சற்று முன்

ஜனவரி 15 அன்று பூஜையுடன் தொடங்குகிறது பிரபாஸின் - சலார்   |    தமிழக முதல்வர் வெளியிடும் பட பாடல்!   |    எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் !   |    அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா   |    விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன   |    விஜய்க்காக தயார் செய்த கதையில் சிவகார்த்திகேயன்   |    சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்   |    விஜய்யுடன் ஆண்ட்ரியாவின் மாஸ்டர் பட புகைப்படம் வைரல்   |    கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’   |    பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்   |    ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் தனுஷ்   |    என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது - ஷகிலா   |    இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!   |    கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களை கதறவிடும் ஹரிஷ் கல்யாண்   |    சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?   |    சைக்கோ கிரைம் திரில்லர் படத்தின் மூலம் இணையப்போகும் ஸ்ரீகாந்த், வெற்றி   |    சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரிஷா படப்பாடல்   |    சித்ரா கணவர் ஹேம்நாத் திடீர் கைது - விசாரணையில் கசிந்த தகவல்   |    திண்டுக்கல்லில் மிஸ்கின் படத்திற்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான செட்   |    ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!
Updated on : 18 December 2020

மலையாளத்தில் சூப்பர் ஹிட் படம் ’ஹெலன்’. இந்த படம் தமிழிலும் விரைவில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் மலையாளத் திரையுலகில் புகழ் பெற்றவர் அன்னா பென். இவர் சமீபத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கேரளாவில் உள்ள மால் ஒன்றுக்கு சென்று இருந்தபோது மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரத்தில் இரண்டு பேர் என்னை கடந்து சென்றபோது அதில் ஒருவர் என் பின் பக்கத்தில் கை வைத்து விட்டு சென்றார். அதற்கு நான் உடனே எதிர்வினையாற்ற முயன்றேன். ஒருவேளை தெரியாமல் பட்டிருக்குமோ என்று விட்டு விட்டேன். ஆனால் யோசித்துப் பார்த்தபோது அது திட்டமிட்டு செய்ததாகவே தெரிகிறது. அது மட்டுமின்றி அந்த இரண்டு இளைஞர்கள் மாலில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் பின் தொடர்ந்து வந்தனர். என் அம்மா என்னை நோக்கி வந்ததை பார்த்ததும் தான் அவர்கள் விலகிவிட்டார்கள். இந்த நேரத்தில் அவர்களை பற்றி சொல்வதற்கு ஆயிரம் வார்த்தைகள் இருக்கிறது. எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இவ்வாறு அவர்கள் செய்வது பார்க்கும்போது ஆத்திரமாக வருகிறது. ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பெண்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டி உள்ளது வெளியே செல்லும் என்னுடைய அம்மா தங்கை தோழிகள் குறித்து நான் கவலைப்படுகிறேன். தவறான எண்ணம் கொண்ட ஆண்கள், பெண்களின் பாதுகாப்பை பறித்துக் கொள்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை என்றால் இதேபோல் மீண்டும் மீண்டும் நடக்கும் என்பதால் சொல்கிறேன். இவ்வாறு தவறு செய்தவரின் கன்னத்தில் ஓங்கி அறைய எனக்கு தைரியம் இல்லை என்றாலும் தைரியமுள்ள பெண்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா