சற்று முன்
சினிமா செய்திகள்
அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் - மார்ச் 12ஆம் தேதி படம் ரிலீசாகிறது!
Updated on : 21 February 2021

அஜித் கதாநாயகனாக நடித்த “பில்லா” திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளியாகியது விஷ்ணுவர்தன் இயக்கிய அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா.
பிரபு ரகுமான், சந்தானம், ஜான் விஜய் ஆகியோர் நடித்திருந்த அந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நமிதா நடித்திருந்தார்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான “பில்லா” முழுக்க முழுக்க மலேசியாவிலே படமாக்க பட்டது.
ஆனந்தா பிக்சர் சர்க்யூட் என்ற நிறுவனத்தின் சார்பில் எல்.சுரேஷ் தயாரித்த இந்தத் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
வித்தியாசமான ஸ்டைலில் அஜீத் நடித்திருந்த “பில்லா” நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்ச் 12ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
அஜித்தின் படம் திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகின்றது என்பதால் பில்லா படத்தை உற்சாகமாக வரவேற்க அஜித் ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.
சமீபத்திய செய்திகள்
லிங்குசாமி படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை
தெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிகளால் அசத்தி வரும், துறுதுறுப்பான இளம் நடிகரான, ராம் பொதினேனி, தமிழ் சினிமாவின் மாஸ் கமர்ஷியல் கிங், சண்டக்கோழி (Pandemakodi), பையா ( Awara ), வேட்டை ( Thadaka ) படப்புகழ் இயக்குநர் லிங்குசாமியுடன் புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.
ஒரு சில வாரங்களுக்கு முன் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இன்று படக்குழு படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரபல இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் நடிகர் ராம் பொதினேனி ஜோடியாக நடிக்கிறார்.
#RAPO19 திரைப்படம் முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ் ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. கமர்ஷியல் படங்களின் கிங் இயக்குநர் லிங்குசாமி தன் தனித்த முத்திரையில், ஸ்டைலீஷ் மாஸ் மசாலா படமாக இப்படத்தை உருவாக்குகிறார்.
மிகப்பெரும் பட்ஜெட்டில் பெரும் ஆளுமைமிக்க தொழில்நுட்ப கலைஞர்களுடன் மாஸ் ஆக்சன் படமாக #RAPO19 படம் உருவாகிறது.
தயாரிப்பாளர் சித்தூரி ஶ்ரீனிவாசா Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் 6 வது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்.
சஸ்பென்ஸ் திரில்லராக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆறா எனும் ஆரா'
அஷோக்குமார் கதாநாயகனாகவும், ஸ்வேதா ஜோயல் கதாநாயகியாகவும் நடிக்கும் ஆக்க்ஷன், சஸ்பென்ஸ் திரில்லர் படம் "ஆறா எனும் ஆரா". இந்த படத்தை இணை தயாரிப்பாளர் ஜோஸ். ஸ்டீபன்.ஜெ எழுதி இயக்க, சாபு அவர்கள் சாபு பிக் டிவி பானரில் தயாரித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் நிழல்கள் ரவி, மனோபாலா, ஆனந்தராஜ், பில்லி, ஷைனி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
சுலக் ஷா டாடி இசையில், ரக்சகன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். ரவிசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய. கலை இயக்கம் சியோ ஜோஸ், .எடிட்டிங் விபின்,. புரொடக்ஷன் கன்ட்ரோலர் செபாஸ்டியன்.ஜெ . ஜாக்கி ஜான்ஸன் சண்டை காட்சிகளை அமைக்க, நடனம் செல்வி மாஸ்டர்.
தொடர்ந்து சென்னை மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தி, வெகு விரைவில் இரு மொழிகளிலும் பிரமாண்டமாக உருவாகி திரைக்கு வரும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
வெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது முதல் படி - கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா
பெண்கள் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த பெண்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் நடிகை, இயக்குனர் கலைமாமணி டாக்டர். ஜெயச்சித்ரா அவர்கள் கலந்து கொண்டார். அவர் தன்னுடைய திரையுலக வாழ்க்கை பற்றியும் தன்னுடைய விருதுகள் பற்றியும் பெண்களின் சாதனைகளின் அத்யாவசியம் பற்றியும் அவர் பேசியிருந்தார்.
முதலில் நான் திரைத்துறையில் ஈடுபாடு இல்லாமலே இருந்தேன் ஆனால் பொண்ணுக்கு தங்க மனசு படம் மூலம் நான் வாழ்வில் ஜெயித்தாக வேண்டும் என்ற உத்வேகத்தை வளர்த்து கொண்டேன். மேலும் இந்த விழாவை 45 ஆண்டுகளாக நடத்தி வரும் என் அன்பு சகோதரர் பாபுவுக்கே இந்த பெருமை போய் சேர வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் கடினமாக உழைக்கும் அனைவருக்கும் அவரவரின் வெற்றி கைவசம் வரும். இந்த விருது ஒரு துவக்கம் மட்டுமே.. வெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது ஒரு முதல் படி என உணர்வு பூர்வமாக பேசினார் இயக்குனர் கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா அவர்கள்
படப்பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்'
வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரிக்கவுள்ளார். 'மோகன்தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது. அப்போதே பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லரைக் காணவுள்ளோம் என்பதை உணர்த்தியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர்களின் அறிவிப்புகள் என அனைத்திலுமே எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது.
'மோகன்தாஸ்' படத்தை 'களவு' படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்திய முரளி கார்த்திக் இயக்கவுள்ளார். இந்தப் படம் ஒரு எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையாகும். பார்வையாளர்களுக்குக் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறது படக்குழு. இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு நாயகியாக தன் நடிப்பால் ஆச்சரியப்படுத்தி சமீபத்தில் கலைமாமணி விருதினை வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். வித்தியாசமான கதைகள் வந்தால் தமிழில் நடிக்கும் இந்திரஜித் சுகுமாரன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன்,அக்ஷய் ராதாகிருஷ்ணன்,ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 'மோகன் தாஸ்' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள விஷ்ணு விஷாலுக்கு அவருடைய திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 'களவு' படத்தில் தன்னுடைய பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடனே இந்தப் படத்திலும் பணிபுரியவுள்ளார் முரளி கார்த்திக்.
த்ரில்லர் படங்களின் ரசிகர்களுக்கு விரைவில் ஒரு அறுசுவை விருந்து காத்திருக்கிறது என்று நம்பலாம்.
அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே! - விமல்
என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்.
திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே ஆகும்.
மேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளர் (PRO) பிரியாவிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று திட்டவட்டமாக நடிகர் விமல் கூறி இருக்கிறார்.
ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி
ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிரிஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
மணி பாரதி இயக்கும் இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவை கவனிக்கிறார் மற்றும் தாஜ் நூர் இசையமைக்கிறார். இதைத் தொடர்ந்து எடிட்டிங் பணிகளை அகமது மேற்கொள்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு தற்போது ஊட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
பிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால்!
காஜல் அகர்வால் ஏற்கனவே ஹேய் ஆச்சார்யா, இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், சினாமிகா, கோஸ்டி, ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் ஜெப்ரி ஜி சின் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படம் உலகின் மிகப்பெரிய ஐடி ஊழல் கதையம்சம் கொண்ட திரைப்படம்.
சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்திற்கு தமிழில் ’அனு அண்ட் அர்ஜுன்’ என்ற டைட்டிலும், தெலுங்கில் மொசகாலு’ என்ற டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'
சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”.
இப்படம் இப்பொழுது சுட சுட தமிழில் உருவாகிறது. சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான R.கண்ணன் இப்படத்தினை தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் -க்கு ‘காக்காமுட்டை’, ‘கனா’, ‘க/பெ.ரணசிங்கம்’ போன்ற படங்கள் நல்ல பெயரையும் வசூலையும் பெற்று தந்தது. அது போல் இப்படமும் அவருக்கும் ஒரு பெரிய மைல் கல்லாக அமையும். மற்ற நட்சத்திர தேர்வு நடைப் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்புகளை தரும் தரமான இயக்குநர் எனும் பெயரை பெற்றிருக்கிறார் இயக்குநர் R.கண்ணன். ‘ஜெயம் கொண்டான்’ வெற்றிப்படத்துடன் அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பிஸ்கோத்’ என பல வகை ஜானர்களிலும் வித்தியாசமான படங்கள் தந்து தரமான இயக்குநர் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார்.
மேலும் இதனை தொடந்து அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்த “தள்ளிப் போகாதே” ரொமான்ஸ் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் , இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து, சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும்பாராட்டுக்களை குவித்த “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படத்தை தமிழில் உருவாக்கம் செய்கிறார்.
சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியான இப்படம் இன்றைய இளையதலைமுறை தம்பதியனரிடம், பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. தற்காலத்திய நாகரீக உலகிலும், பெண்கள் இன்னும் சமையலறையில் தான் முடக்கப்படுகிறார்கள், என்பதை அழுத்தமான வகையில் பதிவு செய்திருந்த இப்படம் பார்வையாளர்கள், விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது.
இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் படபிடிப்பு ஆரம்பமாகிறது. தமிழ் - தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரையுலகில் மாடல் மற்றும் நடிகையாக விளங்குபவர் அக்ஷ்ரா கௌடா. இவர் தமிழில் உயர்திரு 140 படத்தில் அறிமுகமானார், அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆரம்பம் படத்தில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
தற்போது அவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் எனும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் சூர்ப்பனகை எனும் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நல்ல கதைக்களம் கொண்ட சிறந்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது
டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படம் அருண் விஜய்யின் 33வது திரைப்படம் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாயின.
அதை உறுதிசெய்யும் விதமாக இன்று இந்த படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. இந்த பூஜையில் அருண் விஜய், ஹரி, பிரியா பவானி சங்கர், விஜயகுமார், ஹரியின் மனைவி ப்ரீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க இருக்கிறார்.
இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக செய்திகள்
- |
- சினிமா