சற்று முன்

அருண் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு வெளியிட்ட நேதாஜி மோஷன் டீஸர் !   |    எனது அடுத்த படத்தில் ஒரு கதாநாயகி இலக்கியா... நடிக்க எனக்கு ஒரு தயக்கம் இருந்தது!   |    மாணவர்களுக்காக இயக்குனர் வெற்றிமாறன் எடுத்துள்ள புதிய முயற்சி!   |    திருநங்கைகள் தினத்துக்காக திருமூர்த்தியின் உருக்கமான குரலில் உருவான பாடல்   |    'டிரைவர் ஜமுனா' பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!   |    OTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்   |    சாந்தி செளந்தரராஜனின் கதை பூஜையுடன் முதல் கட்ட படப்பிடிப்பு துவங்கியது   |    சூரி - ஆரி இணைந்து வெளியிடும் 'கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் வீடியோ!   |    குடும்பப்பாங்கான கதையை திரில்லர் ஜானருடன் கலந்து சொல்லுவதே 'ஒற்று'   |    தனுஷ் படத்திற்கு விஜய்சேதுபதி போட்ட ட்வீட்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்   |    பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரஜினி, கமல் மோதலா! - காரணம்   |    தன்னுடைய திருமணம் பற்றி அதிரடி தகவல் தந்த சுனைனா!   |    வீரப்பனின் மகள் விஜயலட்சுமி அறிமுகமாகும் 'மாவீரன் பிள்ளை'   |    ஏ ஆர் ரஹ்மான் 99 சாங்ஸ்-ஐ கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்கு அறிவித்துள்ள போட்டி   |    அஜித் மற்றும் கமலால் திருமணம் செய்ய பயப்படும் ஆண்கள் - இயக்குனரின் பகீர் குற்றச்சாட்டு   |    பிரபுதேவாவை 'பஹீரா'வுக்காக 10 மாறுபட்ட தோற்றங்களில் வடிவமைத்த ஜாவி தாகூர்!   |    குக் வித் கோமாளி நடிகைக்கு ஹீரோவாக நடிக்கும் நடிகர் சதீஷ்   |    3 வருடங்கள் பொறுமையாக இருந்து படத்தை திரையரங்கில் வெளியிட்ட தயாரிப்பாளருக்கு நன்றி - கார்த்தி   |    'பிக்பாஸ்' புகழ் சாக்சி அகர்வால் நடிக்கும் ‘தி நைட்’   |   

சினிமா செய்திகள்

பல விருதுகளை வென்று கோலிவுட்டை கலக்கிய ’ரூம்மேட்’
Updated on : 31 March 2021

கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட பல துறைகளில் மிக முக்கியமான துறையாக சினிமா துறை உள்ளது. அதிலும், மற்ற துறைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினாலும், சினிமா துறை தற்போதும் பல பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்ப்பார்த்த வெற்றியை பெற முடியாமல் தத்தளிக்க, ‘ரூம்மேட்’ என்ற திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பால் தமிழ் திரையுலகே வியப்படைந்துள்ளது. சிவசாய் நிறுவனம் சார்பில் இ.வினோத்குமார் தயாரித்திருக்கும் ‘ரூம்மேட்’ படத்தை அறிமுக இயக்குநர் வசந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ளார். புதுமுக நடிகர்கள் நடித்துள்ள இப்படம் மார்ச் 26 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படவில்லை என்றாலும், ரசிகர்களின் மவுத் டாக் மூலம் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 


காதல் கதையை வித்தியாசமான முறையில் திரில்லர் ஜானரில் சொல்லப்பட்டிருக்கும் இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது. எந்த ஒரு விளம்பரம் இன்றி, ஒரு சிறு முதலீட்டு திரைப்படம் இப்படி ஒரு வெற்றியை பெற்றிருப்பதை அறிந்த கோலிவுட்டின் மொத்த கவனமும் ‘ரூம்மேட்’ படம் மீது திரும்பியுள்ளது. மேலும், சமீபத்தில் வெளியான மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் படத்தை காட்டிலும் ‘ரூம்மேட்’ படத்திற்கு ரசிகர்கள் அதிகமாக வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் ‘ரூம்மேட்’ படத்தை தங்களது திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். வித்தியாசமான திரைப்படங்களுக்கும், புது முயற்சிக்கும் ரசிகர்களின் ஆதரவு உண்டு, என்பதை பல தமிழ்த் திரைப்படங்கள் நிரூபித்துள்ளது. தற்போது, அப்படிப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ‘ரூம்மேட்’ படமும் இணைந்திருப்பது, படக்குழுவினரை உற்சாகமடைய செய்துள்ளது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா