சற்று முன்

ஜனவரி 15 அன்று பூஜையுடன் தொடங்குகிறது பிரபாஸின் - சலார்   |    தமிழக முதல்வர் வெளியிடும் பட பாடல்!   |    எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் !   |    அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா   |    விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன   |    விஜய்க்காக தயார் செய்த கதையில் சிவகார்த்திகேயன்   |    சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்   |    விஜய்யுடன் ஆண்ட்ரியாவின் மாஸ்டர் பட புகைப்படம் வைரல்   |    கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’   |    பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்   |    ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் தனுஷ்   |    என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது - ஷகிலா   |    இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!   |    கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களை கதறவிடும் ஹரிஷ் கல்யாண்   |    சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?   |    சைக்கோ கிரைம் திரில்லர் படத்தின் மூலம் இணையப்போகும் ஸ்ரீகாந்த், வெற்றி   |    சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரிஷா படப்பாடல்   |    சித்ரா கணவர் ஹேம்நாத் திடீர் கைது - விசாரணையில் கசிந்த தகவல்   |    திண்டுக்கல்லில் மிஸ்கின் படத்திற்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான செட்   |    ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

சீனுராமசாமி தன் உடன்பிறப்புக்கு கூறிய வாழ்த்து
Updated on : 17 September 2020

இயக்குனர்  சீனு ராமசாமி ‘கூடல்நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்ததோடு, தேசிய விருதும் பெற்றவர். மேலும் ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ’மாமனிதன்’ ஆகிய இரண்டு படங்கள் இவரது இயக்கத்தில்  ரிலீஸுக்கு தயாராக உள்ளது.  கிராமத்து மண்வாசனையோடு எதார்த்தமான கதைகளம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தது போல், அவரது சிஷ்யரும், உடன் பிறந்த தம்பியுமான விஜய் ராமகிருஷ்ணன் இயக்குநராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார். இவர் இவருடைய அண்ணன் சீனு ராமசாமியின் முதல் படமான ‘கூடல்நகர்’ படத்தில் உதவி இயக்குநராகி ’மாமனிதன்’ வரை துணை இயக்குநராக பணியாற்றியிருக்கும் விஜய் ராமகிருஷ்ணன், ஷஹானா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தையும் தொடங்கி இயக்குநராக அறிமுகமாவதோடு ஒரு படத்தை தானே தயாரிக்கவும் இருக்கிறார்.    தற்போது இப்படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. 

இயக்குநராவதோடு முதல் படத்திலேயே தயாரிப்பாளராகியிருக்கும் தனது தம்பி விஜய் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, ”’கூடல்நகர்’ (2007) மூலம் உதவி இயக்குநராகி ’மாமனிதன்’ (2020) வரை துணை இயக்குநராக பணிபுரிந்த என் உடன்பிறந்த தம்பி திரு.விஜய் ராமகிருஷ்ணன். நல் உள்ளத்தார் கூட்டு முயற்சியால் #SAHANAPICTURES நிறுவனம் தொடங்கி, தான் எழுதி, இயக்கி, தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா