சற்று முன்

பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |    சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு   |    என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்   |    சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்   |    காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!   |    ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |   

சினிமா செய்திகள்

நான் பேபி நயன்தாரா இல்லை, இனிமேல் மிஸ் நயன்தாரா சக்ரவர்த்தி - ரஜினி பட குழந்தை நட்சத்திரம்
Updated on : 20 April 2021

மலையாளத்தில் ' கிலுக்கம் கிலுகிலுக்கம் ' படத்தின் மூலம் அறிமுகமானவர் ' பேபி ' நயன்தாரா.  மம்மூட்டி , மோகன்லால், ரஜினிகாந்த் உள்பட தென்னகத்தின் முன்னணி நடிகர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு,மலையாளம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளும் பாராட்டுகளையும் பெற்றார். ரஜினியின் 'குசேலன்' படத்தில் நயன்தாராவுடன்  நடித்தார் 'பேபி' நயன்தாரா. அப்போது முதல் நாள்  என்னை பார்த்த நயன்தாரா  சேச்சி என்னிடம்.. *" நீ தான் என் பெயரை திருடியவளா " என்று தமாஷாக கேட்டார். அதற்கு பேபி நயந்தாரா, நீங்கள் தான் என் பெயரை வைத்துள்ளீர்கள். நான் பிறக்கும் போதே நயன்தாராவாக தான் பிறந்தேன் வேண்டுமென்றால் என் பிறப்பு சான்றிதழ்/ birth certificate காட்டவா ? என்று நான் சிறுபிள்ளை தனமாக பதில் சொல்ல அவர் விழுந்து விழுந்து சிரித்தாராம் நயந்தாரா.



 



ரஹ்மான் நாயகனாக நடித்த மலையாள படம் 'மறுபடி' தான் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த கடைசி படம். அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்த சில காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்ற தன்னை தயார் படுத்தியுள்ளார் . 'பேபி' நயன்தாரா வாக அல்ல..ஹீரோயின்  'மிஸ்'நயன்தாரா சக்ரவர்த்தியாக இனி வலம் வர உள்ளார். இதை அவரே தனது  பிறந்த நாளான இன்று (ஏப்ரல் 20) அறிவித்துள்ளார். எர்ணாகுளம் தேவராவிலுள்ள புனித இருதய கல்லூரி(Sacred Heart College)யில் மாஸ் கம்யூனிகேஷன் & ஜர்னலிசம் (Mass communication and Journalism) முதலாமாண்டு மாணவியாக சேர்ந்துள்ள நயன்தாரா சக்ரவர்த்திக்கு தமிழில் நாயகியாக அடி எடுத்து வைக்க வேண்டும் என்பது தான் ஆசை. அதனாலேயே தமிழில் கதை கேட்டு வருகிறார். வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா இந்த 'மலையாள நாட்டு சுந்தரி’ யையும் அரவணைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.



 



 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா