சற்று முன்

இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |   

சினிமா செய்திகள்

'சங்கத்தலைவன்’ திரைப்படம் பிப்ரவரி 26ம் தேதி திரைக்கு வருகிறது
Updated on : 24 February 2021

'தறியுடன்’ என்ற நாவலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள ‘சங்கத்தலைவன்’ திரைப்படம் பிப்ரவரி 26ம் தேதி திரைக்கு வருகிறது. சமுத்திரகனி , கருணாஸ் , ரம்யா சுப்ரமணியன் , சுனு லட்சுமி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை மணிமாறன் இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் வெற்றிமாறன் பட்டறை படைப்பாளி. இருவரும் சிறு வயது முதல் நண்பர்களும்கூட. இப்படத்தினை உதய் புரடெக்‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.



 





நடிகர் கருணாஸ் பேசியது,



 



வாய்ப்பளித்த மணிமாறன் அவர்களுக்கு நன்றி. இப்படியான படத்தை தயாரித்த வெற்றிக்கும் நன்றி. அசுரனில் என் மகனுக்கு வெற்றிமாறன் மூலமாக எப்படி ஒரு பெயர் கிடைத்ததோ..அதேபோல் எனக்கு இந்தப்படம் மூலமாக ஒரு வாய்ப்பை வெற்றிமாறன் தயாரிப்பில் கொடுத்திருக்கிறார். நாவல் எழுதிய பாரதிநாதன் சாருக்கும் நன்றி. பொல்லாதவன் படத்தில் இருந்தே வெற்றிமாறனைப் பார்த்து வருகிறேன். அதேபோல் வெற்றிமாறனும் மணிமாறனும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இரண்டு பேரும் சண்டைப்போடுவார்கள். ஆனாலும் நட்பைப் பேணி வருகிறார்கள். இப்படியான நண்பர்களோடு இணைந்து வேலை செய்தது பெருமையாக இருக்கிறது. படத்தில் என் மாப்பிள்ளை சமுத்திரக்கனி மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் நடித்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அனைவருக்கும் நன்றி" என்றார்.



 





வெற்றிமாறன் பேசியது.







"சங்கத்தலைவன் படம் ஒரு பெட்டரான படம். இந்தமாதிரியான கதையை படம் பண்ணுவது என்பது இங்கு பெரிய சாதனையான விசயம். இந்தப்படத்தை எடுக்க வேண்டும் என்று கருணாஸ் உதயா வலியுறுத்தினார்கள். இந்தப்படத்திற்கு சமுத்திரக்கனி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அவரும் வந்தார். இந்தப்படத்திற்காக ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளார்கள்.

இந்தப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான டென்சனை இப்போது தான் சந்திக்கிறேன். எனக்கு தியேட்டர்களில் நேரடியாக படத்தை வெளியிட்ட அனுபவம் கிடையாது. அதனால் இந்தப்படம் வெளியாக தாணு சார் தான் நிறைய உதவிகளைச் செய்து வருகிறார். இந்தப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.



 







நடிகர் சமுத்திரக்கனி பேசியது







"சங்கத்தலைவன் நானும் இப்போது தான் பார்த்தேன். பிரமிப்பாக இருக்கிறது. இந்தப்படத்திற்காக நிறைய உழைச்சிருக்கோம். இந்தக்கதையை நாவலாக எழுதியிருந்த பாரதிநாதன் அவர்களுக்கும், அழகாக எடுத்திருந்த மணிமாறன் அவர்களுக்கும், படத்தை தயாரித்த எங்கள் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கும் நன்றி. படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். இறைவன் கொடுத்த பரிசாக தான் இந்தப்படத்தைப் பார்க்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி" என்றார்



 





இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம் பேசியது,



"இந்தப்படம் தந்த வெற்றிசார் மணிமாறன் சார் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை அனைவரும் பாருங்கள். படத்திற்கு சப்போர்ட் செய்யுங்கள். நன்றி" என்றார்.



 







இயக்குநர் மணிமாறன் பேசியது







"இந்தக்கதையை ரொம்ப சாதாரணமா சொல்லிடலாம். ஆனால் சில கன்டென்ட்கள் புரியாது. வெற்றிமாறன் சாருக்கு தயாரிப்பாளரா இந்தப்படம் மீது ஒரு பயம் இருந்திருக்கும். இப்போது கூட இருக்கும். ஏன் என்றால் படத்தில் பேசி இருக்கும் விசயங்கள் அப்படியானது.  அனைவருக்கும் நன்றி" என்றார்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா