சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

படப்பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்'
Updated on : 05 March 2021

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.







'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரிக்கவுள்ளார். 'மோகன்தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது. அப்போதே பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லரைக் காணவுள்ளோம் என்பதை உணர்த்தியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர்களின் அறிவிப்புகள் என அனைத்திலுமே எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது.



 









'மோகன்தாஸ்' படத்தை 'களவு' படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்திய முரளி கார்த்திக் இயக்கவுள்ளார். இந்தப் படம்  ஒரு எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையாகும். பார்வையாளர்களுக்குக் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறது படக்குழு. இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு நாயகியாக தன் நடிப்பால் ஆச்சரியப்படுத்தி சமீபத்தில் கலைமாமணி விருதினை வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். வித்தியாசமான கதைகள் வந்தால் தமிழில் நடிக்கும் இந்திரஜித் சுகுமாரன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன்,அக்‌ஷய் ராதாகிருஷ்ணன்,ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.



 









இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 'மோகன் தாஸ்' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள விஷ்ணு விஷாலுக்கு அவருடைய திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 'களவு' படத்தில் தன்னுடைய பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடனே இந்தப் படத்திலும் பணிபுரியவுள்ளார்  முரளி கார்த்திக்.







த்ரில்லர் படங்களின் ரசிகர்களுக்கு விரைவில் ஒரு அறுசுவை விருந்து காத்திருக்கிறது என்று நம்பலாம்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா