சற்று முன்

ஜனவரி 15 அன்று பூஜையுடன் தொடங்குகிறது பிரபாஸின் - சலார்   |    தமிழக முதல்வர் வெளியிடும் பட பாடல்!   |    எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் !   |    அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா   |    விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன   |    விஜய்க்காக தயார் செய்த கதையில் சிவகார்த்திகேயன்   |    சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்   |    விஜய்யுடன் ஆண்ட்ரியாவின் மாஸ்டர் பட புகைப்படம் வைரல்   |    கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’   |    பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்   |    ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் தனுஷ்   |    என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது - ஷகிலா   |    இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!   |    கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களை கதறவிடும் ஹரிஷ் கல்யாண்   |    சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?   |    சைக்கோ கிரைம் திரில்லர் படத்தின் மூலம் இணையப்போகும் ஸ்ரீகாந்த், வெற்றி   |    சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரிஷா படப்பாடல்   |    சித்ரா கணவர் ஹேம்நாத் திடீர் கைது - விசாரணையில் கசிந்த தகவல்   |    திண்டுக்கல்லில் மிஸ்கின் படத்திற்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான செட்   |    ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன
Updated on : 21 December 2020

கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரின் ரசிகர்களின் நீண்ட கால ஆசையாகும். ஆண்டுதோறும் விஜய்யின் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கும்போது வருங்கால முதல்வரே, தமிழகத்தின் எதிர்காலமே என்கிற வாசகங்கள் கண்டிப்பாக இருக்கும். விஜய் முதல்வராக வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் ஆசைப்படுவதில் தவறு இல்லை என அவரின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கூட தெரிவித்தார். 

 எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய் பெயரில் கட்சி பெயரை பதிவு செய்ய முயன்றதை பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர். ஆனால் அந்த கட்சிக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஜய் தெரிவித்தார். மேலும் தன் தந்தையின் கட்சியில் ரசிகர்கள் யாரும் சேரக் கூடாது என்று கோரிக்கை அல்ல கட்டளையிட்டார் விஜய். விஜய்ணா எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் பேசாத நாள் இல்லை. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பனையூரில் இருக்கும் அவரின் வீட்டில் ஆலோசனை நடத்தியுள்ளனர். 

 


பனையூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது விஜய் தன் ரசிகர்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளாராம். அதாவது என் ரசிகர்கள் யாரும் வேறு கட்சிகளில் சேராதீர்கள், நீங்கள் நினைப்பது விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறாராம் விஜய். இதன் மூலம் விஜய் விரைவில் கட்சி துவங்குவார் என்கிற நம்பிக்கை அவரின் ரசிகர்களுக்கு வந்துவிட்டது. கட்சி துவங்கப் போவதால் தான் நம்மை வேறு எந்த கட்சியிலும் சேர வேண்டாம் என்று அண்ணா சொல்லியிருக்கிறார் என ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். கெரியரை பொறுத்த வரை விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது. இருப்பினும் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அடுத்ததாக கோலமாவு கோகிலா படம் புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கிறார் விஜய். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா