சற்று முன்

ஜனவரி 15 அன்று பூஜையுடன் தொடங்குகிறது பிரபாஸின் - சலார்   |    தமிழக முதல்வர் வெளியிடும் பட பாடல்!   |    எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் !   |    அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா   |    விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன   |    விஜய்க்காக தயார் செய்த கதையில் சிவகார்த்திகேயன்   |    சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்   |    விஜய்யுடன் ஆண்ட்ரியாவின் மாஸ்டர் பட புகைப்படம் வைரல்   |    கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’   |    பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்   |    ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் தனுஷ்   |    என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது - ஷகிலா   |    இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!   |    கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களை கதறவிடும் ஹரிஷ் கல்யாண்   |    சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?   |    சைக்கோ கிரைம் திரில்லர் படத்தின் மூலம் இணையப்போகும் ஸ்ரீகாந்த், வெற்றி   |    சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரிஷா படப்பாடல்   |    சித்ரா கணவர் ஹேம்நாத் திடீர் கைது - விசாரணையில் கசிந்த தகவல்   |    திண்டுக்கல்லில் மிஸ்கின் படத்திற்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான செட்   |    ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்
Updated on : 11 May 2020

தளபதி விஜய் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்தார் என்பது தெரிந்ததே அதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் தனது ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா 5,000 ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தார் என்பதும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பலன் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, விஜய்யின் நிதியுதவி காலதாமதமானது குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது, ‘வருமான வரித்துறையினர் வாரி சுருட்டி கொண்டு போன பிறகும், அங்கும் இங்கும் சிதறி இருந்த பணத்தை சேர்த்து கொடுப்பதற்கு நேரம் தேவை இல்லையா? என்று பதிலளித்து இருந்தார். குருமூர்த்தியின் இந்த பதிலுக்கு பெரும்பான்மையோர் கண்டனம் தெரிவித்தனர். பெரிய கோடீஸ்வரர்கள் பலர் ஒரு ரூபாய் கூட கொடுக்காத நிலையில் தன்னுடைய மக்களுக்காக ரூ.1.30 கோடி கொடுத்த விஜய்யை கேலி செய்வதா? என்று விமர்சனங்கள் எழுந்தன. 

 இந்த நிலையில் சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு சம்பாதித்ததிலிருந்து இதுவரை கொரானா நிதிக்காக அஞ்சு பைசா கழட்டாத #குருமூர்த்தி .. தன் இக்கட்டையும் கடந்து தளபதி விஜய் நேயமுடன் உதவியதை நக்கலடித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நிலை பிறழ்ந்த செயல் இது! என்று கூறியுள்ளார். சுரேஷ் காட்சியின் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா