சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

திரையுலகினர் பாராட்டு பெற்ற 'முதலும் முடிவும்' காதல் மொழி பேசும் சுதந்திர இசை ஆல்பம்
Updated on : 30 April 2021

முதலும் முடிவும் இசை ஆல்பத்தை பார்த்துதிரையுலகினர் பலரும் பாராட்டியுள்ளனர்.   நடிகர் ஹரிஷ கல்யாண்,நடிகர் பிரேம்ஜி, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ,இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன், மியூசிக் டைரக்டர் சபீர், இவர்கள் அனைவரும் இசையமைப்பாளர்  ஹரி எஸ். ஆர். யை பாராட்டி இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர்



 



இந்தப் பொது முடக்க காலத்தில் படப்பிடிப்புகள் முடங்கியுள்ள நிலையில் திரையுலகத் திறமையாளர்கள் முடங்கிப் போகாமல் இருக்க ஒற்றைப் பாடல்களாக வெளியிட்டு உலக பொதுவெளியில் பரப்புகிறார்கள்.அதற்கு உலக ரசிகர்களின் பரப்பில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது .அதற்கு 'என்ஜாயி எஞ்சாமி 'குக்கூ குக்கூ பாடல் அண்மை உதாரணம்.  இந்த வரிசையில் சேர்வதற்கு இன்று பலரும் தயாராகி வருகிறார்கள்.



 



அவ்வகையில் 'முதலும் முடிவும்' என்கிற பெயரில் காதல் மொழி பேசும் இனிமை சொட்டும் சுதந்திர ஆல்பம் ஒன்று உருவாகியுள்ளது.



 



இதற்கும் இசையமைத்து உள்ளவர் ஹரி எஸ். ஆர். இசையின் மீது தீராத காதல் கொண்டுள்ள இவர், ஏராளமான இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர். தமன், ஷபீர், கணேஷ் சந்திரசேகரன் போன்ற இசையமைப்பாளர்களிடம் திரைப்படங்களில்   பணியாற்றியவர். நிறைய மேடைகளில்  இசைக்குழுவில் இடம்பெற்றுத் தன் திறமையை வெளிப்படுத்தியவர். சங்கரா டிவி, SVBC டிவி  போன்ற தொலைக்காட்சிகளில் தோன்றி இசை நிகழ்ச்சிகள் வழங்கியவர்.



 



தன்னுடைய இசைக் கனவினை மனதில் சுமந்து கொண்டு இருந்தவர், படிப்பை முடித்த பின் இப்போது முழுநேர இசையமைப்பாளராக களத்தில் இறங்கி விட்டார். அப்படி இறங்கி ஐம்பது விளம்பரப் படங்களுக்கும் இருநூறு குறும் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.



 



 பாடல் மூலம்தான் ரசிகர்களைச் சென்றடைய முடியும் என்று இந்த ஒற்றைப் பாடல் ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார்.



 



 இவர் தன்னுடைய திறமையைக் காட்ட முன்னோட்டமாக இந்த 'முதலும் முடிவும்'  ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார்.



 



இந்த ஆல்பத்தில் 'முதலும் நீ தான் முடிவும் நீ தான்'  என்று தொடங்கும் பாடலை உருவாக்கி இருக்கிறார்.



 



பாடலுக்கு வரிகள் ரேஷ்மன் குமார். ஒளிப்பதிவு இயக்குநர் மணிவண்ணன் .ஹரிகரன். ஐ படத்தொகுப்பு செய்திருக்கிறார். விளம்பர வடிவமைப்பு மற்றும் அனிமேஷன் வேலைகளை குஞ்சன் தோஷி செய்திருக்கிறார்.



 



வி.கே.ரெக்கார்ட்ஸ் சார்பில் காயத்ரி ஆர்.எஸ். தயாரித்துள்ளார்.



 



இந்தப் பாடலை  ஏர்டெல் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் ஆனந்த் அரவிந்த் தக்ஷன் பாடியுள்ளார். பெண்குரலாக ஆர்த்தி எம்.என். அஸ்வின் பாடியுள்ளார்.



 



இசையமைப்பாளர் ஹரி இப்போது 'பிள்ளையார்சுழி',  'சோழ நாட்டான்' என இரண்டு திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றிருக்கும் இவர், இந்தப் பாடல் தனக்குப்பெரிய வெளிச்சத்தைத் தேடிக் கொடுக்கும் என்று நம்புகிறார்.



 



முதலும் முடிவும் ஆல்பம்  ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு யூடியூபில் வெளியிடப்பட்டது .இது மிக முக்கிய  சமூக ஊடக இணைய மேடைகளிலும்  வெளியாகும்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா