சற்று முன்

அருண் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு வெளியிட்ட நேதாஜி மோஷன் டீஸர் !   |    எனது அடுத்த படத்தில் ஒரு கதாநாயகி இலக்கியா... நடிக்க எனக்கு ஒரு தயக்கம் இருந்தது!   |    மாணவர்களுக்காக இயக்குனர் வெற்றிமாறன் எடுத்துள்ள புதிய முயற்சி!   |    திருநங்கைகள் தினத்துக்காக திருமூர்த்தியின் உருக்கமான குரலில் உருவான பாடல்   |    'டிரைவர் ஜமுனா' பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!   |    OTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்   |    சாந்தி செளந்தரராஜனின் கதை பூஜையுடன் முதல் கட்ட படப்பிடிப்பு துவங்கியது   |    சூரி - ஆரி இணைந்து வெளியிடும் 'கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் வீடியோ!   |    குடும்பப்பாங்கான கதையை திரில்லர் ஜானருடன் கலந்து சொல்லுவதே 'ஒற்று'   |    தனுஷ் படத்திற்கு விஜய்சேதுபதி போட்ட ட்வீட்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்   |    பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரஜினி, கமல் மோதலா! - காரணம்   |    தன்னுடைய திருமணம் பற்றி அதிரடி தகவல் தந்த சுனைனா!   |    வீரப்பனின் மகள் விஜயலட்சுமி அறிமுகமாகும் 'மாவீரன் பிள்ளை'   |    ஏ ஆர் ரஹ்மான் 99 சாங்ஸ்-ஐ கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்கு அறிவித்துள்ள போட்டி   |    அஜித் மற்றும் கமலால் திருமணம் செய்ய பயப்படும் ஆண்கள் - இயக்குனரின் பகீர் குற்றச்சாட்டு   |    பிரபுதேவாவை 'பஹீரா'வுக்காக 10 மாறுபட்ட தோற்றங்களில் வடிவமைத்த ஜாவி தாகூர்!   |    குக் வித் கோமாளி நடிகைக்கு ஹீரோவாக நடிக்கும் நடிகர் சதீஷ்   |    3 வருடங்கள் பொறுமையாக இருந்து படத்தை திரையரங்கில் வெளியிட்ட தயாரிப்பாளருக்கு நன்றி - கார்த்தி   |    'பிக்பாஸ்' புகழ் சாக்சி அகர்வால் நடிக்கும் ‘தி நைட்’   |   

சினிமா செய்திகள்

பிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் 'சினிமா கனவுகள்'
Updated on : 26 February 2021

பகவதி பாலா, மீரா, ஸ்ரீஜா சரவணன், கிங்காங், வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டாமணி. பவர் ஸ்டார் சீனிவாசன், அம்பானி சங்கர். சாவித்திரி, கண்ணன், ஸ்ரீலட்சுமி, ரஞ்சன், கலைவாணி இன்னும் பலர் நடித்துள்ளனர்.  இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கி உள்ள பிரபு இராமானுஜம் கதையைப் பற்றி கூறும் பொழுது, "  சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவில் பல வருடங்களாக முயற்சித்துக் கொண்டிருக்கும் நாயகன் சரவணனனுக்கு தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்தார். அவரிடம் தன் கிராமத்தில் நடந்த உண்மை நிகழ்வை கதையாக சரவணன் கூற தயாரிப்பாளருக்கு கதை பிடித்து போகிறது. உடனடியாக படப்பிடிப்பும் துவங்கியது. படமும் திரைக்கு வர ரெடியானது. இந்த நிலையில் தயாரிப்பாளரின் மகள் மீரா இயக்குனர் சரவணனிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறாள். அந்த காதலை ஏற்க சரவணன் மறுக்கிறான். அதன் பிறகு அவள் செய்த காரியத்தை பார்த்து சரவணன் அதிர்ச்சி அடைகிறான்.  அதன் பிறகு என்ன நடந்தது? அவன் இயக்கிய படம் வெளிவந்ததா? சரவணன் என்ன ஆனான்? இப்படி பல முடிச்சுகளுக்கு சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி உள்ளேன்" என்று முடித்தார். இவர் ஏற்கனவே " காதல் பதிவு" மற்றும் "நந்திவரம்" ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆகாஷ் ஸ்ரீதர் இசையையும், திவாகர் எடிட்டிங்கையும் , பவர் சிவா நடனத்தையும், ஏ.எஸ்.உதயசங்கர் ஒளிப்பதிவையும், கமுதி நாகலிங்கம், லாயம் ஷாகுல், தங்கமணி ராகவா மூவரும் பாடல்களையும் ., கலைவாணி இணைத்தயாரிப்பையும் கவனித்துள்ளனர்.கதை திரைக்கதை வசனம் இயக்கம் பிரபு இராமானுஜம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா