சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

தன்னுடைய திருமணம் பற்றி அதிரடி தகவல் தந்த சுனைனா!
Updated on : 10 April 2021

திருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் பிரபல திரைப்பட நடிகை சுனைனா கூறியுள்ளார். திரைப்பட வாய்ப்புகள் தன்னைத் தேடி வந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



 





காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து நீர் பறவை, வம்சம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், நடிப்பு திறன் மிக்கவர் என்று பெயர் பெற்றார்.



 





இதனிடையே கடந்த ஆண்டு பொது முடக்கத்திற்கு  முன் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் அவர் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என இரு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார்.



 





பொது முடக்கத்திற்கு பிறகு திரில்லர் வகையைச் சேர்ந்த டிரிப் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர், ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழில் பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க பேச்சு நடத்தி வருகிறார். 



 





” கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சில இயக்குனர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது” என்கிறார் சுனைனா.



 





தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து வெளியாகும் செய்திகளை மறுத்துவர் இவை அனைத்தும் வந்ததிகளே என்றும்  திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். திரை வாழ்க்கையில் கவனம் செலுத்துவதாக கூறிய சுனைனா, தனது திருமணம் பற்றி பேசுவதை விட்டுவிட்டு தனது திரைப்படங்கள் பேச வேண்டும் என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா