சற்று முன்
சினிமா செய்திகள்
இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது
Updated on : 03 March 2021
டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படம் அருண் விஜய்யின் 33வது திரைப்படம் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாயின.
அதை உறுதிசெய்யும் விதமாக இன்று இந்த படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. இந்த பூஜையில் அருண் விஜய், ஹரி, பிரியா பவானி சங்கர், விஜயகுமார், ஹரியின் மனைவி ப்ரீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க இருக்கிறார்.
இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்
அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’ படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிதாலஜிக்கல் படங்களில் இதுவரையிலான முயற்சிகளில் மிகப் பெரும் அளவில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒன்றை இந்தக் குழு உருவாக்கி வருகிறது.
இளம் நடிகர் விராட் கர்ணா நடிக்கும் இந்தப் படத்தை கிஷோர் அன்னபுரெட்டி, மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பான்-இந்தியா ரிலீசுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரும் பொருட்செலவிலான ஆக்சன் பிளாக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
அபிஷேக் நாமாவின் கனவுப் படைப்பாகிய ‘நாகபந்தம்’ படத்துக்கு அவர் எழுதிய சக்திவாய்ந்த திரைக்கதை பெரும் வரவேற்பு பெறும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதுடன், கிளைமேக்ஸ் படப்பிடிப்பில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்த மாபெரும் கிளைமேக்ஸ் காட்சியின் மையப் பகுதியாக, புராதன கோவில் கலை வடிவத்தை, பிரதிபலிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட மகத்தான புனித வாசல் அமைப்பு இடம் பெற்றுள்ளது. இதை ஆர்ட் டைரக்டர் அசோக் குமார் மிகப் பிரம்மாண்டமாக வடிவமைத்திருக்கிறார்.
மேலும், ஆக்சன் காட்சிகளின் தரத்தையும் வலிமையையும் உயர்த்துவதற்காக தாய்லாந்தின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கெச்சா காம்பக்டீ இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.
நேற்று படப்பிடிப்பு தளத்தைப் பார்வையிட்ட ஊடகப்பிரமுகர்கள், அங்கு காணப்பட்ட செட் அமைப்பு மற்றும் படமாகி கொண்டிருந்த கிளைமேக்ஸ் காட்சியின் பிரம்மாண்டத்தைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.
“நாகபந்தம்” படத்தில் நாபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசையமைக்கிறார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
“நாகபந்தம்” 2025 ஆம் ஆண்டில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.
இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புரமோஷன் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா
தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்..,
நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பேசியதாவது..,
ஹைதராபாத்தில் படம் அளவு ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தேன். இப்படம் முழுக்க முழுக்க கூஸ்பம்ஸ் அனுபவம் தான். என் டி ஆர் உடன் நடிக்க வேண்டும் என நிறைய ஆசைப்பட்டேன், ஆனால் இறைவன் காத்திரு கடவுள் உடன் நடிக்கலாம் என சொன்னார். அது இப்போது நடந்துள்ளது. இப்படத்தில் ஒரு துறவியாக நடித்துள்ளேன். எனக்கு இயக்குநர் போயபாடி சீனு ஒரு அற்புதமான ரோல் தந்துள்ளார். தமிழில் ஏ பி நாகராஜ் போல படம் எடுக்க ஆளில்லை என்ற ஏக்கத்தை போக்க வந்திருக்கிறார் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு. மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இவர் கொண்டாடப்படுவார். பாலைய்யா ஒரு நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சக்தி, அவர் மாதிரி இப்போது எந்த ஒரு நடிகரும் இயங்க முடியாது. மைனஸ் 10 டிகிரியில் வெறும் உடலுடன் எந்த சீஜியும் இல்லாமல், ஜார்ஜியாவில் நடித்தார். இப்படம் எனக்கு மிகச்சிறந்த அனுபவம். 300 படங்கள் நடித்துள்ளேன், நான் அகண்டா படமும் செய்துள்ளேன் Both are not same. இப்படம் மொழி தாண்டிய ஒரு பான் இந்திய திரைப்படம், நம் இந்திய கலாச்சாரத்தை கொண்டாடும் படைப்பு. நீங்கள் படம் பார்த்து கொண்டாடுவீர்கள், அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். நம் ஆன்மீக உணர்வை யார் வந்து, என்ன சொன்னாலும் அழிக்க முடியாது. இது ஒரு பக்கா கமர்ஷியல் படம். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். இப்படம் எனக்கு மிகப்பெரும் பெருமை. அனைவருக்கும் நன்றி.
நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது..,
அகண்டா 2 குழுவை சென்னைக்கு வரவேற்கிறேன். ஹைதராபாத் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை, சென்னையில் விழா நடக்கிறது என்றவுடன் நான் ஷீட்டிங்கில் இருந்து சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அகண்டா 2 படத்தில் நான் எப்படி வந்தேன் என்றே தெரியவில்லை. என்னை தேர்ந்தெடுத்து, நடிக்க வைத்த போயபாடி ஶ்ரீனு சாருக்கு நன்றி. அந்தப்படத்தில் நடித்தது சிவனின் அருள், எனக்குள் வந்த மாதிரி இருந்தது. எல்லோரும் பெரும் பாராட்டுக்களைத் தந்தனர். நான் 2,3 காட்சிகள் நடித்தாலும், இப்படத்தில் முழுமையாக வருவது போல் செய்துள்ளார். சிவன் இப்படி தான் இருப்பார் என பாலைய்யா சாரை காட்டி என் பேரக்குழந்தைகளுக்கு சொல்வேன். வெட்ட வெளியில் செருப்பு கூட இல்லாமல் அவர் உழைத்த உழைப்பை நேரில் பார்த்து பிரமித்தேன். தமன் எல்லோரையும் அதிர வைக்கும் படி ஒரு அற்புதமான இசையை தந்துள்ளார். கமர்ஷியல் தாண்டி தெய்வீகத்தை தர போயபட்டி ஶ்ரீனுவால் தான் முடியும். தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினி சாரையும், தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாலைய்யா சாரையும் இணைத்து படம் செய்யுங்கள். அனைவரும் படம் பார்த்து கொண்டாடுங்கள் நன்றி. அகண்டா 3 யும் கண்டிப்பாக செய்யுங்கள் நன்றி.
இணை தயாரிப்பாளர் : கோடி பருச்சுரி
பத்திரிக்கை ஊடக நண்பர்களின் அன்புக்கு நன்றி. இது உண்மையாகவே ஒரு பான் இந்திய படம். நம் எல்லோரும் கொண்டாடக்கூடிய வகையில் இருக்கும். இயக்குநர் போயபாடி ஶ்ரீனுவுக்கும், பாலைய்யா சாருக்கும் என் நன்றிகள். அனைவரும் படம் பார்த்து கொண்டாடுங்கள் நன்றி.
போயபாடி ஶ்ரீனு பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம், என் 3 படங்கள் கேமராமேனாக வின்சன் சார் செய்தார். அவர் மூலம் தமிழ் தெரிந்தாலும், அதிகம் பேசத் தெரியாது. அகண்டா தெலுங்கு மொழிக்கான படமல்ல அதே போல தான், அகண்டா 2, இது இந்துகள் மற்றும் இந்தியாவின் ஆன்மாவை, ஆன்மிகத்தை கொண்டாடும் படம். தெலுங்கு, தமிழ், என எல்லோருக்குமான படம். பாரதம் முழுக்க உள்ள அனைவரும் இப்படத்தை கொண்டாடுவார்கள். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தை கண்டிப்பாக அனைவரும் ரசிப்பீர்கள். தேகம், தேசம், தெய்வம் என எல்லாவற்றிக்குமான படம். ஆனால் அதை கமர்ஷியலாக தந்துள்ளோம் அனைவருக்கும் நன்றி.
நந்தமூரி பாலகிருஷ்ணா பேசியதாவது..,
என் சொந்த வீட்டுக்கு வந்தது போல உள்ளது. நான் இங்கு தான் பிறந்தேன். அகண்டா 2 விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். என் உயிருக்கு இணையான தமிழ் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றிகள். சென்னை என் ஜென்ம பூமி, ஆந்திரா ஆத்ம பூமி. என் அப்பா என் டி ஆரின் வாழ்க்கையெல்லாம் இங்கு தான் நடந்தது. மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜியுடன் என் அப்பாவின் நட்பை, அன்பை மறக்க முடியாது. என் அப்பா என் டி ஆர் தமிழ் நாட்டின் மீது மிகுந்த அன்போடு இருந்தார். அகண்டா முதல் பாகம் வெளிவந்த போது இப்படம் பார்க்க ஆள் வருமா? என நினைத்தோம். ஆனால் இம்மாதிரி படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும் என உருவாக்கினோம். அது சூப்பர் ஹிட்டானது. இம்மாதிரி படங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள் என தைரியம் வந்தது, போயபாடி ஶ்ரீனுவுடன் எனக்கு நாலாவது படம். எல்லாமே சூப்பர் ஹிட். அவருடன் கதை கூட அவ்வளவாக விவாதிக்க மாட்டேன். இந்தப்படம் 130 நாட்களில் முடிந்த விட்டது. இது சீக்குவல் இல்லை, இது இந்து தர்மத்தை, கலாச்சாரத்தை போற்றும் ஒரு படைப்பு. நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி. நம் பண்பாடுகளை, சனாதான தர்மத்தை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இந்தப்படம். சனாதான தர்மத்தை சக்தியை இந்தப்படத்தில் காட்டியுள்ளோம். தர்மத்திற்காக நாம் போராட வேண்டும். என் அப்பா தான் என் தெய்வம் அவர் எல்லா வகையிலும் படம் செய்துவிட்டார், நான் ரொம்ப அதிர்ஷடசாலி. நான் திரைக்கு வந்து 50 வருடமாகிவிட்டது. அவர்கள் ஆசியில் இன்னும் ஹீரோவாக நடிக்கிறேன். 4 படம் தொடர் வெற்றி. ரசிகர்கள் இம்மாதிரி படங்களுக்கு காத்திருக்கிறார்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். டிசம்பர் 5 ஆம் தேதி வருகிறது அனைவரும் படம் பாருங்கள். கொண்டாடுங்கள் நன்றி.
தயாரிப்பாளர்கள் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் ப்ளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்கள்.
இப்படத்தில் ஆதிப் பினிசெட்டி வலுவான வில்லனாக வருகிறார். சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார். ஹர்ஷாலி மால்ஹோத்ராவின் சிறிய காட்சிகள் கதையின் உணர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதாக அமைந்துள்ளது.
படத்தின் தொழில்நுட்பத் தரம் சிறப்பாக உள்ளது.ஒளிப்பதிவாளர்கள் C. ராம்பிரசாத் மற்றும் சந்தோஷ் D டெடாகே — ஒவ்வொரு ஃபிரேமிலும் பெரும் பிரம்மாண்டத்தையும், அற்புதமான உலகையும் உருவாக்குகியுள்ளனர்.இசையமைப்பாளர் தமன் S உடைய அதிரடி பின்னணி இசை — தெய்வீக தாளம் போல காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துகிறது. தம்மிராஜுவின் எடிட்டிங் கச்சிதமாகவும், A.S. பிரகாஷின் கலை அமைப்பு படத்தை இன்னும் பிரம்மாண்டமாக மாற்றியுள்ளது.
சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!
இன்னும் சில தினங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் கிறிஸ்தவர்கள், அவருடைய பிறந்தநாளுக்குப் பிறகு கிறிஸ்தவ மதத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் ஒன்றிணைந்து, சென்னையில் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாட்டை நடத்த இருக்கிறார்கள்.
வரும் டிசம்பர் 29 ஆம் தேதி, திங்கட்கிழமை, காலை 9 மணி முதல், மாலை 3.30 மணி வரை, சென்னை, செயின்ட் தாமஸ் மலையில் உள்ள "புனித பசிலிக்கா" வில் (St.Thomas Mount Hill Shrine Basilica, Chennai) இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பிரிவு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த தேவ ஊழியர்கள், போதகர்கள், ஆயர்கள், பேராயர்கள் பங்கேற்க உள்ளார்கள். தமிழக வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’தாபோர் (TABOR) உச்சி மாநாடு 2025’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. மேலும், மாநாட்டின் ஆலோசனை கூட்டம் தருமபுரி பேராயத்தின் ஆயரும், ’தாபோர் (TABOR) உச்சி மாநாடு 2025’ மாநாட்டின் தமிழக பணிக்குழுவின் தலைவருமான 'பிஷப் லாரன்ஸ் பயஸ்' தலைமையில் நடைபெற்றது.
மேலும், தென்னிந்திய திருச்சபை பேராயத்தின் செயலாளர் பாதிரியார் அகஸ்டின் பிரேம்ரான், அங்கிளிக்கன் தேவலாயத்தின் ஆயர் டாக்டர்.சந்திரசேகர், டிஎல்ஸ் ஆயரின் பிரதிநிதியாக பாதிரியார் ஜேக்கப் சுந்தர், ஏஜி சபை மற்றும் ஆயர் மோகன் லாசரின் பிரதிநிதியாக டாக்டர். கல்யாணகுமார், பெந்தகோஸ்தே திருச்சபையின் பிரதிநிதியாக ஆயர் எடிசன், ஒய்.எம்.சி.ஏ ஆனந்த், இந்தியன் நேஷ்னல் அப்போஸ்தலிக் டயஸிஸ் சார்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிஷப் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றார்கள்.
இவர்களோடு, ஏசு அழைக்கிறார் சபையின் சார்பில் பால் தினகரன் மற்றும் அவருடன் பயணிக்கும் சகோதர, சகோதரிகளும், பிற திருச்சபைகளை சேர்ந்தவர்களும் வரும் நவம்பர் 29 ஆம் தேதி நடைபெற உள்ள ’தாபோர் (TABOR) உச்சி மாநாடு 2025’-ல் பங்கேற்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனை கூட்டம் முடிவடைந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ‘தாபோர் உச்சி மாநாடு 2025’ பணிக்குழு தலைவர் பிஷப் லாரன்ஸ் பயஸ், “அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து ஆண்டவரின் சிறப்பு அபிஷேகத்தையும், வல்லமையையும், பரிசுத்த ஆவியையும் பெறுவதற்கான மாபெரும் கூட்டம் நவம்பர் 29 ஆம் தேதி, செயின்ட் தாமஸ் மலை மீது நடைபெற உள்ளது.
ஒரே எண்ணத்தை கொண்ட அனைவரும் ஒன்று கூடி, நல்ல எண்ணத்தை பெற்று தருவதோடு, தேசத்திற்கு ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்ய வேண்டும், என்பதே இந்த கூட்டத்தின் நோக்கம். இந்த கூட்டம் தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கூட்டத்தில் அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தற்போது சுமார் 15-க்கும் மேற்பட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த திருச்சபையம் இதில் பங்கேற்க உள்ளார்கள். கூட்டம் நடக்கும் போது இன்னும் அதிகமானவர்களை எதிர்பார்க்கிறோம்.
இதற்கு முன் மதமாற்ற தடை சட்டம் போடப்பட்ட போது, அனைத்து திருச்சபைகளும் ஒன்றிணைந்தோம். அதன் பிறகு இப்போது தான் மீண்டும் ஒன்றிணைகிறோம். மேலும், 2032 ஆம் ஆண்டு இயேசு கிறிஸ்து பிறந்து, உயிர்தெழுந்து 2000 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அந்த விழாவுக்கான முன்னோட்டமாகவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.” என்றார்.
தற்போது தமிழகத்தில் மதம் ரீதியான சர்ச்சைகள் அதிகரித்து வருவது தொடர்பான உங்களது கருத்து ? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிஷப் லாரன்ஸ் பயஸ், “அது பற்றி கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை, எங்களை பொறுத்தவரை ஜெபம்...ஜெபம்...தான். அனைவரும் ஒன்று என்று நினைக்கிறோம். பிற மதங்களை பற்றி வெறுப்பாக பேசப்போவதில்லை, அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும், அனைத்து மதங்களுடனும் நல்லுறவுடன் இருக்க வேண்டும். எங்கள் திருச்சபைகளை ஒன்றிணைக்க வேண்டும், என்பது தான் எங்கள் எண்ணம்.” என்றார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!
JioStar Head Entertainment Business, South Cluster, கிருஷ்ணன் குட்டி, JioStar Executive Vice President – Tamil பாலச்சந்திரன் R, மற்றும் CEO – Turmeric Media R. மகேந்திரன் ஆகியோர், இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் JioHotstar South Unbound என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர்.
இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம், தென்னிந்திய கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் போன்ற பல அம்சங்கள் குறித்து குழுவினர் முதல்வரிடம் பகிர்ந்தனர். மேலும், ‘Letter of Engagement’ என்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் JioStar வழங்கும் ஆதரவை குழுவினர் உறுதிப்படுத்தினர்.
டிசம்பர் 9, 2025 அன்று சென்னை நகரில் நடைபெறும் JioHotstar South Unbound நிகழ்வு, தென்னிந்திய சினிமா மற்றும் படைப்புத் திறனைக் கொண்டாடும் முக்கிய விழாவாகும். தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநர்கள், படைப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள திறமைகள் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள். JioHotstar இன், புதிய தென் மாநில படைப்புகள், கதைகள், இந்த நிகழ்வில் வெளியிடப்படும்.
இந்த விழாவை தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். பாராட்டுப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பத்மபூஷண் திரு. கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் முன்னணி படைப்பாளர்கள் பங்கேற்கும் இந்த விழா, தென்னிந்திய கலை மற்றும் கதைக்கூறும் மரபின் தாக்கத்தை உலகுக்கு முன்னிறுத்தும் முக்கிய தருணமாக இருக்கும். மேலும், தென்னிந்திய பொழுதுபோக்கு உலகை உயர்த்த, வளர்க்க, பலப்படுத்த JioStar மேற்கொள்ளும் தொடர்ந்த பங்களிப்பையும் இது மீண்டும் வலியுறுத்துகிறது.
மாயபிம்பம் படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.
செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம். புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
புதுமுக நடிகர் - நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர்.
2005ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் வெளியிட்டு, படத்தின் ஒரு பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவை பாராட்டினார்.
எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.
இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது.
இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.
புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடிய பாடல் தான் இப்போது இணையம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் கார்த்தி சந்தோஷ் நாரயாணனின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டியும் “வாவ் சூப்பர்” என பதிவிட்டுள்ளார். மேலும் திரைத்துறை பிரபலங்கள் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், பாடகர் விஜய் ஏசுதாஸ் உட்பட பலரும் வீடியோ பார்த்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
இப்படத்தில் நடிகர் கார்த்தி எம் ஜி ஆர் ரசிகராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த வீடியோ வெளியாகி உள்ளதால், இப்பாடலின் ரீமிக்ஸ் வடிவம் இப்படத்தில் இடம்பெறுகிறதா ? இப்பாடலை வெளியிடுங்கள் என ரசிகர்கள் ஆவலோடு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரும் இணைகிறார்கள் என்றவுடனே, படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த கூட்டணியின் மாயாஜாலத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.
பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.
படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளது.
'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது
அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்
ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம் ,உறுதி என்ற பல்வகையான பொருள் படும். எழுத்து மூலமாக எழுதப்படும் ஆவணம் தெரியும். அது போன்ற மதிப்பு மிக்கது வாய்மொழியாகச் சொல்லப்படும் சத்தியம் அதாவது ப்ராமிஸ் .அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் போது முதலில் 'நான் சொல்வதெல்லாம் உண்மை' என்று சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். வாய்மொழியாகச் சொல்லப்படும் ப்ராமிஸ் எனப்படும் அந்த சத்தியத்தின் பின்னே இருப்பது உண்மையும் நம்பிக்கையும் உறுதிப்பாடும் தான். இறுதியில் அதுதான் ஜெயிக்கும்.அதனால்தான் நமது தேசியச் சின்னத்தில் 'சத்தியமேவ ஜெயதே' ,அதாவது வாய்மையே வெல்லும் என்று எழுதப்பட்டுள்ளது.
இந்திய மக்களிடம் புகழ்பெற்ற உண்மையையே பேசிய அரிச்சந்திரனும் அவனைப் பின்பற்றிய காந்தியும் வரலாற்றில் சத்தியத்தின் சாட்சியங்களாக இருப்பதை அறியலாம்.
அப்படி அந்தச் சத்தியத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் ப்ராமிஸ்.
கதையின் நாயகனாக நடித்து இந்தத் திரைப்படத்தை அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக வினோத்குமார் DFT பணியாற்றி உள்ளார்.
சரவண தீபன் இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பு ஸ்ரீராம் விக்னேஷ், பாடலாசிரியர் பாலா, DI மணிகண்டன், நடனம் அகிலா பணியாற்றியுள்ளனர்.
நாயகன் அருண்குமார் சேகர னுடன் கதாநாயகியாக புதுமுகம் நதியா சோமு நடித்துள்ளார். படத்தின் பிற கதை மாந்தர்களாக சுஜன், அம்ரிஷ் ,பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் க்ரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
படம் பற்றி இயக்குநர் அருண்குமார் சேகரன் பேசும்போது,
"இந்த உலகில் ப்ராமிஸ் என்பது எவ்வளவு மதிப்புள்ளது என்பதைப் பற்றி இந்தப் படத்தில் பேசி இருக்கிறோம். அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது.உணர்ச்சிகரமானது. எனவே யாரும் அம்மா மீது அப்படி ப்ராமிஸ் செய்ய மாட்டார்கள். கணவன் மனைவிக்குள் காதலர்களுக்குள் இருக்கும் ப்ராமிஸ் என்பது மிகவும் மதிப்புள்ளது என்பதை இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம்.
ஒரு கட்டத்தில் அந்த ப்ராமிஸ் உடைக்கப்படும் போது, அந்த நம்பிக்கை சிதையும் போது அந்த வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன. அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா இல்லையா?என்பதே இந்தப் படத்தின் கதை"என்கிறார்.
படப்பிடிப்பு நடந்த இடங்களைப் பற்றிக் கூறும் போது,
"ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள வெயில் நகரங்களான வேலூர், ராணிப்பேட்டை ஆற்காடு ,குடியாத்தம், வாணியம்பாடி, ஒடுகத்தூர் அணைக்கட்டு போன்ற இடங்களில் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.பிச்சாவரம், கடலூர் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது எனவே இந்தப் படத்தில் உயிரோட்டமான கதை மட்டுமல்ல,உணர்ச்சிகரமான கதை மாந்தர்களும் உள்ளனர்.அது படத்தின் மீது எங்களுக்குப் பெரிதும் நம்பிக்கை அளிக்கும் அம்சங்கள் ஆகும்"என்கிறார் இயக்குநர்.
படப்பிடிப்பு நடைபெற்று படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.படத்தின் டிரெய்லர் வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப் பிரபலங்கள் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.
'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியிருக்கிறார்கள்.
'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிறை. இப்படத்தை அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். முற்றிலும் மாறுபட்ட களத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மற்றும் இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் சந்தித்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் மன்னிச்சிரு என்று தொடங்கும் பாடல் இன்று வெளியானது.
இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் வேலூரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் நாயகன் விக்ரம் பிரபு நாயகி அனந்தாவும் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களே இந்த பாடல் வரிகளையும் எழுதியுள்ளார்.
சத்ய பிரகாஷ் மற்றும் ஆனந்தி ஜோஷி இப்பாடலை பாடியிருக்கிறார்கள்
ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கத்தில் உருவாகும், கிராமத்து பின்னணியிலான ஆக்சன் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் ரசிகர்களிடம் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் விருத்தி சினிமாஸ் சார்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பிரமாண்டமாக வழங்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. நடிகை ஜான்வி கபூர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
தற்போது ராம் சரண் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கேற்க ஒரு முக்கியமான, அதிரடி நிறைந்த ஃபைட் சீன் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர் என்ற முறையில் கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் அவர்களும் இந்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஹைதராபாத் அலுமினியம் பேக்டரியில், கலை இயக்குநர் அவிநாஷ் கொல்லா அமைத்துள்ள மிகப்பெரிய செட்டில் இந்த ஆக்சன் காட்சிகள் படமாகி வருகிறது.
பாலிவுட் ஸ்டார் விக்கி கௌஷலின் தந்தை மற்றும் தங்கல் போன்ற பல படங்களுக்காக பிரபலமான ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் இந்த அதிரடி சண்டைக்காட்சிகளை மேற்பார்வை செய்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக நவகாந்த் பணியாற்றுகிறார். இந்த சீன் படத்தின் சிறப்புகளில் ஒன்றாக இருப்பதால், மிக பிரமாண்டமாக எடுக்கப்படுகிறது.
பெர்பெக்சனுக்கு பெயர் பெற்ற இயக்குநர் புஜ்ஜி பாபு சனா ஒவ்வொரு ஆக்சன் காட்சியையும் மிக அதிக கவனத்துடன், தனித்துவமான அணுகுமுறைகளில் வடிவமைத்து வருகிறார்.
பெத்தி படத்திற்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “சிக்கிரி சிக்கிரி ” பாடல் 110 மில்லியன் பார்வைகளை கடந்து உலகம் முழுவதும் அதிரடி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வருடத்தின் மிகப் பெரிய சார்ட் பஸ்டர்களில் ஒன்றாகவும் வெற்றியடைந்துள்ளது.
கருநாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, R ரத்னவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக பணிபுரிகிறார்.
“பெத்தி” படம் வரும் 2026 மார்ச் 27 அன்று பான் இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக திரையிடப்பட உள்ளது.
துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் (Jom Varghese) Wayfarer Films சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை, நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) இயக்குகிறார்.
இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா (Sajeer Baba) , இஸ்மாயில் அபூபக்கர் (Ismail Aboobacker), பிலால் மொய்து (Bilal Moidu ) எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன் (Adarsh Sukumaran) , ஷஹபாஸ் ரசீத் (Shahabas Rasheed) ஆகியோர் எழுதியுள்ளனர்
‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்துக்கான மற்ற நடிகர்களின் போஸ்டர்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தன. இப்போது துல்கர் சல்மானின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.
பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இந்த அதிரடி திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படம் துல்கர் சல்மானின் 40வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டனி வர்கீஸ், தமிழின் முன்னணி இயக்குநர் மிஷ்கின், கதிர், பார்த் திவாரி மற்றும் தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை, கபாலி, KGF, கைதி, விக்ரம், லியோ, சலார் போன்ற பான்–இந்தியா படங்களில் பணியாற்றிய அன்பறிவு மாஸ்டர்ஸ் வடிவமைக்கின்றனர். ‘RDX’ படத்தின் பிரமாண்டமான ஆக்சன் வெற்றிக்கு பிறகு, நஹாஸ் மற்றும் அன்பறிவு கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













