சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

அண்ணாத்த படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய ‘கபாலி’ விஷ்வந்த்!
Updated on : 31 March 2021

எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் ‘கபாலி’ விஸ்வாந்த், தனது பிறந்தநாளை ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடியிருப்பது வைரலாகி வருகிறது.



 



‘வெளுத்து கட்டு’, ‘தோனி’, ’தடையற தாக்க’ என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த விஸ்வாந்த், ’அட்டகத்தி’ படம் மூலம் கவனிக்க வைத்ததோடு, ‘கபாலி’ படத்தில் தனது இயல்பான நடிப்பு மூலம் பாராட்டப்பட்டவர், தற்போது பல படங்களில் கதையின் நாயகனாகவும், வில்லன் உள்ளிட்ட பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.



 



’கபாலி’ படத்தை தொடர்ந்து ’அண்ணாத்த’ படம் மூலம் மீண்டும் ரஜினி படத்தில் நடித்து வரும் விஸ்வாந்த், பிறந்தநாளை ‘அண்ணாத்த’ படக்குழு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை விஸ்வாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.



 





 







மேலும், நடிகர்களை வைத்து வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி வரும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் என்.ஜே.சத்யா, நடிகர் விஸ்வாந்தை வைத்தும் வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை சத்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.



 





வித்தியாசமான உடையில், வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் விஸ்வாந்த் இருக்கும் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் போட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.



 



இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்து வரும் விஸ்வாந்த், சசிகுமார் நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பவர். ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பவர், ‘அங்காடி தெரு’ மகேஷ் நடிக்கும் படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.



 



கதையின் நாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், வில்லன், குணச்சித்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடியாக இருக்கும் விஸ்வாந்த், தனது எதார்த்தமான நடிப்பு மூலம் ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.



 



மேலும், அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருப்பவர், இயக்குநர் சிவா உள்ளிட்ட அண்ணாத்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்திருப்பதோடு, ரஜினி சார், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மேடம், பிரகாஷ்ராஜ் சார், சூரி சார், வேல ராமமூர்த்தி சார், ஆகியோருடன் நடிப்பது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம். 



 





இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு காரணமாக இருந்த இயக்குநர் சிவா சார் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா