சற்று முன்

ஜனவரி 15 அன்று பூஜையுடன் தொடங்குகிறது பிரபாஸின் - சலார்   |    தமிழக முதல்வர் வெளியிடும் பட பாடல்!   |    எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் !   |    அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா   |    விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன   |    விஜய்க்காக தயார் செய்த கதையில் சிவகார்த்திகேயன்   |    சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்   |    விஜய்யுடன் ஆண்ட்ரியாவின் மாஸ்டர் பட புகைப்படம் வைரல்   |    கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’   |    பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்   |    ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் தனுஷ்   |    என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது - ஷகிலா   |    இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!   |    கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களை கதறவிடும் ஹரிஷ் கல்யாண்   |    சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?   |    சைக்கோ கிரைம் திரில்லர் படத்தின் மூலம் இணையப்போகும் ஸ்ரீகாந்த், வெற்றி   |    சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரிஷா படப்பாடல்   |    சித்ரா கணவர் ஹேம்நாத் திடீர் கைது - விசாரணையில் கசிந்த தகவல்   |    திண்டுக்கல்லில் மிஸ்கின் படத்திற்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான செட்   |    ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்
Updated on : 21 December 2020

சந்தானம் நடித்த ’பிஸ்கோத்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானதை அடுத்து அவர் நடித்து முடித்துள்ள ’டிக்கிலோனா’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அவர் தற்போது ’பாரீஸ் ஜெயராஜ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சந்தானம் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் சீனிவாசன் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’வல்லினம்’ என்ற படத்தின் இயக்குனர் அறிவழகன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தந்தை-மகன் சென்டிமென்ட் சம்பந்தப்பட்ட படம் என்றும் தந்தையாக எம்எஸ் பாஸ்கரும், மகனாக சந்தானமும் நடிக்கிறார்கள் என்றும் கூறும் இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் முதல்முறையாக இந்த படத்தில் சந்தானம் காமெடியாக மட்டுமின்றி உணர்வுபூர்வமான காட்சிகளிலும் நடிக்க இருப்பதாகவும், இதுவரை அவர் ஏற்றிராத புதிய கேரக்டரில், புதிய பரிணாமத்தில் இந்த படத்தில் அவரது நடிப்பு இருக்கும் என்றும், அனைவரின் புருவத்தையும் உயர்த்தும் வகையில் சந்தானம் நடிப்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் இன்றைய அரசியலமைப்பை வெளிப்படுத்தும் வகையில் சுவராசியமான கதை என்றும் இயக்குனர் சீனிவாசன் கூறியுள்ளார். அறிமுக நடிகை ஒருவர் இந்த படத்தில் நாயகியாக சந்தானம் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், ஸ்ரீரங்கம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என்றும் இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்

முதல் முதலாக தந்தை மகன் சென்டிமென்ட் படத்தில் சந்தானம் நடிக்க உள்ளது அவரது ரசிகர்களுக்கு ஒரு புதுமையான படமாக இந்தப் படம் இருக்கும் என கருதப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா