சற்று முன்

ஜனவரி 15 அன்று பூஜையுடன் தொடங்குகிறது பிரபாஸின் - சலார்   |    தமிழக முதல்வர் வெளியிடும் பட பாடல்!   |    எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் !   |    அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா   |    விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன   |    விஜய்க்காக தயார் செய்த கதையில் சிவகார்த்திகேயன்   |    சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்   |    விஜய்யுடன் ஆண்ட்ரியாவின் மாஸ்டர் பட புகைப்படம் வைரல்   |    கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’   |    பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்   |    ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் தனுஷ்   |    என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது - ஷகிலா   |    இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!   |    கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களை கதறவிடும் ஹரிஷ் கல்யாண்   |    சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?   |    சைக்கோ கிரைம் திரில்லர் படத்தின் மூலம் இணையப்போகும் ஸ்ரீகாந்த், வெற்றி   |    சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரிஷா படப்பாடல்   |    சித்ரா கணவர் ஹேம்நாத் திடீர் கைது - விசாரணையில் கசிந்த தகவல்   |    திண்டுக்கல்லில் மிஸ்கின் படத்திற்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான செட்   |    ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’
Updated on : 21 December 2020

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படம் இந்திய ராணுவத்தில் கேப்டன் பதவியில் இருந்தவரும், ஏழை மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற சிந்தனையோடு, மலிவு விலை விமான பயண சேவை நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனருமான கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டு வெளியான மிகச்சிறந்த திரைப்படம் என்ற பெருமையை பெற்ற இப்படம் ஐ.எம்.டி.பி-யில் 10 புள்ளிகளுக்கு 8.8 புள்ளிகள் பெற்று பெரும் சாதனை படைத்த நிலையில், மேலும் ஒரு சாதனை படைக்க தயாராகி வருகிறது. 78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் ‘சூரரைப் போற்று’ போட்டியிட உள்ளது. இந்தச் சாதனை ஏன் இன்னும் விசேஷமானது என்றால், இந்த பெருமைக்குரிய விருது வழங்கு விழாவில் போட்டியிட அனுமதி பெற்ற முதல் நேரடி ஓடிடி வெளியீடுத் திரைப்படம் இதுவே. பிப்ரவரி 2021ல், பெவர்லு ஹில்டன், பெவர்லி ஹில்ஸில் இந்த விழா நடைபெறவுள்ளது.  கரோனா நெருக்கடி காரணமாக இந்த விழாவில் போட்டியிடும் திரைப்படங்களுக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களும் கோல்டன் க்ளோப் மற்றும் அகாடமி விருதுகளில் போட்டியிட தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா