சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி நடிகைக்கு ஹீரோவாக நடிக்கும் நடிகர் சதீஷ்
Updated on : 07 April 2021

ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’, விஜய் சேதுபதி நடித்த ‘கவன்’, தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிகில்’ உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து முத்திரை பதித்து வரும் கல்பாதி எஸ் அகோரம், கல்பாதி எஸ் கணேஷ் மற்றும் கல்பாதி எஸ் சுரேஷ், வித்தியாசமான மற்றும் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய புதிய படமொன்றை தயாரிக்கின்றனர்.



 



பல வெற்றிப்படங்களில் நடித்து வரும் சதீஷ், இப்படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.



 



 





 



 



பல குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களை இயக்கி விருதுகளை வென்றுள்ளவரும், யார்க்கர் ஃபிலிம்ஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவருமான கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் 21-வது படைப்பான இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அர்ச்சனா கல்பாதி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார்.



 



திரைப்படத்தை பற்றி கூறும் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார், “மிகவும் வித்தியாசமான இந்த படத்தின் கதை நகைச்சுவை ததும்ப விவரிக்கப்பட உள்ளது.  குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெரிய திரையில் கண்டு மகிழும் வகையிலான ஃபேண்டசி காமெடியாக இத்திரைப்படம் திகழும்,” என்கிறார்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா