சற்று முன்

அருண் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு வெளியிட்ட நேதாஜி மோஷன் டீஸர் !   |    எனது அடுத்த படத்தில் ஒரு கதாநாயகி இலக்கியா... நடிக்க எனக்கு ஒரு தயக்கம் இருந்தது!   |    மாணவர்களுக்காக இயக்குனர் வெற்றிமாறன் எடுத்துள்ள புதிய முயற்சி!   |    திருநங்கைகள் தினத்துக்காக திருமூர்த்தியின் உருக்கமான குரலில் உருவான பாடல்   |    'டிரைவர் ஜமுனா' பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!   |    OTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்   |    சாந்தி செளந்தரராஜனின் கதை பூஜையுடன் முதல் கட்ட படப்பிடிப்பு துவங்கியது   |    சூரி - ஆரி இணைந்து வெளியிடும் 'கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் வீடியோ!   |    குடும்பப்பாங்கான கதையை திரில்லர் ஜானருடன் கலந்து சொல்லுவதே 'ஒற்று'   |    தனுஷ் படத்திற்கு விஜய்சேதுபதி போட்ட ட்வீட்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்   |    பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரஜினி, கமல் மோதலா! - காரணம்   |    தன்னுடைய திருமணம் பற்றி அதிரடி தகவல் தந்த சுனைனா!   |    வீரப்பனின் மகள் விஜயலட்சுமி அறிமுகமாகும் 'மாவீரன் பிள்ளை'   |    ஏ ஆர் ரஹ்மான் 99 சாங்ஸ்-ஐ கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்கு அறிவித்துள்ள போட்டி   |    அஜித் மற்றும் கமலால் திருமணம் செய்ய பயப்படும் ஆண்கள் - இயக்குனரின் பகீர் குற்றச்சாட்டு   |    பிரபுதேவாவை 'பஹீரா'வுக்காக 10 மாறுபட்ட தோற்றங்களில் வடிவமைத்த ஜாவி தாகூர்!   |    குக் வித் கோமாளி நடிகைக்கு ஹீரோவாக நடிக்கும் நடிகர் சதீஷ்   |    3 வருடங்கள் பொறுமையாக இருந்து படத்தை திரையரங்கில் வெளியிட்ட தயாரிப்பாளருக்கு நன்றி - கார்த்தி   |    'பிக்பாஸ்' புகழ் சாக்சி அகர்வால் நடிக்கும் ‘தி நைட்’   |   

சினிமா செய்திகள்

அமைச்சர் ஜெயக்குமார் கூறிய மகளிர் தின வாழ்த்து
Updated on : 08 March 2021

அன்னையாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய், மகள்களாய் வாழ்வின் எல்லா காலகட்டங்களிலும் நமக்கு உற்ற துணையாய் உயிர் துடிப்பாய் உடன் பயணிப்பது பெண்கள் தாம். கருவறை தொடங்கி, கல்லறை வரையிலும் ஆணினத்தின் அணுவாய் அடையாளமாய் இருப்பது பெண்கள். எங்கெங்கு காணினும் சக்தியடா, ஏழுகடல் அவள் வண்ணமடா என்றான் பாரதி. ஆம் திரும்பிய திசையெங்கும் பெண்கள் இல்லையேல் ஆண்கள் யார் என்பதே இந்த உலகிற்கு தெரியாமல் போய்விடும். அந்த வகையில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று பாடிய பாரதியின் வரிகளை வாழ்நாளில் வாழ்க்கையாய் மாற்றிக் காட்டியவர் புரட்சித்தலைவி இதய தெய்வம் நம் அம்மா. சமூகநீதி, பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு அரசியல், அதிகாரம், ஆட்சி பீடம் என அடித்தட்டு முதல் அத்தனை பெண்களையும் தோல்வி பள்ளத்தாக்கில் இருந்து கைத்தூக்கி, வெற்றி சமவெளியின் வீதிக்கு அழைத்து வந்தவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா. இன்று உலகமே பெண்ணினத்தை பார்த்து வியந்து நிற்பதற்கும், அண்ணாந்து பார்ப்பதற்கும், அதிசயமாய் கொண்டாடுவதற்கும் காரணம் ஒற்றை பெண்மணி நம் அம்மா!!!  அடுப்பங்கரை தொடங்கி ஆட்சிபீடம் வரையிலும் எல்லா இடங்களிலும் குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் தாய்க்குலங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் மனம் நிறைந்த மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்... ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமல்ல மகளிர் தின வாழ்த்து எல்லா நாட்களும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்து நிச்சயம் உண்டு... அன்புடன்,டி.ஜெயக்குமார்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா