சற்று முன்
சினிமா செய்திகள்
சசிகுமாருக்கு சமுத்திரக்கனி தாய்மாமனா!
Updated on : 16 April 2021
ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில், சத்யராஜ்-சசிகுமார் நடிப்பில் வெளிவருகிறது எம்ஜிஆர் மகன்.
தனது முந்தைய திரைப்படங்களான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய மூன்றிலுமே குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் அம்சங்களை சுவாரசிய கலவையாக தந்த இயக்குநர் பொன்ராம், தனது புதிய படைப்பான எம்ஜிஆர் மகன் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், “100% பொழுதுபோக்குக்கு நான் உத்தரவாதம்” என்கிறார்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படத்தில், சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தை பற்றி உற்சாகத்துடன் பேசும் பொன்ராம், “ஒரு சின்ன விஷயத்துக்காக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும் மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதே கதைக்கரு. தந்தையாக சத்யராஜும், மகனாக சசிகுமாரும், தாயாக சரண்யா பொன்வண்ணனும், தாய்மாமனாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.
எம்ஜிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம் ஜி ராமசாமியாக சத்யராஜ் நடித்துள்ளார். அன்பளிப்பு ரவி எனும் சுறுசுறுப்பான கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். தனது தந்தையின் சிகிச்சைக்காக எம்ஜிஆரிடம் வரும் அனுப்பிரியா (மிருணாளினி ரவி), எம்ஜிஆர்-அன்பளிப்பு ரவி தந்தை-மகன் சண்டையில் எவ்வாறு நுழைகிறார் என்பது சுவாரசியமாக காட்டப்பட்டுள்ளது. படம் முழுவதும் அரை டவுசரில் வரும் அக்னி எனும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்,” என்றார்.
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், 100 சதவீதம் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தரும் வகையில் எம்ஜிஆர் மகன் உருவாகியுள்ளது. குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை என அனைத்து அம்சங்கள் நிறைந்த கலவையாக மக்களை கவரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று நம்பிக்கையோடு கூறுகிறார் பொன்ராம்.

சமீபத்திய செய்திகள்
நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!
மும்பை, 26 நவம்பர், 2025: நிஜ உலகின் யதார்த்தம் பெரும்பாலும் புனைகதைகளை விட அந்நியமாக இருக்கும். அந்தவகையில், குற்ற உணர்வு மற்றும் அப்பாவித்தனம் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் ஸ்டீபன் கேள்வி கேட்கத் துணிகிறார். வெளியாக இருக்கும் தமிழ் உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்' டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் இன்று வெளியிட்டது. ஒரு மனிதன் ஒரு காவல் நிலையத்திற்குள் நுழைந்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்வதில் இருந்து டிரைய்லர் தொடங்குகிறது. நீங்கள் எதை யூகிக்கிறீர்களோ நிச்சயம் அது கதையில் பிரதிபலிக்காது. கதையின் தீவிரத்தை இசை மேலும் அதிகமாக்கும்.
அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கத்தில், கோமதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஸ்டீபன்' கதை குற்ற உணர்வு, ஒழுக்கம், சரி மற்றும் தவறுக்கு இடையிலான மெல்லிய இடைவெளியை ஆராயும் த்ரில்லர் கதை. இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸின் துணிச்சலான, மாறுபட்ட இந்திய கதைகள் பட்டியலில் இந்தப் படமும் இணைகிறது.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி கோமதி ஷங்கர் பகிர்ந்து கொண்டதாவது,
"என்னுடைய முதல் படம் இதைவிட சிறப்பானதாக அமைய முடியாது! ஸ்டீபன் வழக்கமான கதாநாயகன் கிடையாது. பல அடுக்குகள் கொண்ட, கணிக்க முடியாத, உங்களை யோசிக்க வைக்கும் ஒரு கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது சவாலானதாகவும், மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது. படத்தின் கதையை இணைந்து எழுதியிருப்பதால் அந்த கதாபாத்திரமாக மாறுவது இன்னும் கொஞ்சம் எளிதாக இருந்தது. இந்த கடினமான கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்த இயக்குநர் மிதுனுக்கும் உலகப் பார்வையாளர்கள் மத்தியில் என்னுடைய திறமையை காட்டுவதற்கு களம் அமைத்து கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கும் நன்றி. என்னுடைய பயணம் நெட்ஃபிலிக்ஸின் 'ஸ்டீபன்' படத்துடன் தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
இயக்குநர் மிதுன் பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது,
"'ஸ்டீபன்' ஒரு அமைதியான படம். ஆனால், அது குற்றவுணர்ச்சி, நினைவுகள் என பல விஷயங்களை உங்களிடம் பேசும். இந்த கதையை சொல்வது எனக்கு மிகவும் பர்சனல் ஆனால் ரிஸ்க் நிறைந்தது. இதுவே, இந்தக் கதையை சொல்ல என்னைத் தூண்டியது. இந்தக் கதையை நாங்கள் எப்படி கொண்டு வர வேண்டும் என்று நினைத்தோமோ அதற்கேற்றவாறு கோமதி தன் நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார். அறிமுக இயக்குநரான என்னை நம்பி வாய்ப்பு கொடுத்து இந்த த்ரில்லர் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க உதவிய நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி" என்றார்.
குற்ற உணர்வுக்கும் அப்பாவித்தனத்திற்கும் இடையிலான இடைவெளி மங்கலாகி, நினைவுகள் மிகவும் மோசமான ஒன்றாகத் திரும்பும்போது கதை எப்படி பயணிக்கிறது என்பதுதான் 'ஸ்டீபன்'. படத்தில் உள்ள அனைத்தையும் கேள்வி கேட்கத் தயாராகுங்கள்! டிசம்பர் 5 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸில் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!
நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ். இவர் தயாரித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் உலக பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றதோடு தேசிய விருதும் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘சூப்பர்ஹீரோ’ மற்றும் ‘நிஞ்சா’ ஆகிய படங்கள் தயாரிப்பில் பிஸியாக உள்ளார்.
நடிகர்கள், படக்குழுவினர், நலன் விரும்பிகள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் இன்று காலை (24 நவம்பர், 2025) படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர்கள் நெல்சன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் 'சூப்பர்ஹீரோ' பட டைட்டிலையும், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் ’நிஞ்சா’ பட டைட்டிலையும் வெளியிட்டனர்.
’சூப்பர்ஹீரோ’ படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் சாண்டி எதிர்மறை கதாபாத்திரத்திலும், ரெடின் கிங்ஸ்லி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இந்த படம் மூலம் சினிஷூடன் நீண்டகாலம் பயணித்தவரான விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். ’ஹிருதயம்’ மற்றும் வெளியாகவிருக்கும் ’ஒன்ஸ் மோர்’ படங்களில் பணியாற்றிய ஹேஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு தரமான இசையை கொடுத்திருக்கிறார். இந்த படத்தை கே.எஸ். சினிஷ் வழங்குகிறார் மற்றும் ஷாஞ்சன் ஜி உடன் இணைந்து தயாரிக்கிறார்.
’ஜமா’, ’வே டு ஹோம்’, மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ போன்ற தரமான படங்களைத் தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸின் எஸ். சாய் தேவானந்த் மற்றும் எஸ். சாய் வெங்கடேஷ்வரன் ஆகியோருடன் இணைந்து ’நிஞ்சா’ படத்தை தயாரித்து வழங்குகிறார் கே.எஸ். சினிஷ். இந்தப் படத்தை முருகா இயக்குகிறார். இந்தப் படத்தில் பாரத் கதாநாயகனாகவும், பிராத்தனா நாதன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் மற்றும் நெல்சன் படத்தின் தலைப்பை வெளியிட, நிகழ்வில் நடிகர்கள் ஆர்யா, கவின், சந்தீப் கிஷன், ரியோ ராஜ், மிர்ச்சி சிவா, ரெடின் கிங்ஸ்லி, பிராங்க்ஸ்டர் ராகுல், கலையரசன் மற்றும் கௌஷிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர்கள் ரவிக்குமார், அபிஷன் ஜீவிந்த், கலை அரசன், சாம் ஆண்டன், டான் சாண்டி, ஸ்ரீ கணேஷ், ஆதிக் ரவிச்சந்திரன், பிஎஸ் மித்ரன், தமிழரசன் பச்சமுத்து, மடோன் அஷ்வின், ரத்தின சிவ விருமாண்டி, ’பேச்சுலர்’ சதீஷ், ராம்குமார் பாலகிருஷ்ணன், அஷ்வின் ராம், கார்த்திக், நித்திலன் சுவாமிநாதன் மற்றும் வினோத்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், தயாரிப்பாளர்களான ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன் சாகர், சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா, எஸ்.கே. புரொடக்ஷன் கலை, ஸ்டோன் பெஞ்ச் கார்த்திக் மற்றும் கல்யாண், தயாரிப்பாளர் கே.வி. துரை மற்றும் தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் தேவா, எடிட்டர் பிலோமின் ராஜ், ஆக்ஷன் கோரியோகிராஃபர் திலீப் சுப்பராயன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
’பலூன்’ திரைப்படம் இயக்கிய சினிஷ், தனது உதவி இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார். முன்னதாக ’டிக்கிலோனா’ படம் மூலம் கார்த்திக் யோகியையும், ’பார்க்கிங்’ படம் மூலம் ராமையும் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். அந்த வரிசையில் இப்போது சோல்ஜர்ஸ் பிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் விக்னேஷ் வேணுகோபாலை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார்.
'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் 'திரௌபதி 2' படத்தில் இருந்து திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷனா இந்துசூடனின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குநர் மோகன்.ஜி-யின் கதையில் மிகத்தீவிரமான, ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் இந்த கதாபாத்திரம் 'திரெளபதி' ஃபிரான்சைஸில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்.
நேதாஜி புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து சோழ சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் 'திரௌபதி 2' திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'திரௌபதி' திரைப்படத்தின் நீட்சியாக அதன் வரலாற்று உலகத்தை காட்ட இருக்கிறது. 14 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த திரைப்படம், ஹோய்சால பேரரசர் வீர வள்ளலார் III இன் இரத்தக்கறை படிந்த ஆட்சி, சேந்தமங்கலம் காடவராயர்களின் வீரம், எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டின் முகலாய படையெடுப்பால் உண்டான கொந்தளிப்பு ஆகியவற்றின் பின்னணியில் கதை விரிவடைகிறது. கடந்த காலத்தின் இந்த பிரமாண்டமான மறுகட்டமைப்பில், திரௌபதி தேவியின் முதல் பார்வை போஸ்டர் அறிமுகம், படத்தின் உணர்ச்சிகரமான தருணத்தை இரண்டாம் பாகத்துடன் வலுவாக இணைக்கும் புள்ளியாக மாறுகிறது.
முதல் பார்வை போஸ்டரில் நடிகை ரக்ஷனா இந்துசூடன் கலாச்சார ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்ணியத்துடனும் கம்பீரத்துடனும் காட்சியளிக்கிறார். அவரது கதாபாத்திரம் கதைக்களத்தின் வரலாற்று மற்றும் உணர்ச்சி தருணங்களை ஆழமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, படத்தின் கருவான பெண் சக்தியை பிரதிபலிக்கிறது.
ரிச்சர்ட் ரிஷி மற்றும் ரக்ஷனா இந்துசூடன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க இவர்களுடன் நடிகர் நட்டி நட்ராஜ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் இந்த வரலாற்றுக் கதையில் நடித்துள்ளனர்.
போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், படத்தின் வெளியீட்டை ஒட்டி அதன் புரோமோஷனல் பணிகள் நடைபெறும்.
வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ்ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார். ‘வீரசிம்ஹாரெட்டி’ மூலம் வசூல் சாதனைகளை புரட்டி போட்ட பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி கூட்டணி, இப்போது இன்னும் பிரம்மாண்டமான வரலாற்று களத்தில் மீண்டும் இணைகிறது.
இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.
அழகு நாயகி நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் ஜோடியாக இப்படத்தில் இணைந்துள்ளார். சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணா – நயன்தாரா இணையும் நான்காவது படம் இதுவாகும்.
ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் பூஜை விழாவினைத் தொடர்ந்து, இப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
ஆந்திர பிரதேச அமைச்சர்கள் அனகனி சத்ய பிரசாத் மற்றும் கோட்டிப்பட்டி ரவி குமார் திரைக்கதை நகலை தயாரிப்பாளர்களிடம் வழங்கினர். பாலகிருஷ்ணாவுடன் பல வெற்றி படங்களை இணைந்து வழங்கிய இயக்குநர் B. கோபால் க்ளாப் அடிக்க, பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வினி கேமராவை ஸ்விட்ச் ஆன் செய்தார். முதல் ஷாட்டை போயபாடி ஶ்ரீனு, பாபி, புச்சி பாபு ஆகியோர் இணைந்து இயக்கினர். பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.
மகத்தான மன்னனின் எழுச்சியை போர்க்களமே வணங்கும் தருணம் இது. வரலாற்றை குலுக்கும் இந்த கர்ஜனை புதிய அத்தியாயத்தை எழுத வருகிறது.
மாஸ் எலிவேஷன் மற்றும் அதிரடி கதைக் கட்டமைப்பில் பிரசித்தமான கோபிசந்த் மலினேனி, முதல் முறையாக வரலாற்று படத்தில் களம் இறங்குகிறார். நந்தமூரி பாலகிருஷ்ணாவை ரசிகர்கள் இதுவரை காணாத ஒரு புதிய, ஆச்சரியமான அவதாரத்தில் காட்சிப்படுத்தும் விதமாக, இந்தக் கதை உருவாகிறது.
சிறப்பு போஸ்டரில், நீண்ட முடி, பூரண தாடி, வாள் மற்றும் நங்கூரத்தைத் தாங்கி, அரச கம்பீரத்துடன் நிற்கும் அதிபதியாக பாலகிருஷ்ணா மிளிருகிறார்.
வரலாற்று பின்னணியில் எமோசனும் ஆக்சனும் கலந்து, பிரம்மாண்ட காட்சிகளுடன் ஒரு எபிக் அனுபவத்தை, வழங்கப் போகிறது இந்த படம்.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் (Puri Connects), JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!
பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தனது இறுதி நாள் படப்பிடிப்பை எட்டிய நிலையில், பூரி ஜெகன்னாத் – விஜய் சேதுபதி – சார்மி கௌர் ஆகியோர் பகிர்ந்த, மகிழ்ச்சியும், உணர்ச்சியும் நிறைந்த வீடியோவை வெளியிட்டு, இந்த சிறப்பு தருணத்தை படக்குழு கொண்டாடியுள்ளனர்.
வீடியோவில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் உடனும் படக்குழுவுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் எந்த அளவு நினைவில் நிற்கக்கூடியது என்பதையும், அவர்களை நிறைய மிஸ் செய்யப் போவதாகவும் கூறினார். பூரி மற்றும் சார்மி ஆகியோரும் இதே போல தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். விஜய் சேதுபதி, நகைச்சுவையாக பூரியின் ஜாக்கெட்டை பாராட்டியதும் வீடியோவின் ஹைலைட்களில் ஒன்றாக இருந்தது.
இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB Motion Pictures நிறுவனத்தின் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரிக்கிறார். படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களில் அதிரடியான இசையமைப்பால் கவனம் பெற்ற தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், படக்குழு புரமோஷன் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டைட்டில் அறிமுகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்!
Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில், நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்பட வெளியீட்டை ஒட்டி, படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
நடிகர், ரேடியோ ஜாக்கி, பிளேடு சங்கர் பேசியதாவது..,
இது நமது படம், என் நண்பன் படம், கீர்த்தி மேடம் என் நெருங்கிய தோழி. இப்படத்தில் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். கோவிடின் போது சந்துரு உடன் பேசும்போது, ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் செய் என்று ஆரம்பித்தது தான் இந்தப்படம். தமிழ்படம், ரோமியோ ஜூலியட் மாநாடு, கோட், என பல படங்களில் அவர் எழுத்து இருக்கிறது, அதைப் பற்றிச் சொல்லிக்கொள்ளவே மாட்டார். அத்தனை தன்னடக்கம். அவர் நிறைய யோசிப்பார். நாம் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார், ஆனால் அவருக்கு தேவையானதைச் சரியாக எடுத்துக்கொள்வார். இப்படத்தில் நான் கீர்த்தி சுரேஷின் அக்கா கணவராக நடித்துள்ளேன். அவர் சாதாரணமாக இந்த ஸ்டேஜுக்கு வரவில்லை. ஒரு காட்சிக்கு இப்படி பண்ணலாமா ?, அப்படி பண்ணலாமா?, என உழைத்துக்கொண்டே இருப்பார். ராதிகா மேடமிடம் ஒரு காட்சியில் செம்மையாக அடி வாங்கியிருக்கிறேன். இது ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய படம். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
நடிகர் அகஸ்டின் பேசியதாவது..,
மேடையில் இருப்பது இது தான் முதல் முறை. The Route நிறுவனத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. இந்தப்படம் செம்ம ஜாலியாக எடுத்தார்கள், நானும் செண்ட்ராயன் அண்ணாவும் நடிக்கும் போது, டைரக்டர் பயங்கர டென்ஷனாக இருப்பார். ஆனால் போகப் போக ஈஸியாகிவிட்டார். கீர்த்தி மேடம் எல்லோரையும் சரிசமமாகப் பார்ப்பார், அது எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லோரும் சேர்ந்து உழைத்து ஒரு நல்ல படத்தைத் தந்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் சஞ்சீவ் பேசியதாவது..,
எல்லோருக்கும் நன்றி. இந்தப்படத்தில் டேனி என ஒரு சுவாரஸ்யமான கதாப்பாத்திரம் செய்துள்ளேன். கீர்த்தி சுரேஷ் ரொம்ப ஜாலியாக எங்களுடன் வேலை பார்த்தார். இப்படம் The Route நிறுவனத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரம் இருவருக்கும் நல்ல வெற்றியைத் தரும். அனைவருக்கும் நன்றி.
நடிகர் கதிரவன் பேசியதாவது..,
இந்த படத்தின் ஒன் லைனை சந்துரு சார் சொன்ன போதே, இந்தக்கதை எப்படிச் செய்தாலும் வெற்றி பெறும் எனச் சொன்னேன். அவருடன் நான் நிறைய வேலைபார்த்துள்ளேன். இப்படத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரம், கீர்த்தி மேடம், சந்துரு அனைவருக்கும் நன்றி. நான் என் திரை வாழ்க்கையில் நிறைய பேரைப் பார்த்துள்ளேன், ஆனால் கீர்த்தி மேடம் நிறைய ஸ்பேஸ் தந்தார். இந்தப்படம் ஒரு ரோலர்கோஸ்டர் ரைட் மாதிரி இருக்கும். அனைவருக்கும் நன்றி.
நடிகை அக்ஷிதா அஜித் பேசியதாவது..,
ரிவால்வர் ரீட்டா என் திரைவாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்ஸ்டோன். இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர்கள் ஜகதீஷ் பழனிச்சாமி, சுதன் சுந்தரம், இயக்குநர் சந்துரு சார் அனைவருக்கும் நன்றி. கீர்த்தி மேடம் மிகவும் ஃபர்ண்ட்லியாக, இயல்பாக பழகினார். என்னுடன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் செண்ட்ராயன் பேசியதாவது..,
ரிவால்வர் ரீட்டா ஒரு பிரம்மாண்டமான படம், மிக அழகாகப் படத்தை இயக்குநர் எடுத்துள்ளார். நவம்பர் 28 ஆம் தேதி படம் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள். படத்தில் அனைவரும் கடினமான உழைப்பைத் தந்தார்கள். கீர்த்தி மேடம் மிக இயல்பாக பழகினார். இந்தப்படத்தில் சூப்பராக கார் ஓட்டியுள்ளார். அந்த காட்சிகள் சூப்பராக வந்துள்ளது. எனக்கு தா குமார் என ஒரு கதாப்பாத்திரம், படம் சூப்பராக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும். எனக்கு நல்ல ரோல் தந்த இயக்குநருக்கு நன்றி.
இயக்குநர் JK சந்துரு பேசியதாவது..,
The Route ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. ஒரு ஹீரோயின் சப்ஜெக்டை நம்பி, பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்கள். கீர்த்தி மேடமுக்கு நன்றி. கதையில் கீர்த்தி மேடம் அளவுக்கு ராதிகா மேடம் மற்றும் பல கேரக்டருக்கு சமமான ரோல் இருந்தது, ஆனால் அவர் எனக்குக் கதை பிடித்துள்ளது எனச் சொன்னார் அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் தினேஷ் திரையில் மேஜிக் செய்துள்ளார். ஷான் ரோல்டன் அவருடைய பெஸ்ட் தந்துள்ளார். திலீப் சுப்பராயன் மாஸ்டர் என் நீண்ட கால நண்பர் சூப்பராக செய்துள்ளார். எடிட்டர் பிரவீன் சார் அவர்களின் எடிட்டிங் இந்த படத்தில் பேசப்படும். செய்து தந்தார். கீர்த்தி மேடம் படத்திற்காக அவ்வளவு பெரும் ஒத்துழைப்பு தந்தார், அவருக்கு நன்றி. ராதிகா மேடம் அம்மாவாக நடித்துள்ளார். அவருடைய ரோல் சூப்பராக இருக்கும். சுனில் சார், அஜய் கோஷ் சார் நல்ல ரோல் செய்துள்ளார்கள். இப்படத்தில் நிறைய கேரக்டர்கள் எல்லோருமே நன்றாக நடித்துள்ளனர். இது ஒரு நல்ல ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்தோடு ஜாலியாக பார்க்கலாம். அனைவருக்கும் நன்றி.
நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது..,
ரிவால்வர் ரீட்டா. இயக்குநர் சந்துரு வெங்கட் பிரபு சார் கூட நிறைய வேலை பார்த்துள்ளார். அவர் முதல் நாள் கதை சொன்னபோதே பயங்கரமாகச் சிரித்து மகிழ்ந்தேன். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் ரீட்டாவாக என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. The Route நிறுவனத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. அவர்கள் தான் இந்த புராஜக்டை டிசைன் செய்தார்கள். ஒளிப்பதிவாளர் தினேஷ் உடன் முன்பே வேலை பார்த்துள்ளேன், அவர் இப்படத்தை அழகாக ஷீட் செய்துள்ளார். ஷான் நல்ல இசை தந்துள்ளார், அவருடன் மீண்டும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கலை இயக்குநர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி. ராதிகா மேடமுடன் முதல்முறையாக நடிக்கிறேன், அவர் தயாரிப்பில் தான் நான் தமிழில் அறிமுகமானேன் , அவருடன் நடித்த காட்சிகளை எல்லோரும் ரசிப்பீர்கள். என் உடன் நடித்த மற்ற அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். கதிர் சார், செண்ட்ராயன் சார், அகஸ்டின் சார் காட்சிகள் சூப்பராக இருக்கும். ரிவால்வர் ரீட்டா ஒரு டார்க் காமெடி படம், எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள் நவம்பர் 28 திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசியுங்கள் நன்றி.
சென்னை 28, மாநாடு, பார்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் சந்துரு “நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இதுவாகும். இப்படம் The Route நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும் அனைத்து ரசிகர்களையும் கவரும் வித்தியாசமான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன்,
அகஸ்டின், பிளேடு சங்கர், ராமச்சந்திரன் அக்ஷதா அஜித், குஹாசினி, காயத்ரி ஷான் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கோவா திரைப்பட விழாவில் பாராட்டுப்பெற்ற ஆநிரை குறும்படம்!
இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா பிரிவில் அதிகாரபூர்வமாக (Official) தேர்வுசெய்யப்பட்டு முதல் நாள் திரையிடலாக இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ஆநிரை குறும்படம் கோவாவில் அரங்கம் நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது.
முன்னதாக இ.வி.கணேஷ்பாபுக்குசிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுபற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது.
ஒவ்வொரு சினிமா கலைஞனும் வாழ்வில் ஒருமுறையாவது. இந்திய சர்வதேச திரைப்பட விழா.கோவாவில் பங்கேற்க வேண்டும்.
அரிதான பல படைப்புகளும், தரவுகளும், சர்வதேச சினிமா வியாபாரத்துக்கான வாய்ப்புகளும், பொக்கிஷங்களாக கொட்டிக்கிடக்கிறது இங்கே. அப்படிப்பட்ட இடத்தில் எனது படம் தேர்வு செய்யப்பட்ட இந்த தருணம் என் வாழ்வில் அற்புதமான தருணம்.
இரவு பகலாக உழைத்த எனது பட்குழுவுக்கு நன்றி.
ஹிந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான அனுபம் கேர் அவர்கள் முதல் வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்து, படத்தின் பலகாட்சிகளிலும் கைதட்டி உற்சாகப்படுத்தினார்.
இந்திய சினிமாவின் ஆன்மாவை ஆநிரை குறும்படம் பிரதிபலிக்கிது. பணம்தான் பெரிது என்று நினைக்கும் இந்த உலகில் அன்புதான் பெரிது என்று இப்படம் காட்டுகிறது என்றும் பாராட்டினார்.
இந்தப் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ச்சுனன் ,தனது பசுமாட்டின் தோலில் செய்யப்பட்ட இசைக்கருவியைக் கண்டு,அதை தனது மாடாகவே கருதி,கதறி அழும் காட்சி தன்னை நிலைதடுமாற வைத்துவிட்டது என்றும், இனி அப்படிப்பட்ட இசைக்கருவியை தன்னால் வாசிக்க முடியுமா என்று தேரியவில்லை என்றும்,
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைபாளர் மரகதமணி அவர்கள் ஆநிரை பார்த்துவிட்டு என் கதையை பாராட்டியுள்ளார்.
மேலும் வெளிநாட்டு திரைக்கலைஞர்களின் பாராட்டுக்கள் என் திரைப்பயனத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது இவ்வாறு இ.வி. கணேஷ்பாபு கூறினார்
'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!
யுகே ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மியூசிக்கல் எண்டர்டெயினர் 'டெக்சாஸ் டைகர்' – சென்னையின் வண்ணமயமான பின்னணியில் பிரமாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.
யுகே ஸ்குவாட் பேனரின் கீழ், 'ஃபேமிலி படம்' புகழ் இயக்குநர் எழுதி, இயக்கி வரும் திரைப்படம் 'டெக்சாஸ் டைகர்'. இளமை துள்ளலாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ஹிருது ஹாரூன் ('ட்யூட்', ’தக்ஸ்’, ‘பேட் கேர்ள்’, 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்', 'முரா' ஆகிய திரைப்படங்கள் புகழ்) மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் (Mr. பாரத், ஐ அம் தி கேம்) ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் ரோகிணி மொல்லேட்டி, சாச்சனா, வாஃபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், ஆண்டனி தாசன் மற்றும் சம்யுக்தா ஷான் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.
படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானதும் இணையத்தில் டிரெண்டாகி ரசிகர்கள் பாராட்டுகளைப் பெற்றது. சென்னையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்
IDAA Productions மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, இளம் நட்சத்திர நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “தாஷமக்கான்”.
மாபெரும் வெற்றி பெற்ற லிஃப்ட் படம் மூலம் இயக்குநர் வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதி கட்ட post production பணிகள் நடந்து வருகிறது, இப்படத்தின் டைட்டில் புரமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை, பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தும் விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் படத்தின் டைட்டில் புரமோ வீடியோ, பத்திரிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமாக, திரையிடப்பட்டது. பின்னர் படக்குழுவினர் படம் குறித்த தகவல்களைப் பத்திரிக்கை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்..,
நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது..,
முதல் முறை நான் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிமுகத்திற்கு இப்படி ஒரு விழா. தாஷமக்கான் குழுவிற்கு என் நன்றி. தாஷமக்கான் பற்றி நாம் கேள்விப்பற்றிருபோம், தமிழ்நாட்டிற்கு கறி சப்ளை செய்யும் இடம் தான் தாஷமக்கான். நான் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளேன். தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது. பலர் இதற்கு முன் ராப் இசையில் கலக்கியுள்ளனர். இண்டி மியூசிக்கிலும் பலர் கலக்கி வருகின்றனர். எனக்கு அவர்கள் எல்லோரும் தான் இன்ஸ்பிரேஷன். என்னுடன் நடித்த ராப்பர்ஸ் அனைவருக்கும் நன்றி. இந்த மாதிரி திறமையாளர்களை அடையாளப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. இசை இந்தப்படத்தில் மிக முக்கியம். பிரிட்டோ கலக்கியுள்ளார். ராப், பேட்டில் இசை, ரொமான்ஸ் என பல ஜானரில் பாடல்கள் உள்ளது. சூப்பராக இசையமைத்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு நான் செட்டாவேனா எனச் சந்தேகம் இருந்தது. இயக்குநர் எல்லோருமே தயங்கினார்கள் என்றார், அப்போதே நாம் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். எல்லோருமே பெரும் உழைப்பைத் தந்துள்ளனர். மதன் லப்பர் பந்துவிற்கு பிறகு என்னுடன் மீண்டும் இணைந்துள்ளார். அவருக்கு நன்றி. அமீர் நடிகராக வந்து, ஒரு பாடல் கொரியோகிராஃபும் செய்துள்ளார். அவருக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். ஸ்டண்ட் மிகச்சிறப்பாக செய்து தந்த ஓம் பிரகாஷ் மாஸ்டர், தினேஷ் சுப்பராயன் மாஸ்டர் இருவருக்கும் நன்றி. சுனில் சார், சத்யராஜ் சார் இருவரும் முக்கியமான ரோல் செய்துள்ளனர். இருவருக்கும் நன்றி. ஃப்ரீத்தி நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவம் தரும். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேருங்கள் நன்றி.
இயக்குநர் வினீத் வரபிரசாத் பேசியதாவது..,
டைட்டில் புரமோவிற்கு பலரை அழைக்கத் திட்டமிட்டோம் இறுதியாகப் பத்திரிக்கை நண்பர்கள் முன்பு அறிமுகம் செய்யலாம் என முடிவு செய்த போதே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. முதல் படத்தில் எனக்கு இந்த மேடை கிடைக்கவில்லை, ஏன் என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு, நமக்கான மேடையை நாமே உருவாக்கலாம் என ஆரம்பித்தது தான் இந்தப்படம். இந்தப்படத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். 8 க்கும் மேற்பட்ட ராப் கலைஞர்கள் அடையாளப்பட்டுள்ளார்கள். ஹரீஷ் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளார். அவர் ஒத்துக்கொண்டதே எனக்கு ஆச்சரியம் தான். நிறைய பேர் தயங்கிய ரோல் இது. அவர் வந்ததே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இசை சம்பந்தமான படம், நிறைய விவாதித்து, அலைந்து தேடி, இப்படத்தில் ராப் இசையைக் கொண்டுவந்துள்ளோம். எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இப்படத்தில் கொண்டுவந்துள்ளோம். இப்படத்தில் உழைத்த அனைத்து உதவியாளர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. அமீர் அவர் நடித்த ரோலுக்கு முதலில் வேறு வேறு நபர்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தார், நம்ம படத்திற்கு இவர் வேலை பார்க்கிறாரே எனக் கடைசியில் அவரையே நடிக்க வைத்துவிட்டோம். அவர் மிகச்சிறந்த கலைஞர். அவருக்கு இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும். இந்தப்படம் எல்லோருக்கும் பெரிய வெற்றியைத் தரட்டும் நன்றி.
நடிகை மேகா ராஜன் பேசியதாவது..,
எனக்கு இந்தப்படத்தில் அற்புதமான ரோல் தந்த இயக்குநர் வினீத்திற்கு நன்றி. டைரக்சன் டீம், கேமரா டீம், ஆர்ட் டீம் என எல்லோரும் மிகக் கச்சிதமாக இணைந்து வேலை செய்தார்கள். சத்யராஜ் சாருடனும், சுனில் சாருடனும் நடித்தது மகிழ்ச்சி. ஹரீஷ் உடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.
ஸ்டண்ட் இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது..,
தாஷமக்கான் வட சென்னையின் மைய பகுதியாக இருக்கும் ஒரு ஏரிவை இயக்குநர் அந்த இடத்தை பலமுறை சுற்றிக்காட்டினார், க்ளைமாக்ஸ் ஃபைடில் 1000 பேர் கலந்துகொள்ளும் ஒரு ஃபைட், அதை சிங்கிள் ஷாட்டில் எடுத்தோம். சிங்கிள் ஷாட் எடுக்கும் போது நிறைய ஒத்துழைப்பு தந்து அசத்தினார் ஹரீஷ். சிங்கிள் ஷாட் அவ்வளவு பெரிய ஃபைட் சீன் எடுக்கக் காரணம் இயக்குநர் வினீத் தான். அவர் ஒரு மினி ராஜமௌலி மாதிரி தான். படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநருக்கு நன்றி.
எடிட்டர் மதன் பேசியதாவது..,
2019 வரை வெறும் டிரெய்லர்கள் தான் செய்து கொண்டிருந்தேன். நண்பர் ரஞ்சித் மூலம் வினீத் அறிமுகமானார். அவரை சந்தித்த 10 நிமிடத்தில் லிஃப்ட் பட வாய்ப்பை தந்தார். அவர் தந்த வாய்ப்பு தான் தமிழ் சினிமாவில் எனக்கு வாழ்க்கை தந்தது. இப்படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. மிகக்கடினமாக உழைத்துள்ளார். ஹரீஷ் உடன் லப்பர் பந்து படத்திற்குப் பிறகு இணைந்துள்ளேன். இப்படத்திற்காக முழுதாக உடலை மாற்றியுள்ளார். இந்தப்படம் அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கும். ஹீரோயினும் நன்றாகச் செய்துள்ளார். எல்லோருமே மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள். என்னை நம்பியதற்கு வினீத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை பேசியதாவது..,
நண்பர்கள் மூலம் தான் இந்தப்பட வாய்ப்பு கிடைத்தது. படத்திற்குள் நிறைய செட் போட்டுள்ளோம். ஹரீஷ் பயங்கரமாக உழைத்துள்ளார். எல்லோருமே நன்றாக செய்துள்ளார்கள், படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
உடை வடிவமைப்பாளர் ரிதேஷ் செல்வராஜ் பேசியதாவது..,
இயக்குநரைச் சந்தித்தேன். இயக்குநர் எனக்கு வாய்ப்பு தர மாட்டார் எனத்தான் நினைத்தேன். என்னை நம்பி வாய்ப்பு தந்ததற்கு நன்றி. என்னால் முடிந்த அளவு உழைத்துள்ளேன். ஹரீஷ் சாரை இதுவரை பார்த்த மாதுரி இருக்கக் கூடாது என காஸ்ட்யூம் செய்துள்ளோம். உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.
இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் பேசியதாவது..,
என்னை நம்பிய இயக்குநர் வினீத்திற்கு நன்றி. ஹரீஷ் கல்யாணுக்கு நன்றி. ஹரீஷ் வந்தபிறகு தான் இந்தப்படம் மாறியது. அண்ணாநகரில் இளைஞர்கள் ராப் செய்துகொண்டிருந்ததை வீடியோ எடுத்து வந்து இது போல செய்யலாம் என்றார். அந்த ராப் கலைஞர்களுடன் வேலை பார்த்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. அமீர் இப்படத்தில் சிறப்பாகச் செய்துள்ளார். எல்லா காட்சியிலும் நிறையக் கூட்டம் இருக்கும். இவ்வளவு பேரை வைத்து எடுப்பது எவ்வளவு கஷ்டம் எனத் தோன்றும். படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.
நடன இயக்குநர் அமீர் பேசியதாவது..,
இயக்குநர் வினீத் அனைவருக்கும் நன்றி. என் பயணம் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த புராஜக்ட் கிடைக்க முக்கிய காரணமாக இருந்த உதய் அவர்களுக்கு நன்றி. இந்தப்படத்தில் வேறொருவரை அறிமுகம் செய்யத் தான் இயக்குநரைச் சந்தித்தேன், அவர் என்னை நம்பி வாய்ப்பு தந்தார். அவர் கொடுத்த பவுண்ட் படித்த பிறகு, இதைவிட ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்காது எனத் தோன்றியது. எனக்கு கோரியோகிராஃபர் ஆக ஆசை, ராஜுசுந்தரம் மாஸ்டர் பாபா பாஸ்கர் மாஸ்டர் பெயருக்கு அடுத்து, அமீர் என்ற பெயர் இருப்பது எனக்குப் பெருமை. ஹரீஷ் கல்யாண் சாருடன் நடித்துள்ளேன், நடன இயக்கமும் செய்துள்ளேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இப்படத்தில் இளைஞர்களுக்குப் பிடித்த ஒரு பாடலை செய்துள்ளேன். எனக்குத் தந்த ஒத்துழைப்புக்கு நன்றி. இந்தப்படத்தில் நீங்கள் எதிர்பாராதது நிறைய இருக்கும். இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும். இந்தப்படம் அனைவருக்கும் வெற்றிப்படமாக இருக்க வேண்டும் நன்றி.
தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்
இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பிரபல பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மணை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
மூத்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய ஆட்சி மன்றக் குழுவில் இடம் பெற்றுள்ளது குறித்து மாலதி லக்ஷ்மண் மகிழ்ச்சியும் பெருமிதமும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்த மாலதி லக்ஷ்மண், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக தன்னை நியமித்ததற்காக நன்றி தெரிவித்து முதல்வரின் வாழ்த்துகளை பெற்றார்.
நியமனம் குறித்து பேசிய அவர், "அரசு அளித்துள்ள இந்த மிகப்பெரிய அங்கீகாரம் மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இசைத் துறைக்கு வலுவூட்ட என்னால் ஆன அனைத்து பங்களிப்பையும் வழங்கி, அனைவரின் ஒத்துழைப்போடு இசை மற்றும் இதர கலைகளை கற்கும் மாணவர்களை ஊக்குவிப்பேன்," என்று தெரிவித்தார்.
திரைப்பட பின்னணி மற்றும் மேடைப் பாடகியான மாலதி லக்ஷ்மண், பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளதோடு, தன்னுடைய கணவர் லக்ஷ்மண் கடந்த நான்கு தசாப்தங்களாக வெற்றிகரமாக நடத்தி வரும் லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவில் முக்கிய அங்கமாக திகழ்கிறார்
- உலக செய்திகள்
- |
- சினிமா













