சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த 'செந்தூரப்பூவே' தர்ஷாகுப்தா - ஆனந்த கண்ணீர் விட்ட ரசிகர்கள்!
Updated on : 25 February 2021

"குக்வித்கோமாளி" நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பாமர மக்கள் வரை சென்று சேர்ந்தவர் தர்ஷாகுப்தா. மெகாஹிட் திரைப்படமான "திரொளபதி" படத்தின் இயக்குனர் மோகன் ஜியின் அடுத்த படமான "ருத்ர தாண்டவம்" படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் தர்ஷாகுப்தா. இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் கூடியிருக்கிறது.



 



ஸ்லிம் நயன்தாரா தர்ஷாகுப்தா இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்ததை தொடர்ந்து, தனது ரசிகர்களை சந்திக்க நினைத்தார். 



 



சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தனது ரசிர்களோடு இந்த மகிழ்ச்சியை கொண்டாட விரும்பினார். மதுரை, கன்யாகுமாரி, திருச்சி, கோயமுத்தூர் என பல ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் சென்னை வந்தனர்.  300 க்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி விருந்தும் சாப்பிட்டார். இந்தியாவில் ஒரு நடிகை தனது ஷோஷியல் மீடியா ரசிகர்களை சந்திப்பது, இதுவே முதல் முறையென்று நினைக்கிறோம். 



 



 



       



ரசிர்கள் கொடுத்த கிப்ட், பூங்கொத்துகளை பெற்றுக்கொண்ட தர்ஷாகுப்தா, ரசிகர்கள் கேட்ட பல்வேறு வகையான கிடுக்குப்பிடி கேள்விகளுக்கும் ரசித்துக்கொண்டே சாதுர்யமாக பதில் கூறினார்.



 



தர்ஷா குப்தா பேசும் போது எனக்கு 1 மில்லியன் பாலோயர்ஸ் வர நீங்கள் மட்டும் தான் காரணம். எனக்கு குடும்பம் என்பதே நீங்கள் தான். அதனால் தான் இந்த நிகழ்வை உங்களோடு கொண்டாட விரும்பினேன் என்று கூறினார். 



 



ரசிகர்களின் குடும்பத்தாரோடு வீடியோ காலில் பேசிய போது, உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் நெகிழ்ந்து போனார்கள். சிலரால் ஆனந்த கண்ணீரை அடக்க முடியவில்லை. 



 





 



தற்போது ஸ்லிம் நயன்தாரா தர்ஷாகுப்தா மிகப்பெரிய பேனர் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா