சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரெஹானா தலைமையில் நடந்த ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா
Updated on : 07 March 2021

இந்த அமைப்பு தற்போது எட்டாவது முறையாக  ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவை நடத்தினர்.  இந்த விழா கடந்த 2012 ஆம் ஆண்டு முதல்  ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  தேசிய மகளிர் தினத்தை பாராட்டி நடந்த  இந்த விழாவை,  ரெயின்டிராப்ஸ் அமைப்பின்  நல்லிணக்க தூதுவர்  ஏ.ஆர்.ரெஹானா தலைமை வகித்தார்,  அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலை  வகித்தார்,.





 

இந்த வருடம், ரெயின்ட்ராப்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதினை 105 வயதான இயற்கை விவசாயி பாப்பம்மாள் மற்றும் 93-வயதான மூத்த சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி கிருஷ்ணன் பெற்றுக்கொண்டனர்.





 

சிறந்த ஆளுமைக்கான விருதினை இளம் வனதுறை அதிகாரி சுதா ராமன் ஐ.எப்.எஸ், சிறப்பு அங்கீகாரத்தை இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மோண்டல், குயின் ஒப் தமிழ் சினிமா - சிறந்த நடிகைக்கான விருதினை ஊர்வசி, சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதினை இந்திய கூடைப்பந்து மகளிர் அணி கேப்டன் அனிதா பால்துரை, நம்பிக்கையிற்கான விருதினை சென்னை உயர்நீதிமன்ற முதல் பார்வை சவால் கொண்ட  வழக்கறிஞர் கற்பகம், சிறந்த இயற்கை விசாயிக்கான விருதினை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பரிமளா தேவி, வீரத்திற்கான விருதினை சென்னை விமான நிலையத்தின் முதல் பெண் தீயணைப்பு வீரர் ரெம்யா ஸ்ரீகாந்தன்,  கருணைக்கான விருதினை டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன், இளம் விஞ்ஞானிக்கான விருதினை திருவண்ணாமலையை  சேர்ந்த 14 வயது சிறுமி  வினிஷா உமாசங்கர், இந்தியாவின் முதல் பெண் கனரக வாகன ஓட்டுநர் ஜோதிமணி கௌதமன், தமிழகத்தின் முதல் பெண் 108 ஓட்டுநர் வீரலட்சுமி,  இடுகாடுகளில் வெட்டியாள் வேலை செய்யும் கோவையை சேர்ந்த வைரமணி, பிரபல வீணை இசை கலைஞர் புண்யா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பெண் சாதனையாளர்கள் 'சாதனை பெண்கள் விருதுகளை’  பெற்றனர்.



 





 

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ், இயக்குனர் பி வாசு, காவல்துறை அதிகாரி சரவணன், விஜிபி குழுமத்தின் நிறுவனர் டாக்டர் வி. ஜி. சந்தோஷம், பாடகர் ஸ்ரீனிவாஸ், வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா, வருமான வரித்துறை அதிகாரி நந்தகுமார் IRS,  இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், விஜிபி குழுமத்தின் இயக்குனர் ராஜாதாஸ், தணிக்கைக் குழு அதிகாரி லீலா மீனாட்சி, நடிகை நீலிமா  உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. 



 



ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் இது குறித்துக் கூறுகையில், சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் சாதனைப் பெண்கள் விருது விழாவை நடத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. ஒவ்வொரு துறையிலும் இருக்கும் பெண் சாதனையாளார்களை அடையாளம்  கண்டு நாங்கள் விருது வழங்கி வருகிறோம்.  இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக கொரோனா காலங்களில் அயராது மக்கள் சேவையாற்றிய பெண் முன்கள பணியாளர்களையும் இவ்விழாவில் கௌரவித்ததில் பெருமை அளிக்கிறது  என்றார்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா