சற்று முன்

அருண் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு வெளியிட்ட நேதாஜி மோஷன் டீஸர் !   |    எனது அடுத்த படத்தில் ஒரு கதாநாயகி இலக்கியா... நடிக்க எனக்கு ஒரு தயக்கம் இருந்தது!   |    மாணவர்களுக்காக இயக்குனர் வெற்றிமாறன் எடுத்துள்ள புதிய முயற்சி!   |    திருநங்கைகள் தினத்துக்காக திருமூர்த்தியின் உருக்கமான குரலில் உருவான பாடல்   |    'டிரைவர் ஜமுனா' பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!   |    OTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்   |    சாந்தி செளந்தரராஜனின் கதை பூஜையுடன் முதல் கட்ட படப்பிடிப்பு துவங்கியது   |    சூரி - ஆரி இணைந்து வெளியிடும் 'கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் வீடியோ!   |    குடும்பப்பாங்கான கதையை திரில்லர் ஜானருடன் கலந்து சொல்லுவதே 'ஒற்று'   |    தனுஷ் படத்திற்கு விஜய்சேதுபதி போட்ட ட்வீட்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்   |    பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரஜினி, கமல் மோதலா! - காரணம்   |    தன்னுடைய திருமணம் பற்றி அதிரடி தகவல் தந்த சுனைனா!   |    வீரப்பனின் மகள் விஜயலட்சுமி அறிமுகமாகும் 'மாவீரன் பிள்ளை'   |    ஏ ஆர் ரஹ்மான் 99 சாங்ஸ்-ஐ கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்கு அறிவித்துள்ள போட்டி   |    அஜித் மற்றும் கமலால் திருமணம் செய்ய பயப்படும் ஆண்கள் - இயக்குனரின் பகீர் குற்றச்சாட்டு   |    பிரபுதேவாவை 'பஹீரா'வுக்காக 10 மாறுபட்ட தோற்றங்களில் வடிவமைத்த ஜாவி தாகூர்!   |    குக் வித் கோமாளி நடிகைக்கு ஹீரோவாக நடிக்கும் நடிகர் சதீஷ்   |    3 வருடங்கள் பொறுமையாக இருந்து படத்தை திரையரங்கில் வெளியிட்ட தயாரிப்பாளருக்கு நன்றி - கார்த்தி   |    'பிக்பாஸ்' புகழ் சாக்சி அகர்வால் நடிக்கும் ‘தி நைட்’   |   

சினிமா செய்திகள்

மாடல், டப்பிங் கலைஞர், நடிகர் என பன்முகங்களை கொண்ட ‘பாரிஸ் ஜெயராஜ்’ பட நடிகர்!
Updated on : 25 February 2021

நடிகர் விவந்த் அவர்கள் சமீபத்தில் வெளியான ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.   

திரையுலகில் இவர் முன்பே பரீட்சயமானவர், இவர் நாளைய இயக்குனர் சீசன் 4 இல் திரையிடப்பட்ட ஒரு குறும்படத்தில் இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.   நடிகர் விவந்த் அவர்கள் கூறுகையில், “எனது முதல் படம் 2014 இல் வெளியான 'இருக்கு ஆனா இல்ல' திரைப்படம். இந்த படம் எனது நடிப்புக்கு ஒரு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது, எனது இரண்டாவது படம் 2018 ஆம் ஆண்டில் வெளியான 'ஏகாந்தம்', இது கிராமப்புற அடிப்படையிலான படம். எனது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் 'நயம்', இது திகில்- திரில்லர் கதையம்சம் கொண்டது.  

 நடிகர் சந்தனம் அவர்களின் 'பாரிஸ் ஜெயராஜ்' ல் எனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பிற்கு நான் மிகவும்  மகிழ்ச்சியடைகிறேன்.  இந்த படத்தின் ஒரு பகுதியாக எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கிய நடிகர் சந்தானம் அவர்களுக்கும், இயக்குனர் ஜான்சன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.  படம் பார்த்த பிறகு, தொழில்துறையைச் சேர்ந்த பலர் என்னை வாழ்த்தினர், இப்போது எனக்கு நிறைய பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன” என்கிறார் நடிகர் விவந்த். 

 2005 முதல் புகழ்பெற்ற டப்பிங் கலைஞராகவும், வரவிருக்கும் பல ஹீரோக்களுக்கும் இவர் குரல் கொடுத்துள்ளார். இவர் திரைப்படங்களில் திறமையான நடிகராகவும் மற்றும் மிக சிறந்த டப்பிங் கலைஞராக மட்டுமின்றி, செய்தித்தாள் மற்றும் டிவி விளம்பரங்களிலும் மாடலாக நடித்துள்ளார்.  ஜோயலுக்காஸ், கே.ஆர்.ஜி நெய், ஆலயா வேஷ்டி, ஹமாம் சோப், ஆச்சி மசாலா, 999 லுங்கி, போத்தீஸ், சென்னை சில்க்ஸ், கலர் ஹோம்ஸ், சென்னை மெட்ரோ டெஸ்டிமோனி, நிப்பான் பெயிண்ட்ஸ் , ஹார்லிக்ஸ், ஜாரா பார்லர், சரவணா ஸ்டோர்ஸ், சுதா மருத்துவமனை, தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ்  மற்றும் பல விளம்பரங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா