சற்று முன்

கபிலன் வைரமுத்து எழுதியுள்ள ‘நித்திலன் வாக்குமூலம்’ நாவல் இன்று வெளியானது!   |    ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'   |    'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    துபாயில் புதிய பாந்தர் கிளப் திறந்து வைத்த கிங் கான் ஷாருக்கான்!   |    பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் 'வித் லவ்'!   |    நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!   |    ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ஜனவரி 23 அன்று திரைக்கு வரும் 'மாயபிம்பம்'!   |    ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகும் தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை நிகழ்வு!   |    இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகிறார்!   |    ஆக்சன்-திரில்லர் திரைப்படம் ‘மாஸ்க்’ ஜனவரி 9, 2026 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!   |    ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது   |    நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான் - இயக்குநர் நாராயணன்   |    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |   

சினிமா செய்திகள்

பிரபுதேவாவை 'பஹீரா'வுக்காக 10 மாறுபட்ட தோற்றங்களில் வடிவமைத்த ஜாவி தாகூர்!
Updated on : 07 April 2021

அசத்தல் லுக்கில், பிரபுதேவாவை வடிவமைக்கும் ஜாவி தாகூர் !

ஒவ்வொரு முறை பிரபுதேவா திரையில் தோன்றும் போதும், அது சினிமாவாக இருந்தாலும், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் அல்லது விளம்பரமாக இருந்தாலும் ரசிகர்களை வசீகரிக்கும் மேஜிக் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அவரது ஸ்டைல், உடை, தோற்றம் அனைத்தும் நவீனத்தின் முன்னெடுப்பாக, அட்டகாச ஸ்டைலில், அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அவரது ஸ்டைலிஸ்ட் ஜாவி தாகூர் தான். முன்னணி ஸ்டைலிஸ்ட் மற்றும் டிசைனராக மும்பையில் பணியாற்றி வரும் ஜாவி தாகூர் தான், கடந்த ஏழு வருடங்களாக  பிரபுதேவாவின் ஸ்டைலிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறார். பிரபுதேவாவின் தோற்றத்தை முழுதுமாய் மாற்றியமைத்து, நவீன பாணி ஸ்டைலில் அவரை வடிவமைத்து, அனைவரையும் கவர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான “பஹீரா” படத்தின் டீஸரில் பிரபுதேவாவை அவர் வடிவமைத்திருந்த விதம் பெரும் பாராட்டுக்களை குவித்துள்ளது. 



 



இது குறித்து ஜாவி தாகூர் தெரிவித்ததாவது...



 



நான் புதுமையாக பல விசயங்களை முயற்சித்து பார்க்க பெருந்தன்மையுடன் இடம் தந்த இயக்குநர் ஆதிக் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் பிரபுதேவா ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட, 10 விதமான தோற்றங்களில் தோன்றுகிறார். ஒவ்வொரு தோற்றமும் அதற்குரிய தனித்தனமையுடன் தெரியும்படி வடிவமைத்தோம். ஒவ்வொரு பாத்திரத்தின் தோற்றத்தை, வடிவமைத்தது மிக சவாலானாதாக இருந்தது. இறுதியாக இப்போது டீஸருக்கு குவிந்து வரும் பாராட்டுகள், பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பிரபுதேவாவுடன் பணியாற்றுவது எப்போதும் அலாதியான அனுபவம். சவாலான பணியாக இருந்தாலும் இனிமையான அனுபவமாக இப்படம் இருந்தது. 



 



“பஹீரா” தவிர்த்து  தேவி, யங் மங் சங், லக்‌ஷ்மி மற்றும் குலேபகாவலி படங்களிலும் பிரபுதேவாவிற்கு ஸ்டைலிஸ்ட்டாக பணிபுரிந்துள்ளார் ஜாவி தாகூர். 

அந்த அனுபவம் குறித்து கூறும்போது... 



 





ஒவ்வொரு படமும் அதனளவில் நிறைய சவால்களை கொண்டதாகவே இருந்தது. யங் மங் சங் படத்தில் பழைய காலத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞராக பிரபுதேவா நடித்துள்ளார். அப்படத்தில் அவரின் தோற்றத்தை வடிவமைக்கும் பொருட்டு நிறைய ஆராய்ச்சிகள் செய்தோம். குறிப்பிட்ட காலத்தில் சைனாவில் நிலவிய ஸ்டைலை அவருக்காக வடிவமைத்தோம். ஒவ்வொரு படமும் நிறைய கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது. பிரபுதேவா தவிர்த்து தமிழில் ஆர் ஜே பாலாஜி மற்றும் அஷ்வின் ஆகியோருக்கும் ஸ்டைலிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறேன். தமிழில் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன். 



 



பிரபுதேவா அவர்களுடன் நிகழ்ச்சிகளில் பணியாற்றுவது குறித்து கூறும்போது...



 



நிகழ்ச்சிகள் சினிமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. நிகழ்ச்சிகளை பொருத்தவரை நிகழ்ச்சியின் மையக்கருத்து மற்றும் பிரபலத்தின் சௌகர்யத்தை பொருத்து அதற்கேற்றவாறு, அவருக்கான தோற்றத்தை வடிவமைப்போம். நிகழ்ச்சியின் இயக்குநர் மற்றும் பிரபுதேவா அவர்களுடன் நிகழ்ச்சிக்கு முன்னதாக கண்டிப்பாக ஒரு கலந்துரையாடல் நிகழ்த்துவேன். அப்போது நாம் என்ன செய்ய போகிறோம் என்கிற தெளிவு வந்துவிடும்.  அதன் பிறகே அவரது ஸ்டைலை வடிவமைப்பேன்.  இறுதியாக எப்போதும் நாம் நேசிக்கும் பணியை விரும்பி செய்யும் போது அது முழு திருப்தியை தந்துவிடும்.



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா