சற்று முன்

ஜனவரி 15 அன்று பூஜையுடன் தொடங்குகிறது பிரபாஸின் - சலார்   |    தமிழக முதல்வர் வெளியிடும் பட பாடல்!   |    எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் !   |    அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா   |    விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன   |    விஜய்க்காக தயார் செய்த கதையில் சிவகார்த்திகேயன்   |    சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்   |    விஜய்யுடன் ஆண்ட்ரியாவின் மாஸ்டர் பட புகைப்படம் வைரல்   |    கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’   |    பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்   |    ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் தனுஷ்   |    என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது - ஷகிலா   |    இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!   |    கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களை கதறவிடும் ஹரிஷ் கல்யாண்   |    சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?   |    சைக்கோ கிரைம் திரில்லர் படத்தின் மூலம் இணையப்போகும் ஸ்ரீகாந்த், வெற்றி   |    சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரிஷா படப்பாடல்   |    சித்ரா கணவர் ஹேம்நாத் திடீர் கைது - விசாரணையில் கசிந்த தகவல்   |    திண்டுக்கல்லில் மிஸ்கின் படத்திற்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான செட்   |    ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களை கதறவிடும் ஹரிஷ் கல்யாண்
Updated on : 18 December 2020

அமலா பால் நடிப்பில் வெளியான ஆபாசப்படமான ‘சிந்து சமவெளி’ மூலம் நடிகரானவர் ஹரிஷ் கல்யாண். அப்படத்திற்குப் பிறகு சில படங்களில் நடித்து வந்தவருக்கு ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பே எட்டா கனியாகவிட்டது. ஒரு கட்டத்தில் ஹரிஷின் சினிமா வாழ்க்கையே அஸ்தமனாகிவிடும் சூழலில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஹரிஷ் கல்யாணின் முகம் மீண்டும் ரசிகர்களிடம் பிரபலமாக, அதன் மூலம் அவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதன்படி, கிடைத்த ‘பியார் பிரேமா காதல்’ படம் வெற்றியடைந்ததால், தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருவதோடு, அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘தாராளபிரபு’ படம் நல்ல வரவேற்பு பெற, அதனால் ஹரிஷ் கல்யாணின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதாம். காலத்திற்கு ஏற்றவாறு மாறுவது தவறல்ல என்றாலும், அந்த மாறுதலால் மற்றவர்கள் பாதிப்படையக் கூடாது. ஆனால், ஹரிஷ் கல்யாணிடம் ஏற்பட்ட மாறுதல்களால் அவரை வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர்களும், அவரிடம் கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களுடம் கதறுகிறார்களாம். பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ், தான் இயக்கும் புதிய படத்தில் ஹரிஷ் கல்யாணை ஹீரோவாக முயற்சித்த போது, கேட்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்கு சம்பளம் கேட்ட ஹரிஷ், “இப்போ என் ரேஞ்சே வேற” என்றும் கூறிவிட்டாராம். ராஜேஷிடம் மட்டும் அல்ல, ஹரிஷ் தற்போது நடித்து வரும் பட இயக்குநர்களிடமும் “இப்போ என் ரேஞ்சே வேற” அதனால் அதற்கு ஏற்றவாறு காட்சிகள் வைங்க, என்று அடிக்கடி கூறி அவர்களை கதற விடுகிறாராம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா