சற்று முன்

விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

அதர்வா முரளி நடிக்கும் பிரமோத் பிலிம்ஸ்-ன் 25 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது!
Updated on : 16 April 2021

அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படத்தின் டயலாக் மற்றும் ஆக்சன் காட்சிகளின்  படப்பிடிப்பு ஒரே கட்டமாக இன்று 16.4.2021 முடிக்கப்பட்டது..



 



Pramod Films சார்பில் தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா இது குறித்து கூறியதாவது..



 



எங்களது 25 வது திரை படைப்பின் டயலாக் மற்றும் ஆக்சன் காட்சிகள் படப்பிடிப்பு முடிக்கப்பட்டதை அறிவிப்பது பெரு மகிழ்ச்சி.  இன்னும் இப்படத்தின் பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவேண்டியுள்ளது. அதனை சென்னையில் படமாக்க திட்டமிட்டுள்ளோம். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. இந்த இனிய நேரத்தில் நடிகர் அதர்வா முரளி,  இயக்குநர் சாம் ஆண்டன் மற்றும் படக்குழு அனைவரின் அயராத உழைப்பிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். மிகச்சிறந்த திட்டமிடலுடன் அருமையான இயக்கத்தினை செய்தார் இயக்குநர். திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்ட பொருட்செலவில் படத்தின் படப்பிடிப்பை முடித்தார் இயக்குநர் சாம் ஆண்டன். விரைவில் படத்தின் பாடல்களின் படப்பிடிப்பும் முடிக்கப்பட்டு, படத்தின் ட்ரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.



 



இயக்குநர் சாம் ஆண்டன் கூறியதாவது ... 



 



மிகச்சிறந்த ஒத்துழைப்பினை நல்கியதற்காக Pramod Films நிறுவனத்தாருக்கு என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். அதிலும் இந்த பொது முடக்க காலத்தில் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பு பணிகளை துவங்க தயங்கி நின்றபோது,  துணிவாக களமிறங்கி மிகச்சிறந்த திட்டமிடலுன் இப்படத்தினை தயாரித்தனர்.  புது ஐடியாக்களுக்கு அவர்கள் எப்போதும் மறுப்பு தெரிவுத்ததே இல்லை. விரைவில் பாடல்களை படமாக்கவுள்ளோம். படம் ரசிகர்களுக்கு மிகபெரிய விருந்தாக இருக்கும்.



 



100 பட வெற்றி கூட்டணி, திலீப் சுப்பராயன் ஒருங்கமைத்த, ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ஆக்சன் காட்சி என  இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை விதைத்துள்ளது.



 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா