சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் ஆர்யா உட்பட 100 பிரபலங்கள் வெளியிட்ட 'வாஸ்கோடகாமா' படத்தின் பர்ஸ்ட் லுக்
Updated on : 11 September 2021

தமிழ்த்திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத பெருரை நிகழ்வாக 100 விஐபிகள் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் 'வாஸ்கோடகாமா'



 



இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விநாயகர் சதுர்த்தியான நேற்று 100 பேர்  வெளியிட்டிருக்கிறார்கள்.



 



நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன். ஆரியா, வெங்கட்பிரபு,பிக்பாஸ் வின்னர் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன் , நடிகைகள்  ,அதுல்யா ரவி, பிரியா பிரகாஷ் வாரியர்,இயக்குநர்கள் கே. எஸ். ரவிக்குமார்,இசையமைப்பாளர் டி இமான், தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்,  ஊடகப் பிரபலம் ரங்கராஜ் பாண்டே, நடிகர், நடிகைகள் அரசியல் பிரபலங்கள் போன்ற நூறுபேர் இன்று 10 ஆம் தேதி காலை 10 மணி 10 நிமிடத்திற்கு  வெளியிட்டுள்ளார்கள்.இது இதுவரை திரையுலகம் காணாத புதுமையான நிகழ்வாகும்.



 



5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும்  'வாஸ்கோடகாமா'  படத்தை மலேசியாவில் பல பெரிய நிறுவனங்கள் நடத்தும் டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.



 



கதை திரைக்கதை எழுதி இந்தப் படத்தை  ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார்.



 



இந்தத் தயாரிப்பாளர் இயக்குநர் கூட்டணியில் ஏற்கெனவே 'தேவதாஸ் பார்வதி ' படத்தின் பாடலை திரை உலகமே பாராட்டியது எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் 'என்னோட பாஷா' பாடல் வெளியாகி பலரது பாராட்டையும்  பெற்றது 



 



படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் பேசும்போது,



 



"படத்தின் கதாநாயகனின் பாத்திரப் பொருத்தம் கருதியே படத்துக்கு 'வாஸ்கோடகாமா' என்கிற இந்தப் பெயர் வைக்கப்பட்டது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதுதான் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை.குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்? அவனது மனநிலையும்  குணாம்சமும் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப்பின் எப்படி மாறும் என்பதைக் கற்பனையாக ஜாலியான காட்சிகளோடு  சொல்லும் படம்தான் 'வாஸ்கோடகாமா'. இப்படத்தின் கதாநாயகனாக நகுல் நடிக்கிறார். கதை பிடித்துப்போய் விட்டது.உடனே சம்மதம் கூறி  அடுத்த நாளே ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு இந்தக் கதை அவரைக் கவர்ந்து விட்டது. 



 



இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர். படத்தின் கதாநாயகி ,வில்லன் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.



 



 இது வணிக ரீதியிலான அனைத்து அம்சங்களையும் கொண்ட சுவாரஸ்யமான படமாக உருவாக இருக்கிறது" என்கிறார் இயக்குநர்.



 



படத்திற்கு ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இவர்  'நான் சிரித்தால் 'போன்று சில படங்களில் ஒளிப்பதிவு  செய்துள்ளவர். இசை என்.வி. அருண். இவர் எஸ்பிபி கடைசியில் பாடிய பாடலான பாடல் இடம்பெற்ற 'என்னோட பாட்ஷா' என்கிற ஆல்பத்திற்கு  இசையமைத்திருக்கிறார் .மேலும் பல சுதந்திரமான இசை ஆல்பங்களை உருவாக்கியவர்.



 



சண்டைக்காட்சிகள்- விக்கி .இவர் 'உறியடி' , 'சூரரைப்போற்று' படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்தவர்.கலை இயக்கம்- ஏழுமலை. இவர் 'உறியடி 1', 'உறியடி2 'படங்களில் பணியாற்றியவர். எடிட்டிங் தமிழ்க்குமரன் .இவர் ஏராளமான குறும்படங்களுக்குப் படத்தொகுப்பு செய்தவர். 



 



 படத்தில் 4 பாடல்கள் உள்ளன. நடனக்காட்சிகளை பிக்பாஸ் புகழ்  நடன இயக்குநர் சாண்டி அமைக்கிறார். 



 



படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா