சற்று முன்

விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

சூர்யா படத்தில் அறிமுகமாகும் விஜயகுமார் குடும்ப வாரிசு
Updated on : 14 December 2020

தமிழ் சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் அறிமுகமாவது புதிதில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாரிசுகள் வரை திரையுலகில் அறிமுகமாகி தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.



 



அந்த வகையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் மகன் சூர்யாவின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்தாலும் ’என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய பிரேக்கை பெற்றவர் அருண் விஜய். தற்போது அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



 





 



இந்தநிலையில் தனது மகன் அர்னவ்விஜய் தற்போது சினிமாவில் நடிக்க உள்ளதாக அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் தனது மகன் அர்னவ்விஜய் நடிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து சினிமா உலகிற்கு வரும் அருண் விஜய்யின் மகனையும் திரையுலகம் வாழ்த்தி வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா