சற்று முன்

'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |   

சினிமா செய்திகள்

‘தமிழ் ராக்கர்ஸ்’ தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் - எச்சரிக்கை விடுத்த ஜாக்குவார் தங்கம்
Updated on : 30 April 2021

ஜஸ்வந்த் சூப்பர் சின்மாஸ் சார்பில் கே.பிச்சாண்டி தயாரித்துள்ள படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’. பரணி ஜெயபால் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்ததோடு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும், எஸ்.பி.பி.சரண், விடிவி கணேஷ், இயக்குநர் சரவண சுப்பையா, நாஞ்சில் சம்பத், தேவதர்ஷினி, மீனாக்‌ஷி திக்‌ஷித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



 



அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயராகி வரும் நிலையில், ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற தலைப்பு வைக்க கூடாது, என்று தயாரிப்பாளர் கே.பிச்சாண்டிக்கு சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் பிச்சாண்டி கில்டு அமைப்பில் புகார் அளித்துள்ளார்.



 







 

இந்த புகார் குறித்து இன்று காலை பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஜாக்குவார் தங்கம் கூறியதாவது:



 



தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி என்பவர் கில்டில் ' தமிழ் ராக்கர்ஸ்' என்ற தலைப்பை பதிவு செய்தார். நாங்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய வர்த்தக சபை ஆகிய சங்கங்களை முறையாக விசாரித்து, அவர்களின் ஒப்புதலுக்கு பிறகே தலைப்பை கில்டு (GUILD) சார்பாக பதிவு செய்தோம்.



 



தற்போது முழு திரைப்படத்தையும் முடுத்து விட்டதோடு 'தமிழ் ராக்கர்ஸ்' என்ற தலைப்பில், தயாரிப்பாளர் பிச்சாண்டி தணிக்கை சான்றிதழும் பெற்றுவிட்டார்.



 



இந்த நிலையில், தயாரிப்பாளர் பிச்சாண்டிக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அதேபோல், தயாரிப்பாளர் வாகனத்தில் செல்லும் போதும் சிலர், அவரை தலைப்பை மாற்றும்படி மிரட்டியுள்ளனர். தயாரிப்பாளரின் நண்பர் சரவணனையும் இது தொடர்பாக மிரட்டியுள்ளனர்.



 



மத்திய அரசு அங்கீகரித்த தணிக்கை சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படத்தின் தலைப்பை மாற்றும்படி சொல்ல நீங்கள் யார்? அப்படியே அந்த தலைப்பில் எதாவது பிரச்சினை என்றால், அதுகுறித்து சங்கத்தில் புகார் அளிக்கலாம் அதை விட்டுவிட்டு தயாரிப்பாளரை தனிப்பட்ட முறையில் மிரட்க்கிடுவது சரியல்ல. இனியும் அவர்களின்  மிரட்டல் தொடர்ந்தால் காவல் துறையில் சங்கம் சார்பாக புகார் அளிப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறோம். 



 



மேலும், மிரட்டல் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளருக்கு துணையாக நிற்போம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



 



இவ்வாறு கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா