சற்று முன்

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் ரைட்டர்   |    ‘தமிழ் ராக்கர்ஸ்’ தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் - எச்சரிக்கை விடுத்த ஜாக்குவார் தங்கம்   |    திரையுலகினர் பாராட்டு பெற்ற 'முதலும் முடிவும்' காதல் மொழி பேசும் சுதந்திர இசை ஆல்பம்   |    ஹிப் ஹாப் ஆதியின் “தீ வீரன்” ஆவணப்படம் இணையத்தில் வைரல்!   |    ராட்சச குரங்கு நடிக்கும் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்!   |    ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் படம்!   |    நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது   |    சிவகார்த்திகேயன் பாடிய 'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது   |    மூன்று நண்பர்களை காதலிக்கும் மேக்னா 'நான் வேற மாதிரி'   |    கௌதம் கார்த்திக் நடிக்கும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' தீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில்   |    சிலம்பரசன் ‘மாநாடு’ படப்பிடிப்பில் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி   |    நான் பேபி நயன்தாரா இல்லை, இனிமேல் மிஸ் நயன்தாரா சக்ரவர்த்தி - ரஜினி பட குழந்தை நட்சத்திரம்   |    பெண்கள் வாழ்வின் பெரும்பகுதியை சமையலறை ஆக்கிரமித்துள்ளது - இயக்குநர் R.கண்ணன்   |    பிரபல நடிகையுடன் ரொமான்ஸ் செய்யப்போகும் குக் வித் கோமாளி அஸ்வின்!   |    அதர்வா முரளி நடிக்கும் பிரமோத் பிலிம்ஸ்-ன் 25 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது!   |    விக்ரம் பிரபு வித்தயாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'பகையே காத்திரு'   |    சசிகுமாருக்கு சமுத்திரக்கனி தாய்மாமனா!   |    அல்லு சிரிஷினை பாராட்டிய அண்ணன் அல்லு அர்ஜூன்   |    அருண் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு வெளியிட்ட நேதாஜி மோஷன் டீஸர் !   |   

சினிமா செய்திகள்

அல்லு சிரிஷினை பாராட்டிய அண்ணன் அல்லு அர்ஜூன்
Updated on : 16 April 2021

அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் 'விலாத்தி ஷராப்' (Vilayati Sharaab) யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜூனின் இளைய சகோதரர் அல்லு சிரிஷ். இவர் அண்மையில் முதன்முறையாக இந்தி மொழியில் சிங்கிள் ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்ட்டார். 'விலாத்தி ஷராப்' (Vilayati Sharaab) என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடல், குறுகிய காலத்தில் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், அல்லு சிரிஷின் இந்தப் பாடலை வைத்து இளைஞர்கள் பலரும் நடனமாடி டேன்ஸ் கவர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தனது சகோதரர் சிரிஷை சமூக வலைதளத்தில் வெகுவாகப் பாராட்டியுள்ளார் நடிகர் அல்லு அர்ஜூன். அதில் அவர்,  யூடிபில் 100 மில்லியன் பார்வைகளைத் தொட்டதற்கு மிகப்பெரிய வாழ்த்துகள். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசை ரசிகர்கள் அனைவருக்குமே நன்றி. இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களின் அன்பை ' விலாத்தி ஷராப்'  பாடலில் பொழிந்து அதனை மாபெரும் வெற்றியாக்கியுள்ளீர்கள். 100 மில்லியன் பார்வைகளைக் கடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. தர்ஷன் ராவல், நீதி மோகன், ஹெலி தருவாலா மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள், எனக் கூறியுள்ளார். ஏபிசிடி, ஸ்ரீரஸ்து சுபமஸ்து, ஒக்கஷனம் ஆகிய படங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நடனக் காட்சிகளைக் கொடுத்த அல்லு சிரிஷ், தமிழில் கவுரவம், மலையாளத்தில் 1971: பியாண்ட் பார்டர்ஸ் ஆகிய படங்களில் தனது பிம்பத்தை நிலைநாட்டினார். இப்போது இண்டி மியூசிக் லேபிளின் தயாரிப்பில் 'விலாத்தி ஷராப்' (Vilayati Sharaab) என்ற குத்தாட்டப் பாடலைக் கொடுத்து அதை இமாலய வெற்றியாக்கி பெரும் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்துள்ளார். இந்தப் பாடல்தான் இப்போது பாலிவுட் டேன்ஸ் பாடல்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா