சற்று முன்

அருண் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு வெளியிட்ட நேதாஜி மோஷன் டீஸர் !   |    எனது அடுத்த படத்தில் ஒரு கதாநாயகி இலக்கியா... நடிக்க எனக்கு ஒரு தயக்கம் இருந்தது!   |    மாணவர்களுக்காக இயக்குனர் வெற்றிமாறன் எடுத்துள்ள புதிய முயற்சி!   |    திருநங்கைகள் தினத்துக்காக திருமூர்த்தியின் உருக்கமான குரலில் உருவான பாடல்   |    'டிரைவர் ஜமுனா' பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!   |    OTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்   |    சாந்தி செளந்தரராஜனின் கதை பூஜையுடன் முதல் கட்ட படப்பிடிப்பு துவங்கியது   |    சூரி - ஆரி இணைந்து வெளியிடும் 'கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் வீடியோ!   |    குடும்பப்பாங்கான கதையை திரில்லர் ஜானருடன் கலந்து சொல்லுவதே 'ஒற்று'   |    தனுஷ் படத்திற்கு விஜய்சேதுபதி போட்ட ட்வீட்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்   |    பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரஜினி, கமல் மோதலா! - காரணம்   |    தன்னுடைய திருமணம் பற்றி அதிரடி தகவல் தந்த சுனைனா!   |    வீரப்பனின் மகள் விஜயலட்சுமி அறிமுகமாகும் 'மாவீரன் பிள்ளை'   |    ஏ ஆர் ரஹ்மான் 99 சாங்ஸ்-ஐ கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்கு அறிவித்துள்ள போட்டி   |    அஜித் மற்றும் கமலால் திருமணம் செய்ய பயப்படும் ஆண்கள் - இயக்குனரின் பகீர் குற்றச்சாட்டு   |    பிரபுதேவாவை 'பஹீரா'வுக்காக 10 மாறுபட்ட தோற்றங்களில் வடிவமைத்த ஜாவி தாகூர்!   |    குக் வித் கோமாளி நடிகைக்கு ஹீரோவாக நடிக்கும் நடிகர் சதீஷ்   |    3 வருடங்கள் பொறுமையாக இருந்து படத்தை திரையரங்கில் வெளியிட்ட தயாரிப்பாளருக்கு நன்றி - கார்த்தி   |    'பிக்பாஸ்' புகழ் சாக்சி அகர்வால் நடிக்கும் ‘தி நைட்’   |   

சினிமா செய்திகள்

ஏ ஆர் ரஹ்மானின் '99 சாங்ஸ்' மூலம் அறிமுகமாகும் எஹான் பட் மற்றும் எடில்சி வர்காஸ்
Updated on : 31 March 2021

ஆஸ்கார், கிராமி போன்ற உயரிய விருதுகளை வென்று பெருமை சேர்த்துள்ள இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், '99 சாங்ஸ்' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் அவதாரமெடுத்து புதிய எல்லைகளை தொட்டுள்ளார். இசையுடன் கூடிய காதல் கதையான இப்படத்தில், மிகவும் திறமை வாய்ந்த, திரையுலகின் அடுத்த பெரிய நட்சத்திரங்களாக உருவெடுக்க கூடிய எஹான் பட் மற்றும் எடில்சி வர்காஸ் ஆகிய நடிகர்களை அவர் அறிமுகம் செய்கிறார். எஹான் மற்றும் எடில்சியின் திறமை, திரை ஆளுமை மற்றும் ஈர்ப்பு ஆகியவை இந்த புதிய ஜோடியை திரையில் பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்களிடையே தூண்டியுள்ளது. ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும் இந்த காதல் கதையில், இசை தேடல் நிரம்பியவர்களாக இவர்கள் தோன்றுகின்றனர். இந்த இளம் நடிகர்களை குறித்து பேசும் ஏ ஆர் ரஹ்மான், "திறமை மிகுந்த எஹான் பட் மற்றும் எடில்சி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் திறமையோடும், ஆர்வத்தோடும் அவர்கள் திகழ்கின்றனர். அவர்களின் திரையுலகப் பயணம் வெற்றியடைய நான் வாழ்த்துகிறேன்," என்கிறார். '99 சாங்ஸ்' பற்றி மகிழ்ச்சியுடன் பேசும் எலான் பட், "இப்படத்தின் டிரைலர் மூலம் எடில்சிக்கும் எனக்கும் கிடைத்துள்ள வரவேற்பு என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. எங்களது திரைப்படத்திற்கும் அதன் இசைக்கும் கிடைத்துள்ள ஆதரவும், ஊக்கமும் இதயத்தை தொட்டுள்ளது. பாலிவுட்டில் எந்த பின்புலமும் இல்லாதவர்களுக்கு எளிதில் கிடைக்காத வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ள ரஹ்மானுக்கு மிக்க நன்றி," என்கிறார். 2021 ஏப்ரல் 16 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ‘99 சாங்ஸ்’ வெளியாகிறது. ஜியா ஸ்டூடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸ் ஐடியல் என்டெர்டைன்மென்டுடன் இணைந்து தயாரித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா