சற்று முன்
சினிமா செய்திகள்
கணேசாபுரம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
Updated on : 20 February 2021

சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் P. காசிமாயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வீராங்கன்.K இயக்கியுள்ள திரைப்படம் கணேசாபுரம். இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாஸ் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்- டாக் ராஜ்பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது...
மதுரை மண்ணின் மையமாகக்கொண்ட இத்திரைப்படம் 90's காலகட்டத்தில் நடைபெறுவதைப் போல் பயணிக்கிறது. இத்திரைப்படத்தில் வீரம், காதல், நட்பு என்று ஒரு ஜனரஞ்சகமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம்.
இதில் நாயகன் சின்னா மற்றும் நாயகி ரிஷா ஹரிதாஸ் புதுமுகங்களை போலல்லாமல் தங்கள் கதாபாத்திரத்தை உள்வாங்கி மிகவும் எதார்த்தமாக நடித்து உள்ளனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வாசு தனது கேமராவின் மூலம் ரசிகர்களை 90 காலகட்டத்திற்கு கொண்டு செல்வார் என நம்புகிறோம் அதேபோல் இசையமைப்பாளர் ராஜாசாயும் தனது இசையின் மூலம் இக்கதைக்கு உயிர் ஊட்டி உள்ளார் எனலாம். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இத்திரைப்படத்தை ஸ்டாண்டர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட உள்ளது..
சமீபத்திய செய்திகள்
ப்ரியங்கா சோப்ராவும், நயன்தாராவும் தான் எனக்கு ரோல் மாடல்
2017 ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானவர் நடிகை சாய்பிரியா அதன் பிறகு மலையாளத்தில் என்டே உம்மன்டே பேரு படத்திலும் நடித்துள்ளார். அவர் மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தமிழில் கௌதம் கார்த்திக் உடன் நடித்து வருகிறார்.
இப்படத்தை எழில் இயக்குகிறார். அவரின் அடுத்த கட்ட பணிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வரும். நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறார். மேலும் சினிமா துறையில் தனது ரோல் மாடலாக நடிகை ப்ரியங்கா சோப்ராவையும் நயன்தாராவையும் கூறியுள்ளார்.
'உலகம் சுற்றும் வாலிபன்' புது பொலிவுடன் மீண்டும் ரிலீஸ்
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். ஆம்... தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது.
இப்படத்தல், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், 'பார்முலா'வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். இதை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ, எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் என்பது தான், கதை.
முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களையும் எம்.ஜி.ஆர்., ஏற்று நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என, மூன்று கதாநாயகியர். நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதை திறமையாக கையாண்டு இருப்பார், இயக்குனர் எம்.ஜி.ஆர்.
விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர், பாடல்களை எழுதினர். 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து வாழ வேண்டும்' உட்பட, அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்தால், எம்.ஜி.ஆர், எவ்வளவு பெரிய திறமைசாலி உண்பது அனைவருக்கும் தெரியும். இப்படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் டால்பி அட்மாஸ் சவுண்டுடன் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிலிம்ஸ் வெளியிட, தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் மற்றும் சரோஜா பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிடுகிறார்கள்.
நடிகை ரோஜா மாயத்திரை பட பாடலை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்
பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார். டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த S .N அருணகிரி இசைமைக்கிறார் .ப.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார் .
இந்த படத்தின் 'ராசத்தியே " என தொடங்கும் இரண்டாவது பாடலை நடிகை ரோஜா இன்று வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார் .இப்பாடலுக்கு S தமன் இசையமைத்துள்ளார்.
மாயத்திரை -இது ஒரு பேய் படம் .ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .இந்தப் படத்தில் அதிகமா பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம் . இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம்.
டி.ராஜேந்தர் வெளியிட்ட ‘உதிர்’ பட பாடல் - உற்சாகத்தில் படக்குழு
ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து, எழுதி இயக்கி, பாடல்கள் எழுதியிருக்கும்‘உதிர்’ படத்தின் பாடல் வரிகள் வீடியோவை வெளியிட்ட டி.ராஜேந்தர், பாடல்களை கேட்டு வெகுவாக பாராட்டியுள்ளார்.
ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’.
டி.ராஜேந்தரின் தீவிர ரசிகராக மட்டும் இன்றி அவரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட ஞான ஆரோக்கிய ராஜா, அவரைப் போலவே பாடல்கள் எழுதி நல்ல திரைப்படத்தையும் இயக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார். அதன்படி, ‘உதிர்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு, அனைத்து பாடல்களையும் எழுதியவர் படத்தை தயாரிக்கவும் செய்தார்.
“நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா...” உள்ளிட்ட பல உலக புகழ்பெற்ற ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்த அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்த் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், பாடல் வரிகள் வீடியோவை டி.ராஜேந்தர் மார்ச் 8 ஆம் தேதி வெளியிட்டதோடு, பாடல்களை கேட்டு, இயக்குநரும் பாடலாசிரியருமான ஞான ஆரோக்கிய ராஜாவை வெகுவாக பாராட்டினார்.
பாடல்கள் குறித்து பேசிய டி.ராஜேந்தர், “மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி ‘உதிர்’ படத்தின் பாடல் வரிகள் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி. படத்தின் பாடல்களை கேட்கும் போதே, கதை உணர்வுப்பூர்வமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகமாக இருந்தாலும், அனைத்தும் கேட்கும் ரகமாக இருப்பதால் ‘உதிர்’ படமும் பாடல்களும் ரசிகர்களின் உயிரோடு கலக்கும் என்பது நிச்சயம். ‘உதிர்’ படம் மூலம் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் அறிமுகமாகும் ஞான ஆரோக்கிய ராஜா, இந்த அனைத்து துறைகளிலும் தொடர் வெற்றிகளை பெற்று பயணிக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
தனது மானசீக குருவான டி.ராஜேந்தரின் ராசியான கரங்களினால் தான் இயக்கிய முதல் படத்தின் பாடல் வரிகள் வீடியோ வெளியானதோடு, அவரிடமே பாடலாசிரியாக பாராட்டு பெற்றதால், ஞான ஆரோக்கிய ராஜா மட்டும் இன்றி ‘உதிர்’ படக்குழுவினர் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர்.
அமைச்சர் ஜெயக்குமார் கூறிய மகளிர் தின வாழ்த்து
அன்னையாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய், மகள்களாய் வாழ்வின் எல்லா காலகட்டங்களிலும் நமக்கு உற்ற துணையாய் உயிர் துடிப்பாய் உடன் பயணிப்பது பெண்கள் தாம்.
கருவறை தொடங்கி, கல்லறை வரையிலும் ஆணினத்தின் அணுவாய் அடையாளமாய் இருப்பது பெண்கள். எங்கெங்கு காணினும் சக்தியடா, ஏழுகடல் அவள் வண்ணமடா என்றான் பாரதி. ஆம் திரும்பிய திசையெங்கும் பெண்கள் இல்லையேல் ஆண்கள் யார் என்பதே இந்த உலகிற்கு தெரியாமல் போய்விடும். அந்த வகையில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று பாடிய பாரதியின் வரிகளை வாழ்நாளில் வாழ்க்கையாய் மாற்றிக் காட்டியவர் புரட்சித்தலைவி இதய தெய்வம் நம் அம்மா.
சமூகநீதி, பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு அரசியல், அதிகாரம், ஆட்சி பீடம் என அடித்தட்டு முதல் அத்தனை பெண்களையும் தோல்வி பள்ளத்தாக்கில் இருந்து கைத்தூக்கி, வெற்றி சமவெளியின் வீதிக்கு அழைத்து வந்தவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா. இன்று உலகமே பெண்ணினத்தை பார்த்து வியந்து நிற்பதற்கும், அண்ணாந்து பார்ப்பதற்கும், அதிசயமாய் கொண்டாடுவதற்கும் காரணம் ஒற்றை பெண்மணி நம் அம்மா!!!
அடுப்பங்கரை தொடங்கி ஆட்சிபீடம் வரையிலும் எல்லா இடங்களிலும் குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் தாய்க்குலங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் மனம் நிறைந்த மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்... ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமல்ல மகளிர் தின வாழ்த்து எல்லா நாட்களும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்து நிச்சயம் உண்டு...
அன்புடன்,
டி.ஜெயக்குமார்
இஸ்லாமிய திருமண விருந்தில் கண்ணதாசன் பாடலை பாடி மக்களை அசத்திய அமைச்சர் - பாராட்டிய பாக்யராஜ்
இன்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 7 ம் தேதி மதியம் ஒரு மணி இருக்கும், சென்னை புரசைவாக்கம் தனியார் திருமண மண்டபத்தின் வாசல் முன்பு வந்து நிற்கிறது அமைச்சர் ஒருவரது கார்... அது இஸ்லாமிய பிரமுகர் ஒருவரது குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. வந்தவர் யாரென அனைவரும் பார்க்கிறார்கள்....
காரில் இருந்து இறங்கியவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பதை பார்த்ததும் மேடையில் பாடிக்கொண்டிருந்த இசைக் கலைஞர்கள் அப்போதே முடிவுக்கு வந்துவிட்டனர், இனிமேல் நமக்கு வேலைக்காகாது அவரே பாடி விடுவார் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டது அவர்களை அறியாமல் மைக்கில் லேசாக ஒலித்தது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். மற்றபடி அவருக்கு பாடும் நோக்கம் எதுவுமில்லை.
ஆனால் இவர் ஏற்கனவே பல மேடைகளில் பாடல்களைப் பாடி மக்களை, தொண்டர்களை ரசிக்க வைத்தவர் என்று தெரிந்த இஸ்லாமியர்கள் சிலர் தங்களுக்காக ஒரு பாட்டு பாடும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து இசைக்கலைஞர்கள் இருந்த மேடைக்கு சென்றார் அமைச்சர் .கலைஞர்களை தன்னுடன் வந்து பாடுமாறு கேட்டுக் கொண்டார். முறைப்படி இசை கற்காவிட்டாலும் கேள்வி ஞானத்தால் பாடி ரசிகர்களை தன் வசப்படுத்தும் அவரைக் கண்டு தயங்கியபடியே வந்த அவர்கள் இவரோடு போட்டி போட முடியுமா இவர் எல்லா இடங்களிலும் நல்லாப்பாடி பேர் வாங்கிட்டு போயிருவாரு என்ற எண்ணத்தோடு தயங்கினர்.
அவர்களை ஊக்கப்படுத்தி இசையமைக்கச் சொல்லி தன்னோடு சேர்ந்து பாடுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து இஸ்லாமியர்களின் விருப்பப்படி எல்லோரும் கொண்டாடுவோம்;எல்லோரும் கொண்டாடுவோம்...அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி என்ற பாடலைப் பாடினார். 1961இல் வெளியான பாவமன்னிப்பு படத்தில் கண்ணதாசன் வரியில், டிஎம் சௌந்தர்ராஜன் குரலில் ஒலித்த இந்தப் பாடலை அமைச்சர் ஜெயக்குமார் பாடியதால் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.இதைப் பார்த்த இயக்குனர் பாக்யராஜ் அமைச்சரை வெகுவாகப் பாராட்டினார்.
இந்து,கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற மத வேறுபாடுகளைக் கடந்து எல்லோரிடமும் எப்போதும்,எல்லா இடங்களிலும் நல்லோரின் வாழ்வை எண்ணி...ஒரே மாதிரியாக பழகக்கூடிய அமைச்சர் இவர் என்பதால்தான் மக்கள் விரும்பும் நாயகராக இன்னமும் அதே தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டி வருகிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை...
கோலாகலமாக நடந்த ஆன்வி டிஜிட்டல் மல்டிப்ளக்ஸ் பிளாட்பார்ம் துவக்க விழா
ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் ஆன்வி.மூவியில் வெளியான "புல்லட் பாபா" மற்றும் "ஸ்வீட் பிரியாணி" திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் வகையில் 'கைதி, மாஸ்டர்' புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ட்விட்டரில் "புல்லட் பாபா" திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ட்வீட் செய்து தனது பங்களிப்பை அளித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலன்களான நடிகர் விவேக் பிரசன்னா, தீபக் பரமேஷ், இயக்குனர் எழில் நம்பி, 'ட்ரிப்' பட தயாரிப்பாளர் பிரவீன்,'சிக்ஸர்' பட தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன், திரு சி. காமராஜ் (ஐஏஎஸ்), திரு எஸ். கண்ணன் (ஐஏஎஸ்) மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.
'நக்கீரன்' கோபால் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இது குறித்து அவர் கூறுகையில், " ஆன்வி மூவியின் இந்த பெரிய முயற்சியை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இவர்களின் இந்த ஆன்வி மூலம் பலக்கனவுகளுடன் வரும் இளைஞர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திரையிடப்பட்ட இரண்டு படங்களும் மிகவும் நன்றாக இருந்தது. இவர்களுக்கு கிடைத்த இந்த இடம் நல்ல தொடக்கமாக அமையும். மேலும் ஆன்வி.மூவியில் மாத மாதம் பணம் கட்ட அவசியம் இருக்காது, விரும்பும் படங்களுக்கு மட்டும் குறைந்த கட்டணம் செலுத்தி பார்த்து கொள்ளலாம். தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் ஆன்வி சென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது." என்று கூறி இரண்டு பட குழுவிற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஆன்வி.மூவியில் வெளியாகும் படங்களை உலகளாவிய மக்கள் எந்தவித தடையுமின்றி விரும்பும் படங்களுக்கு மிகவும் குறைந்த கட்டணம் செலுத்தி பார்க்கலாம். மேலும் ஆன்வி.மூவியில் அடுத்தடுத்து திரைப்படங்கள், வலைத் தொடர்கள், மற்றும் குறும்படங்கள் வெளியிட பட தயாரிப்பாளர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் பணியில் தற்போது இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதில் வெளியாகும் படங்களின் கட்டணங்கள் அனைத்தும் நேரடியாக தயாரிப்பாளர்/இயக்குனரிடம் சேரும்படி செய்துள்ளனர். திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் வலைத்தொடர்கள் போன்றவற்றை இந்த டிஜிட்டல் திரையரங்கில் எந்தவித முன்கட்டணமும் இன்றி தயாரிப்பாளர்கள் வெளியிடலாம். இதில் பிற இணையங்களை போன்று விளம்பரங்கள் இருப்பது கிடையாது. மேலும் இந்த ஆன்வி.மூவி நிறுவனம் விரைவில் இந்தியாவின் திரைப்படங்கள், குறும்படங்கள், இணைய தொடர்கள் மற்றும் பிற வகை தொடுப்புகள் வெளியிட விரும்பும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் விருப்ப தேர்வாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டங்களே மக்கள் விரோத அரசுகளை அகற்றும் - இயக்குனர் அமீர்
முனைவர் பூ.சீனிவாசன் வரவேற்றுப் பேச, பத்திரிகையாளர் ஆர்.சி.ஜெயந்தன் தொகுத்து வழங்க, த.மு.எ.க.ச.,வின் வடசென்னை மாவட்டப் பொறுப்பாளர் ராஜசங்கீதன், இயக்குனர்கள் ரமேஷ் பாலகிருஷ்ணன், விருமாண்டி, எழுத்தாளர் பாலமுரளிவர்மன் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில் இயக்குனர் சேரன் புத்தகங்களை வெளியிட, இயக்குனர் அமீர் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், பேசிய இயக்குனர் சேரன், “எதிர் கருத்துகளே வெற்றிப்பட சினிமாக்களை உருவாக்கும்..” என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசும்போது எதிர்கருத்துள்ள உதவி இயக்குனர்களை தன்னைச் சுற்றி வைத்திருக்கும் இயக்குனர் மட்டுமே ஒரு நல்ல திரைப்படத்தை, வெற்றிப் படைப்புகளை உருவாக்க முடியும் என்றார்..
புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு பேசிய இயக்குனர் அமீர், “பாசிச, மக்கள் விரோத அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் இங்கு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அதாவது எழுத்தாயுதங்களை உருவாக்கித் தரும் படைப்பாளிகள் தேவைப்படுகின்றனர். கவிஞர்கள், எழுத்தாளர்களின் தலையாய பணி காதலை எழுதுவதை விட, சமூகப் பிரச்னைகளை எழுதுவது தான். போராட்டங்களே மக்கள் விரோத அரசுகளை அகற்றும். அப்போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டியது, முழக்கங்கள் தான். அம்முழக்கங்களை உருவாக்க வேண்டியது, கவிஞர்கள் தான். அது காலத்தின் தேவை,” என்று கூறினார்.
பதிப்பாளர் ஜீவா படைப்பகம் கார்த்திக் புகழேந்தி நன்றி கூறினார்.
ஏ.ஆர்.ரெஹானா தலைமையில் நடந்த ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா
இந்த அமைப்பு தற்போது எட்டாவது முறையாக ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவை நடத்தினர். இந்த விழா கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேசிய மகளிர் தினத்தை பாராட்டி நடந்த இந்த விழாவை, ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நல்லிணக்க தூதுவர் ஏ.ஆர்.ரெஹானா தலைமை வகித்தார், அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலை வகித்தார்,.
இந்த வருடம், ரெயின்ட்ராப்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதினை 105 வயதான இயற்கை விவசாயி பாப்பம்மாள் மற்றும் 93-வயதான மூத்த சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி கிருஷ்ணன் பெற்றுக்கொண்டனர்.
சிறந்த ஆளுமைக்கான விருதினை இளம் வனதுறை அதிகாரி சுதா ராமன் ஐ.எப்.எஸ், சிறப்பு அங்கீகாரத்தை இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மோண்டல், குயின் ஒப் தமிழ் சினிமா - சிறந்த நடிகைக்கான விருதினை ஊர்வசி, சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதினை இந்திய கூடைப்பந்து மகளிர் அணி கேப்டன் அனிதா பால்துரை, நம்பிக்கையிற்கான விருதினை சென்னை உயர்நீதிமன்ற முதல் பார்வை சவால் கொண்ட வழக்கறிஞர் கற்பகம், சிறந்த இயற்கை விசாயிக்கான விருதினை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பரிமளா தேவி, வீரத்திற்கான விருதினை சென்னை விமான நிலையத்தின் முதல் பெண் தீயணைப்பு வீரர் ரெம்யா ஸ்ரீகாந்தன், கருணைக்கான விருதினை டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன், இளம் விஞ்ஞானிக்கான விருதினை திருவண்ணாமலையை சேர்ந்த 14 வயது சிறுமி வினிஷா உமாசங்கர், இந்தியாவின் முதல் பெண் கனரக வாகன ஓட்டுநர் ஜோதிமணி கௌதமன், தமிழகத்தின் முதல் பெண் 108 ஓட்டுநர் வீரலட்சுமி, இடுகாடுகளில் வெட்டியாள் வேலை செய்யும் கோவையை சேர்ந்த வைரமணி, பிரபல வீணை இசை கலைஞர் புண்யா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பெண் சாதனையாளர்கள் 'சாதனை பெண்கள் விருதுகளை’ பெற்றனர்.
பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ், இயக்குனர் பி வாசு, காவல்துறை அதிகாரி சரவணன், விஜிபி குழுமத்தின் நிறுவனர் டாக்டர் வி. ஜி. சந்தோஷம், பாடகர் ஸ்ரீனிவாஸ், வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா, வருமான வரித்துறை அதிகாரி நந்தகுமார் IRS, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், விஜிபி குழுமத்தின் இயக்குனர் ராஜாதாஸ், தணிக்கைக் குழு அதிகாரி லீலா மீனாட்சி, நடிகை நீலிமா உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் இது குறித்துக் கூறுகையில், சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் சாதனைப் பெண்கள் விருது விழாவை நடத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. ஒவ்வொரு துறையிலும் இருக்கும் பெண் சாதனையாளார்களை அடையாளம் கண்டு நாங்கள் விருது வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக கொரோனா காலங்களில் அயராது மக்கள் சேவையாற்றிய பெண் முன்கள பணியாளர்களையும் இவ்விழாவில் கௌரவித்ததில் பெருமை அளிக்கிறது என்றார்.
இன்று அதிரடி நாயகனாக அனைத்து மக்களாலும் விரும்பப்படும் இவர் யார் என்று தெரிகிறதா?
அசாத்தியங்களை சாத்தியங்களாக்கும் மனிதன்...விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு முக்கியமான சான்றாக இருப்பவர்களில் இவரும் ஒருவர். இந்த படம் எடுக்கும் போது வயது 15,ஒன்பதாம் வகுப்பு மாணவன். பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் முனைப்போடு செயல்பட்டு அணித்தலைவராக கோலோச்சிய காலகட்டமது.
எப்போதுமே இருக்குமிடத்தில் தான் முன் வரிசையில் நிற்க வேண்டும்.தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருந்திருக்கிறது. அதன் காரணமாகவே பள்ளியில் படிப்பிலும் சரி விளையாட்டு போட்டிகளிலும், பேச்சிலும் சரி அனைத்திலுமே முதல் மாணவனாக திகழ்ந்து வந்திருக்கிறார் இந்த சிறுவன்.
சென்னை ராயபுரத்தில் டான்பாஸ்கோ ஆரம்பப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பை முடித்துவிட்டு, ராயபுரம் கே.சி.சங்கரலிங்கம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படித்து வந்த காலகட்டம் மிக முக்கியமானதாக இவருக்கு அமைந்திருக்கிறது.
ஆம்! தலைமைப் பண்பும் ஆளுமைப் பண்பும், அசாத்திய திறமையும் கொண்ட இந்த மாணவன் ஆசிரியர்களின் செல்லப் பிள்ளையாய் வலம் வந்திருக்கிறார். ஒரு காலகட்டத்தில் இவரது செயல்பாடுகளை உற்று கவனித்த தலைமை ஆசிரியர்,மற்ற ஆசிரியர்கள் முன்னிலையில் இந்த மாணவனை அழைத்து நீ படித்து முடித்து என்னவாக மாறுவதற்கு ஆசைப்படுகிறாய் என்று கேட்டிருக்கிறார். அப்போது சிறுவன் சொன்ன பதில்தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் உறைய வைத்தது.
" நான் அரசியல்வாதியாக மாறப் போகிறேன், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்" என்று பளிச்சென இந்த மாணவன் சொன்ன பதில் ஆசிரியர்களை ஆச்சரியப்பட வைத்தது. இந்த பதில் வித்தியாசமான கோணத்தில் இருந்தாலும் கூட அன்று யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை,அந்த நம்பிக்கையும் யாருக்கும் வரவில்லை. (சிறுவன் இந்த பதில் சொல்வதற்கு இன்னொரு காரணம் இருந்திருக்கிறது. அண்ணாதுரை ஆட்சிக் காலத்தில் இவரது அப்பா துரைராஜ் மாநகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். அப்பாவின் மக்கள் சேவையே பார்த்து அரசியல் எண்ணம் இவரது மனதில் விழுந்ததால் இந்த பதிலை பளிச்சென சொல்லி இருக்கலாம்).
ஆனால் கல்லூரி முடித்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியலுக்குள் நுழைய ஆரம்பித்து இன்றைக்கு அதிரடி நாயகனாக அனைத்து மக்களாலும் விரும்பப்படும் மிகச் சிறந்த ஆளுமையாக உருவெடுத்து நிற்கிறார் இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் சிறுவன்...
அவர் தாம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் இயக்கத்தில் எம்ஜிஆர் காலம், ஜெயலலிதா காலம், இன்றைய எடப்பாடி பழனிச்சாமி காலம் வரையிலும் அனைவராலும் அடையாளப்படுத்தப்பட்ட ஆகச் சிறந்த ஆளுமையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். காரணம் என்னவென்றால் எல்லோரிடமும் எளிமையாகப் பழகும் பண்பும்,உதவும் மனமும் தான் அவரை இந்த இடத்தில் வந்து அமர வைத்திருக்கிறது.
இத்தனை ஆண்டுகள் மிகப்பெரிய இடத்தில் அரசியல் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது என்பது எளிதான விஷயமல்ல. அத்தனைக்கும் காரணம் இந்த படத்தில் இருக்கும் சிறுவன் அன்று தன் ஆசிரியரிடம் சொன்ன மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன் வார்த்தைகளை வாழ்க்கையாக மாற்றியதால் இந்த இடத்தில் இன்னமும் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்....
- உலக செய்திகள்
- |
- சினிமா