சற்று முன்

அஜித்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டில் வாழ்த்தி என்ன கூறியிருக்கிறார் பாருங்கள்!   |    ப்ரியங்கா சோப்ராவும், நயன்தாராவும் தான் எனக்கு ரோல் மாடல்   |    'உலகம் சுற்றும் வாலிபன்' புது பொலிவுடன் மீண்டும் ரிலீஸ்   |    நடிகை ரோஜா மாயத்திரை பட பாடலை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்   |    டி.ராஜேந்தர் வெளியிட்ட ‘உதிர்’ பட பாடல் - உற்சாகத்தில் படக்குழு   |    அமைச்சர் ஜெயக்குமார் கூறிய மகளிர் தின வாழ்த்து   |    இஸ்லாமிய திருமண விருந்தில் கண்ணதாசன் பாடலை பாடி மக்களை அசத்திய அமைச்சர் - பாராட்டிய பாக்யராஜ்   |    கோலாகலமாக நடந்த ஆன்வி டிஜிட்டல் மல்டிப்ளக்ஸ் பிளாட்பார்ம் துவக்க விழா   |    போராட்டங்களே மக்கள் விரோத அரசுகளை அகற்றும் - இயக்குனர் அமீர்   |    ஏ.ஆர்.ரெஹானா தலைமையில் நடந்த ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா   |    இன்று அதிரடி நாயகனாக அனைத்து மக்களாலும் விரும்பப்படும் இவர் யார் என்று தெரிகிறதா?   |    லிங்குசாமி படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை   |    சஸ்பென்ஸ் திரில்லராக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆறா எனும் ஆரா'   |    வெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது முதல் படி - கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா   |    படப்பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்'   |    அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே! - விமல்   |    ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி   |    பிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால்!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'   |    மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை   |   

சினிமா செய்திகள்

நிஜ கால்பந்தாட்ட வீரர்கள் நடிக்கும் 'No 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு'
Updated on : 20 February 2021

'தெரு நாய்கள்', 'படித்தவுடன் கிழித்துவிடவும்', 'கல்தா' ஆகிய படங்களை தயாரித்த இயக்குனர் செ. ஹரி உத்ரா மூலம் I Creations  மற்றும் PSS Productions நிறுவனங்கள் இணைந்து "No 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு" என்ற படத்தை தயாரிக்கிறது. தயாரிப்பாளராக Dr சேவார தீனா, ப்ரீத்தி சங்கர், திருமதி உஷா, செ. ஹரி உத்ரா இணைந்து தயாரிக்கின்றனர்.  

"No 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு" கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்ட படம். இதில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான நிஜ கால்பந்தாட்ட வீரர்கள் கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.  

 

விழையாட்டு விஷயத்தில் எவ்வாறெல்லாம் அரசியல் விளையாடுகிறது என்பதை யதார்த்தமாக ஆக்சன் கலந்து படமாக்கப்படுகிறது. இந்தப்படத்தின் கதை  90 சதவீதம் இரவில் நடப்பது போல் படமாக்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு மதுரை, பரமக்குடி, இராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

இந்த படத்தில் கதாநாயகியாக ஐரா அவருக்கு ஜோடியாக 'அருவி'யில் நடித்த மதன் நடித்துள்ளனர். மேலும் கஜராஜ், விஜய்முத்து, ஹரி, பீம்ஜி, ராசி, அழகப்பன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்.  

 

வில்லனாக ஸ்டண்ட் இயக்குனர் நரேந்திரன் அறிமுகமாகிறார், ஒளிப்பதிவு வினோத்ராஜா, இசை எ.ஜே. அலிமிர்ஸாக், எடிட்டிங் கணேஷ்குமார், கிஷோர்,   ஸ்டண்ட் கோட்டி, நடனம் சசிகுமார், பாடல்கள் 'குவைத்' வித்யாசாகர், செ. ஹரி உத்ரா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  செ. ஹரி உத்ரா. 

இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா