சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

சினிமா செய்திகள்

பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கும் ரொமான்ஸ் திரில்லர் கலந்த 'உன் பார்வையில்'
Updated on : 22 February 2021

பிக்பாஸ் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தற்போது ஒரு ரொமான்ஸ் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். “உன் பார்வையில்” எனும் இப்படத்தை Kaho na pyar hai, Pardes, Taal  போன்ற பாலிவுட் மெஹா ஹிட் படங்களின் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இப்படத்தினை இயக்குகிறார். இது தமிழில் இவருக்கு அறிமுகப்படமாகும்.  



 



இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மராட்டி பெங்காலி மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.



 







ரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்லாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் பிஸினஸ் உமனாகவும் நடிக்கிறார்கள். படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது.



 





 



 

நடிகர் கணெஷ் வெங்கட்ராம் பேசியதாவது,  Kaho na pyar hai, Pardes, welcome back போன்ற பல படங்களில் கபிர் அவர்கள் ஒளிப்பதிவில் செய்த மேஜிக் கண்டு பிரமித்திருக்கிறேன். அவர் என்னிடம் கதை சொன்னபோது படு பரபரப்பான சுவாரஸ்யம் மிகுந்த கதையாக இருந்தது. ர்ன் கதாப்பாத்திரம் பல அடுக்குகள் கொண்டதாக இருந்தது. இம்மாதிரியான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கவே காத்திருந்தேன். படம் அழகாக உருவாகி வருகிறது.



 





 



பார்வதி நாயர் கூறியதாவது பேசியதாவது, நடிப்புக்கு சவால் தரும் கதாப்பத்திரம் என்னுடையது. என் முழு உழைப்பை தந்து நடித்திருக்கிறேன். கணேஷ் வெங்கட்ராம் மிகச்சிறந்த நடிகர். படப்பிடிப்பில் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார். கபீர் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும்  அமைக்கும் விதம் அதை படமாக்கும் விதம் பிரமிப்பானது.



 





“உன் பார்வையில்” படத்தினை  Lovely World Production சார்பில் அஜய் சிங் தயாரிக்கிறார். பரபரப்பாக உருவாகிவரும் இப்படத்தினை வரும் ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா