சற்று முன்

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது   |    ‘திரௌபதி 2’ – 14 ஆம் நூற்றாண்டை திரையில் பிரம்மாண்டமாக காட்டும் வரலாற்று ஆக்ஷன்!   |    சீனு ராமசாமியின் ‘நிலத்தவள்’ கவிதை நூல் வெளியீடு   |    கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியில் பிரம்மாண்ட பொங்கல் வெளியீடு “வா வாத்தியார்”   |    இரா. சரவணனின் ‘சங்காரம்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது   |    வைரலாகும் ‘லக்கா லக்கா லடுக்கி’ ‘தீராப்பகை’ பட குத்து பாடல்!   |    திகில், திரில்லர், அதிரடி என 2026-ஐ அதிரடியாக தொடங்கிய ZEE5 தமிழ்   |    சர்வதேச திரைப்பட விமர்சன தள தரவரிசையில் ‘பைசன் காலமாடன்’ சாதனை!   |    சென்னையில் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப கருத்தரங்கம்!   |    100 நாட்கள் வெற்றி… உலகத் திரையரங்குகளை நோக்கி 'காந்தாரா சேப்டர் 1'   |    ’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!   |    பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட் - மூன்று வில்லன்கள் அறிமுகம்!   |    பல சவால்களை தாண்டி 'பராசக்தி' படத்தை படமாக்கினேன் - இயக்குநர் சுதா கொங்கரா!   |    அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும் - நடிகை ஸ்ரீலீலா!   |    பல தருணங்களில் சிவகார்த்திகேயனை பார்த்து வியந்திருக்கிறேன் - நடிகர் ரவி மோகன்!   |    யாஷ் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யாஷ் கதாபாத்திரத்திர அறிமுக முன்னோட்டம்!   |    “ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன் - நடிகர் அதர்வா முரளி!   |    அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஜாக்கி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை!   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபுவுக்கு கலைமாமணி விருது
Updated on : 20 February 2021

2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்த விருது அறிவிக்கப்படுகிறது. இதனையடுத்து நடிகர், நடிகையர், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுபெறும் கலைஞர்களின் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 



 





 

அதன்படி இளம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது அளிக்கப்படுகிறது. மேலும் இந்த விருது பெறுவோர்களின் பட்டியலில்  நடிகர்கள் யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி இடம் பெற்றுள்ளனர். 



 





 



மேலும் இயக்குநர்கள் கவுதம் மேனன், ரவிமரியா,  பாடகர்கள் ஜமுனா ரவி, அனந்து, சுஜாதா, தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு,  ஐசரி கணேஷ், இசையமைப்பாளர் D இமான், தினா,  வசனகர்த்தா M பிரபாகர்  உள்ளிட்டோரும் இவ்விருதை பெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.



 





இதேபோல் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, பாடகி பி.சுசீலா மற்றும் நடன கலைஞர் அம்பிகா காமேஷ்வர் ஆகியோருக்கு 2019-ம் ஆண்டுக்கான புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்கான புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி மற்றும் நடன கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



 



தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விருதுகளை வழங்கியுள்ளார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா