சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரஜினி, கமல் மோதலா! - காரணம்
Updated on : 10 April 2021

ஒரு காலத்தில் ரஜினி, கமல் நடித்த படங்கள் தீபாவளி அன்று வெளியானால் இருவரின் ரசிகர்களுக்குமே அது டபுள் தீபாவளியாக இருக்கும். கமல்ஹாசன் நடித்த கல்யாண ராமன் படம் வெளியான தீபாவளி அன்று தான் ரஜினி நடித்த ஆறிலிருந்து 60 வரை படம் வெளியானது. ரஜினி நடித்த மனிதன் படம் தீபாவளி ரிலீஸாக வெளியானது. அதே நாளில் கமல்ஹாசனின் நாயகன் படமும் வெளியானது. கடைசியாக ரஜினி நடித்த சந்திரமுகி மற்றும் கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது.



 



இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி, கமல் படங்கள் மோதும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இந்த படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



 



மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனாலும் ஊரடங்கு காலத்திலேயே படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தையுமே முடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.



 



படத்தின் டீசர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது. மே 3ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கி, 100 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தையும் தீபாவளிக்கு வெளியிடலாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.



 



இதனால் தீபாவளிக்கு அண்ணாத்த மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் மோதும் சூழல் உருவாகியுள்ளது. ரஜினி - கமல் ஆகியோரது படங்கள் ஒரே நாளில் வெளியானால் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். என்று தெரிகிறது. என்றாலும் இது நடப்பது கொரோனாவின் கையில்தான் இருக்கிறது.



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா