சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

கிரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘இரண்டாம் நகர்வு’
Updated on : 29 March 2021

வி.எம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் நகர்வு’. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தை இயக்கி தயாரித்திருப்பதோடு, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் வினோத் சிரஞ்சீவி.  ஆஞ்சல்  , கெனிஷா பிராஞ்சீஸ் மற்றும் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் குறிஞ்சி, மது, அவினாஷ், அரவிந்த், பிளஸ்ஸி, நிவேதா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.



 



நண்பர்கள் நடத்தும் விருந்து நிகழ்வில் கொலை ஒன்று நடக்கிறது. அந்த கொலை பற்றிய விசாரணையில் ஈடுபடும் விசாரணை அதிகாரிகளான கதாநாயகன் வினோத் சிரஞ்சீவி மற்றும் கதாநாயகி கெனிஷா பிராஞ்சீஸ், அந்த கொலையின் பின்னணி என்ன? யார் கொலை செய்தது? ஆகியவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார்கள், என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடும், சஸ்பென்ஸ் மற்றும் திரில்லரான காட்சிகளுடனும் சொல்லியிருக்கிறார்கள்.



 



தொழில்நுட்ப ரீதியாக மிக நேர்த்தியாக உருவாகியிருப்பதோடு, ரசிகர்கள் யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக, கூறிய இயக்குநர் வினோத் சிரஞ்சீவி, முழுமையான சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக ‘இரண்டாம் நகர்வு’ ரசிகர்களை திருப்திப்படுத்தும், என்றார்.



 



வினோத் சிரஞ்சீவி இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு பி.ஆர்.வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷ் இசையமைக்க செந்தில் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆதித்யா இணை தயாரிப்பை கவனிக்க, இணை இயக்குநராக எஸ்.ஆர்.மணிகண்டன் பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பாளராக சரவணன் ஹஸ்வத்  பணியாற்றுகின்றனர்.



 



சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள முக்கியமான பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா