சற்று முன்

சாதி மாற்று திருமணத்தால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படம்   |    ஏடிஎம் மையத்தில் வெளிவந்த போலி ரூபாய் நோட்டுகள் - 'பவர் ப்ளே'   |    சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அமைச்சருடன் ஆலோசனை   |    முதல்வருக்கு திரையுலக தலைவர்கள் வாழ்த்து   |    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கொரோனோ நிதி வழங்கிய படக்குழுவினர்   |    லிவ்விங் டு கெதர் என படு பிசியாக இருக்கும் கன்னிமாடம் புகழ் நடிகர் ஸ்ரீ ராம் கார்த்திக் !   |    காதலும் இல்லை, காதல் காட்சிகளும் இல்லை, மனதை வருடும் வித்தியாசமான கதை 'ஒற்று'   |    செய்தித்துறை அமைச்சருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து   |    இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் ரைட்டர்   |    ‘தமிழ் ராக்கர்ஸ்’ தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் - எச்சரிக்கை விடுத்த ஜாக்குவார் தங்கம்   |    திரையுலகினர் பாராட்டு பெற்ற 'முதலும் முடிவும்' காதல் மொழி பேசும் சுதந்திர இசை ஆல்பம்   |    ஹிப் ஹாப் ஆதியின் “தீ வீரன்” ஆவணப்படம் இணையத்தில் வைரல்!   |    ராட்சச குரங்கு நடிக்கும் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்!   |    ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் படம்!   |    நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது   |    சிவகார்த்திகேயன் பாடிய 'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது   |    மூன்று நண்பர்களை காதலிக்கும் மேக்னா 'நான் வேற மாதிரி'   |    கௌதம் கார்த்திக் நடிக்கும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' தீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில்   |    சிலம்பரசன் ‘மாநாடு’ படப்பிடிப்பில் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி   |    நான் பேபி நயன்தாரா இல்லை, இனிமேல் மிஸ் நயன்தாரா சக்ரவர்த்தி - ரஜினி பட குழந்தை நட்சத்திரம்   |   

சினிமா செய்திகள்

ஏடிஎம் மையத்தில் வெளிவந்த போலி ரூபாய் நோட்டுகள் - 'பவர் ப்ளே'
Updated on : 13 May 2021

இந்த உலகை ஆட்டி வைக்கும் ஒரு மாபெரும் சக்தி பணம்தான். பணத்தை வைட்டமின் என்றும் பவர் என்றும் எனர்ஜி என்றும் கூறுவதுண்டு.அதேபோல் அதிகாரத்தையும் பவர் என்று கூறுவார்கள். பணம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையில் அதிகாரம் எப்படி விளையாடுகிறது என்பதைக் கூறுகிற கதை இது. அதிகாரமும் பணமும் விளையாடினால் அந்தப் பகடையாட்டம் எப்படி இருக்கும்? அது தான் இந்த 'பவர் ப்ளே' படத்தின் கதை.  நாயகன்.ஒருநாள் ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்கிறான் .வெளிவந்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.அவனிடம் வந்தவை போலியான ரூபாய் நோட்டுகளாக இருந்தன .இதன் பின்னே ஏதோ சதி இருப்பதாக உணர்கிறான். இதற்குக் காரணமாக யாரோ அதிகாரம் படைத்தவர்கள்தான் இருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிகிறது. .ஆனால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான்.  

 ஏடிஎம் மையங்களில் ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்காகப் பல ஏஜென்சிகள் உள்ளன. அவர்கள் செய்த  சதியால் தான் இவ்வாறு போலி ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டது என்று தெரிகிறது .  அதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கப் போராடுகிறான் என்பதும் தான் 'பவர் ப்ளே' . மீள்வதற்கான அவனது போராட்டங்களைப் பரபரப்பான காட்சிகளோடு படமாக்கியிருக்கிறார்கள்.  இப்படத்தை விஜயகுமார் கொண்டா இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே தெலுங்கில் சில படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.வனமாலி கிரியேஷன்ஸ் பி.லிட் சார்பில் மகேந்தர், தேவேஷ் தயாரித்துள்ளனர். 

  இதில் கதாநாயகனாக  ராஜ் தருண் நடித்துள்ளார்.இவர் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பரிச்சயமான பூர்ணா முக்கியமான வில்லி பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். பூர்ணாவுக்கு  நடிப்பில் இன்னொரு முகத்தைக் காட்டும் வாய்ப்பு.கோட்டா சீனிவாச ராவ் வில்லத்தனத்தில் பூர்ணாவுடன் போட்டி போட்டு நடித்துள்ளனர்.மற்றும் ஹேமா லிங்கலே, பிரின்ஸ் ,அஜய், சத்யம் ராஜேஷ், பூஜா ராமச்சந்திரன், ராஜா ரவீந்திரா, கேதார் சங்கர், ரவிவர்மா, தன்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவு ஆண்ட்ரூ, இசை சுரேஷ் பொப்பிலி,எடிட்டிங் பிரவின் புடி, சண்டை இயக்கம் ரியல் சதீஷ் எனத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்துள்ளனர்.  'பவர் ப்ளே' இந்த தலைப்பு ஏன் என்றால் எவ்வளவு பவர் வாய்ந்த அதிகாரம் மிக்கவர்கள்  தங்கள் பவரை வைத்து எப்படியான செயல்களையெல்லாம் செய்கின்றனர் என்பதைக் காட்டுவதால்தான் இந்த தலைப்பு என்கின்றனர் படக்குழுவினர். அமேசானில் தெலுங்கிலும் இந்தியிலும் வெளிவந்த இப்படம் இப்போது தமிழில் உருவாகி உள்ளது.  தற்போது அமேசானில்வெளியாகியுள்ளது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா