சற்று முன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

இன்று அதிரடி நாயகனாக அனைத்து மக்களாலும் விரும்பப்படும் இவர் யார் என்று தெரிகிறதா?
Updated on : 07 March 2021

அசாத்தியங்களை சாத்தியங்களாக்கும் மனிதன்...விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு முக்கியமான சான்றாக இருப்பவர்களில் இவரும் ஒருவர். இந்த படம் எடுக்கும் போது வயது 15,ஒன்பதாம் வகுப்பு மாணவன். பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் முனைப்போடு செயல்பட்டு அணித்தலைவராக கோலோச்சிய காலகட்டமது.



 



எப்போதுமே இருக்குமிடத்தில் தான் முன் வரிசையில் நிற்க வேண்டும்.தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருந்திருக்கிறது. அதன் காரணமாகவே பள்ளியில் படிப்பிலும் சரி விளையாட்டு போட்டிகளிலும், பேச்சிலும் சரி அனைத்திலுமே முதல் மாணவனாக திகழ்ந்து வந்திருக்கிறார் இந்த சிறுவன். 



 





சென்னை ராயபுரத்தில் டான்பாஸ்கோ ஆரம்பப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பை முடித்துவிட்டு, ராயபுரம் கே.சி.சங்கரலிங்கம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படித்து வந்த காலகட்டம் மிக முக்கியமானதாக இவருக்கு அமைந்திருக்கிறது.



 



 ஆம்! தலைமைப் பண்பும் ஆளுமைப் பண்பும், அசாத்திய திறமையும் கொண்ட இந்த மாணவன் ஆசிரியர்களின் செல்லப் பிள்ளையாய் வலம் வந்திருக்கிறார். ஒரு காலகட்டத்தில் இவரது செயல்பாடுகளை உற்று கவனித்த தலைமை ஆசிரியர்,மற்ற ஆசிரியர்கள் முன்னிலையில் இந்த மாணவனை அழைத்து நீ படித்து முடித்து என்னவாக மாறுவதற்கு ஆசைப்படுகிறாய் என்று கேட்டிருக்கிறார். அப்போது சிறுவன் சொன்ன பதில்தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் உறைய வைத்தது.



 



" நான் அரசியல்வாதியாக மாறப் போகிறேன், மக்களுக்காக  சேவை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்" என்று பளிச்சென இந்த மாணவன் சொன்ன பதில் ஆசிரியர்களை ஆச்சரியப்பட வைத்தது. இந்த  பதில் வித்தியாசமான கோணத்தில் இருந்தாலும் கூட அன்று யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை,அந்த நம்பிக்கையும் யாருக்கும் வரவில்லை. (சிறுவன் இந்த பதில் சொல்வதற்கு இன்னொரு காரணம் இருந்திருக்கிறது. அண்ணாதுரை ஆட்சிக் காலத்தில் இவரது அப்பா துரைராஜ் மாநகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். அப்பாவின் மக்கள் சேவையே பார்த்து அரசியல் எண்ணம் இவரது மனதில் விழுந்ததால் இந்த பதிலை பளிச்சென சொல்லி இருக்கலாம்).



 



ஆனால் கல்லூரி முடித்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியலுக்குள் நுழைய ஆரம்பித்து இன்றைக்கு அதிரடி நாயகனாக அனைத்து மக்களாலும் விரும்பப்படும் மிகச் சிறந்த ஆளுமையாக உருவெடுத்து நிற்கிறார் இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் சிறுவன்...



 



அவர் தாம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் இயக்கத்தில் எம்ஜிஆர் காலம், ஜெயலலிதா காலம், இன்றைய எடப்பாடி பழனிச்சாமி காலம் வரையிலும் அனைவராலும் அடையாளப்படுத்தப்பட்ட ஆகச் சிறந்த ஆளுமையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். காரணம் என்னவென்றால் எல்லோரிடமும் எளிமையாகப் பழகும் பண்பும்,உதவும் மனமும் தான் அவரை இந்த இடத்தில் வந்து அமர வைத்திருக்கிறது.



 



 இத்தனை ஆண்டுகள் மிகப்பெரிய இடத்தில் அரசியல் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது என்பது எளிதான விஷயமல்ல. அத்தனைக்கும் காரணம் இந்த படத்தில் இருக்கும் சிறுவன் அன்று தன் ஆசிரியரிடம் சொன்ன மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன் வார்த்தைகளை வாழ்க்கையாக மாற்றியதால் இந்த இடத்தில் இன்னமும் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்....



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா