்

YouTube-ல் சாதனை படைத்த ஜெய் நடிக்கும் 'எண்ணித் துணிக' பட டீசர்! உற்சாகத்தில் படக்குழுவினர்
Updated on : 16 September 2021

விநாயகர் சதுர்த்தி திருநாளில் வெளியான, ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள “எண்ணித் துணிக” படத்தின் டீசர், YouTube தளத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பானது, ரசிகர்களிடையேயும், விநியோக தளத்திலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது. நடிகர் ஜெய்யின் இணையற்ற நடிப்பு, இயக்குநர் வெற்றி செல்வனின் அற்புத உருவாக்கத்தில், 90 வினாடிகளில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும்  அறிமுகப்படுத்தியிருக்கும் நேர்த்தியான கதை,  விழிகளை விரயச்செய்யும் தினேஷ் குமாரரின் ஒளிப்பதிவு, சாம் CS உடைய   மனம் மயக்கும் பின்னணி இசை மற்றும் V.J.சாபு ஜோசப்பின் ஸ்டைலான எடிட்டிங்  அனைத்தும்  இணைந்த, இந்த  டீசர் படத்தின் மீதும், கதையின் மீதும், ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது. டீசருக்கு கிடைத்துள்ள இந்த மாபெரும் வரவேற்பின் மகிழ்ச்சியில், உற்சாகத்துடன்  இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு  குறித்து தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். 



 





 



எண்ணித் துணிக படத்தை S.K.வெற்றி செல்வன்  எழுதி இயக்கியுள்ளார்.  Rain of Arrow Entertainment சார்பில்  சுரேஷ் சுப்பிரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார். ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும்  அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்பிரமணியன் மற்றும் பல முக்கிய  நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சாம் CS  இசையமைக்கிறார், J.B. தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், மற்றும்  V.J. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.



 





Think Music நிறுவனம் எண்ணித் துணிக படத்தின்  ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது, விரைவில் இசை ஆர்வலர்களுக்கு  சாம் CS உடைய மெஹா ஹிட் பாடல்களை வழங்கவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா