சற்று முன்
சினிமா செய்திகள்
சித்ரா கணவர் ஹேம்நாத் திடீர் கைது - விசாரணையில் கசிந்த தகவல்
Updated on : 15 December 2020

தொலைக்காட்சி தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி அதிகாலை தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தற்கொலையில் பல மர்மங்கள் இருப்பதாக, சித்ராவின் நண்பர்களான சில சீரியல் நடிகர், நடிகைகள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
மேலும், சித்ராவின் தாயும், அவரது கணவர் ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டி வரும் நிலையில், சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்பத்தூர் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார். நேற்று சித்ராவின் தாய், தந்தை சகோதரர் மற்றும் சகோதரி என சித்ராவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இன்று சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்த இருந்த நிலையில், திடீரென சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக நசரத்பேட்டை காவல்துறையினர் ஹேம்நாத் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தி பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகள்
ஜனவரி 15 அன்று பூஜையுடன் தொடங்குகிறது பிரபாஸின் - சலார்
திரு. விஜய் கிரகன்டுர் மற்றும் பிரசாந்த் நீல் இருவரும் இந்த மிகப்பெரிய ஆக்ஷன் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது முதலே, ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் பிரபாஸ், ரசிகர்கள் இதற்கு முன் பார்த்திராத ஒரு வன்முறையான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். சுவாரஸ்யமான வகையில், தகவல்கள் உண்மையாக இருந்தால் அவர் மிகவும் ஆஜானுபாகுவான தோற்றத்தில் தோன்றுவார்
.
தற்போது வரும் செய்திகளின் படி, 'சலார்' திரைப்படம் ஜனவரி இறுதி வாரத்தில் தொடங்கவுள்ளது. மேலும் இம்மாதம் 15-ம் தேதி, 11 மணியளவில் படத்தின் பூஜையை நடத்தப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சலார் படக்குழுவினர் கலந்து கொள்ளும் படப்பூஜை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் டாக்டர். சி.என். அஸ்வத்நாராயண் - கர்நாடக துணை முதல்வர், முன்னணி இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி, நடிகர் யாஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.
இது குறித்து பிரபாஸ் கூறுகையில், "ஹைதராபாத்தில் படப்பூஜையைத் தொடர்ந்து படப்பிடிப்பைத் தொடங்கவும், ரசிகர்களுக்கு என்னுடைய தோற்றத்தை வெளிப்படுத்தவும் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்" என்கிறார்.
தமிழக முதல்வர் வெளியிடும் பட பாடல்!
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..' எனும் 'நாற்காலி' பட பாடலை தமிழக முதல்வர் வெளியிடுகிறார்..!
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..' எனும் 'நாற்காலி' பட பாடலை தமிழக முதல்வர் ஜனவரி 16 ஆம் தேதி வெளியிடுகிறார்.
இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'நாற்காலி'. 'மூன் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார்.'இருட்டு' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னராக வி.இசட்.துரை இந்த 'நாற்காலி'யை இயக்கியுள்ளார்.
இதில் அமீருடன், '555' திரைப்படத்தின் நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.
'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் பாடும் 'நாற்காலி' திரைப்படத்தில் மறைந்தும் மறையாத “பாடும் நிலா” எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குரலில் புரட்சித் தலைவரின் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” என்ற வரிகளில் தொடங்கும் பாடலின் "FIRST SINGLE"- track ஐ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 16-ம் தேதி மாலை மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வெளியிட மாண்புமிகு அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.
இத்திரைப்படத்தின் இசை அமைப்பை வித்யாசாகர், ஒளிப்பதிவை இ.கிருஷ்ணசாமி, படத்தொகுப்பை ஆர்.சுதர்சன், பாடல் பா விஜய், வசனம் அஜயன் பாலா - க.முரளி, கலை இயக்கத்தை ஏ.கே.முத்து, சண்டைக்காட்சிகளை டான் அசோக், நிழற்படப்பதிவை மோதிலால், விளம்பர வடிவமைப்பை ராஜா – வெங்கடேஷ், மக்கள் தொடர்பு கே.எஸ்.கே செல்வா ஆகியோர் செய்துள்ளனர்.
மிகுந்த பொருட் செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றிருக்கிறது.
இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவேகத்துடன் நடந்து வருகிறது. அனைத்து ரசிகர்களும் இன்புற்று மகிழ்ந்து அமரவிருக்கும் வகையில் உருவாகி வரும் இந்த ”நாற்காலி” யை வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் !
எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் தொடர்ந்து இணைந்து நடிகர் பட்டாளத்தால் ரசிகர்களிடத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. நடிகை ப்ரியா பவானி சங்கர், டீஜே, மனுஷ்யபுத்திரன் போன்ற மாறுபட்ட நட்சத்திர கூட்டணியில் தற்போது நடிகர் கலையரசன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா கூறியதாவது...
மிகவும் கனமான ‘அமீர்’ எனும் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார் கலையரசன். இக்கதாப்பாத்திரம் படத்தில் சிறிதளவு நேரமே வந்தாலும் கதையில் நிறைய அழுத்தம் தரும் பாத்திரம் ஆகும். பிரபல நடிகராகவும், முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்த அனுபவம் கொண்டவராகவும் உள்ளவரை நடிக்க வைக்க நினைத்தேன். கலையரசனை அணுகும்போது முதலில் இப்படத்திற்கு ஒப்புக்கொள்வாரா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் படத்தில் கதாப்பாத்திரத்தின் அழுத்தம் அறிந்து அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்.
தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் (Studio Green Films ) நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்க, “சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை” படப்புகழ் இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு வரும் கோடை காலத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா
1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்று தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.
ஜெயலலிதா அப்போது குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து,உச்சிமுகர்ந்து ஜெயவர்தன் என்று பெயரிடுகிறார்.இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்தக் குழந்தையின் அப்பா அமைச்சர் ஜெயக்குமார் என்பது. நாட்கள் செல்ல செல்ல குழந்தை மாணவனாகி,பள்ளிப்படிப்பை முடித்து,மருத்துவக்கல்லூரியில் படிக்கிறார். 22வது வயதில் மருத்துவத்தில் முதுகலை படிப்பை ராமச்சந்திரா மருத்துவமனையில் முடிக்கிறார் ஜெயவர்தன்.
படித்து முடித்த போது வயது 24 அவருக்கு... 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழகம். 2013 டிசம்பர் மாதம் திடீரென போயஸ் தோட்டத்திலிருந்து ஜெயவர்தனை, தனது இல்லத்திற்கு வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு வருகிறது. மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திய அவர் போயஸ் தோட்டம் இல்லத்திற்கு சென்றார்.அங்கு அமர்ந்திருந்த ஜெயலலிதா, வரும் தேர்தலில் எம்பியாக போட்டியிட உங்களுக்கு விருப்பமா என்று கேட்டுள்ளார். இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன அவர் சரியென்று சொல்லியிருக்கிறார்.
தென் சென்னை தொகுதியில் நீங்கள் தான் வேட்பாளர், இதை இப்போது யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறார் ஜெயலலிதா.2014 தேர்தலில் தென் சென்னையில் அபார வெற்றி பெற்று 25 வயதில் இந்தியாவின் இளம் எம்.பி என்ற அங்கீகாரத்தை பெற்றார் ஜெயவர்தன். பல்வேறு பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது இவரது குரல். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுத் தந்ததில் இவர் பங்கு மிக முக்கியமானது.வாரிசு அரசியலை முற்றிலும் விரும்பாத ஜெயா எப்படி அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுக்கு வாய்ப்பு கொடுத்தது அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யம்.
வட சென்னையில் பிறந்து
வளர்ந்தாலும்கூட,தென்சென்னையிலும்,
அதைத்தாண்டியும்,எளிமை,இனிமை,பக்குவம்,அடக்கம்,அமைதி,புன்சிரிப்பு,உதவும் உள்ளம்,அதிகாரத் தோரணை இல்லாமை என பலவிதங்களில் மக்களோடு மக்களாக பயணித்து அனைவரது மனதிலும்,குறிப்பாக எதிர்க்கட்சியினர் மத்தியிலும் நல்ல பெயரை பெற்றார்.அதன் பலனாக 2019 தேர்தலிலும் அவருக்கு தென்சென்னையில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.
நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்தபோது,அவருக்கு பெண்குழந்தை பிறந்தது.மனைவி ஸ்வர்ணலட்சுமியை அழைத்துக்கொண்டு குழந்தையோடு ஜெயலலிதாவை சந்திக்க சென்றார் ஜெயவர்தன்.தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டுமென்று அவர் சொன்னபோது, ஜெயாவுக்கு அளவில்லா மகிழ்ச்சியாம்."உனக்கு பேர் வைத்ததும் நான் தான்,உன் குழந்தைக்கும் பேர் வைப்பது மிகுந்த மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது" என்று சொல்லியிருக்கிறார்.குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து, "ஜெயஸ்ரீ"என்று பெயர் சூட்டி,"அப்பாவைக் காட்டிலும் மிகப்பெரிய ஆளாக நீ வருவாய் என வாயார வாழ்த்தி இருக்கிறார் ஜெயலலிதா.
இத்தனை சம்பவங்களையும் சொல்லி முடித்த ஜெயவர்தன்,"தனக்கும்,தன் குழந்தைக்கும் பேர் சூட்டி,ஊர் பாராட்டும் வகையில், எங்களை சீராட்டி வளர்த்த அன்னை,எங்கள் குலதெய்வம்,வாழ்நாளெல்லாம் நன்றியுணர்வோடு போற்றி வணங்கும் இதயதெய்வம் யாரென்றால் எங்கள் அம்மா தான் என்கிறார்... யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது...என் மகள் முகத்தில் அம்மாவை பார்த்துக் கொள்கிறேன்" என கண்களில் நீர் வழிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு,குழந்தையைப்போல் மெதுவாக நடக்க ஆரம்பித்தார் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன்...
விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன
கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரின் ரசிகர்களின் நீண்ட கால ஆசையாகும். ஆண்டுதோறும் விஜய்யின் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கும்போது வருங்கால முதல்வரே, தமிழகத்தின் எதிர்காலமே என்கிற வாசகங்கள் கண்டிப்பாக இருக்கும். விஜய் முதல்வராக வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் ஆசைப்படுவதில் தவறு இல்லை என அவரின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கூட தெரிவித்தார்.
எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய் பெயரில் கட்சி பெயரை பதிவு செய்ய முயன்றதை பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர். ஆனால் அந்த கட்சிக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஜய் தெரிவித்தார். மேலும் தன் தந்தையின் கட்சியில் ரசிகர்கள் யாரும் சேரக் கூடாது என்று கோரிக்கை அல்ல கட்டளையிட்டார் விஜய். விஜய்ணா எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் பேசாத நாள் இல்லை. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பனையூரில் இருக்கும் அவரின் வீட்டில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பனையூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது விஜய் தன் ரசிகர்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளாராம். அதாவது என் ரசிகர்கள் யாரும் வேறு கட்சிகளில் சேராதீர்கள், நீங்கள் நினைப்பது விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறாராம் விஜய். இதன் மூலம் விஜய் விரைவில் கட்சி துவங்குவார் என்கிற நம்பிக்கை அவரின் ரசிகர்களுக்கு வந்துவிட்டது. கட்சி துவங்கப் போவதால் தான் நம்மை வேறு எந்த கட்சியிலும் சேர வேண்டாம் என்று அண்ணா சொல்லியிருக்கிறார் என ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
கெரியரை பொறுத்த வரை விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது. இருப்பினும் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அடுத்ததாக கோலமாவு கோகிலா படம் புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கிறார் விஜய். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய்க்காக தயார் செய்த கதையில் சிவகார்த்திகேயன்
தளபதி விஜய் நடிக்க இருந்த ’தளபதி 65’ என்ற திரைப்படத்தை முதலில் இயக்க ஒப்பந்தமானவர் ஏஆர் முருகதாஸ் என்பது தெரிந்ததே. விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’ மற்றும் ‘சர்கார்’ என மூன்று ஹிட்களை கொடுத்த இயக்குனர் ஏஆர் முருகதாஸ் ஒருசில பிரச்சினை காரணமாக ’தளபதி 65’ படத்தில் இருந்து விலகினார் என்பது தெரிந்ததே. தற்போது ’தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’தளபதி 65’ படத்திற்காக தயார் செய்து வைத்திருந்த கதையை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தெரிவித்ததாகவும், இந்த சந்திப்பின்போது ஏஆர் முருகதாஸ் அவர்கள் கூறிய கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்து விட்டதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளி வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த படத்தின் கதை திரைக்கதை உள்பட அனைத்தும் தயாராக இருப்பதால் இந்த படம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.
தளபதி விஜய் மிஸ் செய்த கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்
சந்தானம் நடித்த ’பிஸ்கோத்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானதை அடுத்து அவர் நடித்து முடித்துள்ள ’டிக்கிலோனா’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அவர் தற்போது ’பாரீஸ் ஜெயராஜ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சந்தானம் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் சீனிவாசன் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’வல்லினம்’ என்ற படத்தின் இயக்குனர் அறிவழகன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் தந்தை-மகன் சென்டிமென்ட் சம்பந்தப்பட்ட படம் என்றும் தந்தையாக எம்எஸ் பாஸ்கரும், மகனாக சந்தானமும் நடிக்கிறார்கள் என்றும் கூறும் இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் முதல்முறையாக இந்த படத்தில் சந்தானம் காமெடியாக மட்டுமின்றி உணர்வுபூர்வமான காட்சிகளிலும் நடிக்க இருப்பதாகவும், இதுவரை அவர் ஏற்றிராத புதிய கேரக்டரில், புதிய பரிணாமத்தில் இந்த படத்தில் அவரது நடிப்பு இருக்கும் என்றும், அனைவரின் புருவத்தையும் உயர்த்தும் வகையில் சந்தானம் நடிப்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படம் இன்றைய அரசியலமைப்பை வெளிப்படுத்தும் வகையில் சுவராசியமான கதை என்றும் இயக்குனர் சீனிவாசன் கூறியுள்ளார். அறிமுக நடிகை ஒருவர் இந்த படத்தில் நாயகியாக சந்தானம் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், ஸ்ரீரங்கம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என்றும் இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்
முதல் முதலாக தந்தை மகன் சென்டிமென்ட் படத்தில் சந்தானம் நடிக்க உள்ளது அவரது ரசிகர்களுக்கு ஒரு புதுமையான படமாக இந்தப் படம் இருக்கும் என கருதப்படுகிறது.
விஜய்யுடன் ஆண்ட்ரியாவின் மாஸ்டர் பட புகைப்படம் வைரல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். மேலும் இதில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதை தொடர்ந்து படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இருந்து புதிய ஸ்டில் வெளியாகியுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆண்ட்ரியாவிற்காக ஸ்பெஷலாக, அவர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு.
முதல் முறையாக வெளியான ஆண்ட்ரியஆவின் போட்டோவை பார்த்து ரசிகர்கள்., இருவரும் செம ஜோடி என கமட்ஸ் போட்டு வைரல் ஆக்கி வருகின்றனர்.
கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படம் இந்திய ராணுவத்தில் கேப்டன் பதவியில் இருந்தவரும், ஏழை மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற சிந்தனையோடு, மலிவு விலை விமான பயண சேவை நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனருமான கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டு வெளியான மிகச்சிறந்த திரைப்படம் என்ற பெருமையை பெற்ற இப்படம் ஐ.எம்.டி.பி-யில் 10 புள்ளிகளுக்கு 8.8 புள்ளிகள் பெற்று பெரும் சாதனை படைத்த நிலையில், மேலும் ஒரு சாதனை படைக்க தயாராகி வருகிறது.
78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் ‘சூரரைப் போற்று’ போட்டியிட உள்ளது. இந்தச் சாதனை ஏன் இன்னும் விசேஷமானது என்றால், இந்த பெருமைக்குரிய விருது வழங்கு விழாவில் போட்டியிட அனுமதி பெற்ற முதல் நேரடி ஓடிடி வெளியீடுத் திரைப்படம் இதுவே. பிப்ரவரி 2021ல், பெவர்லு ஹில்டன், பெவர்லி ஹில்ஸில் இந்த விழா நடைபெறவுள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாக இந்த விழாவில் போட்டியிடும் திரைப்படங்களுக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களும் கோல்டன் க்ளோப் மற்றும் அகாடமி விருதுகளில் போட்டியிட தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்
தமிழ் பிக் பாஸின் சீசன் 4 70 நாட்களை கடந்திருக்கும் நிலையில், நேற்று 10 வது போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியொர் வெளியேறியுள்ள நிலையில், நேற்று அர்ச்சனா வெளியேற்றபட்டார்.
கடந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டில் ஆரி, அஜீத், அனிதா அர்ச்சனா, ரியோ, ஷிவானி, சோம் சேகர் ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில், குறைவான வாக்குகள் பெற்றதால் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.
இதற்கிடையே, அர்ச்சனாவுக்கு கிடைத்த தலைவர் பதவி அவர் வெளியேறியதால், பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷனில் இருந்து பாலாஜி தப்பித்துவிட்டார்.
இந்த நிலையில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமிஷேனில் மீண்டும் ஆரி, அஜித், ஷிவானி ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். அதிலும், கடந்த முறை ஆரியின் பெயரை நாமினேட் செய்த ரியோ, இந்த முறையும் ஆரியை நாமினேட் செய்திருக்கிறார். அர்ச்சனா வெளியேறியதால் கடுப்பாகியுள்ள ரியோ, எப்படியாவது ஆரியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே அவருடைய பெயரை திரும்ப திரும்ப நாமினேட் செய்து வருகிறார்.
ஏற்கனவே, ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் ரியோ, தொடர்ந்து ஆரியை கார்னர் செய்து வருவதாலும், தற்போதைய செயலாலும் அவர் மேலும் மேலும் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா