சற்று முன்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்   |    விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்   |    அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்   |    படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்   |    ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா   |    நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி   |    ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்   |    குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை   |    குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம்   |    நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை   |    குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி   |    தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல்   |    அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி   |    Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல்   |    முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள்   |    கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர்   |    அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |    கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்   |    ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்   |    கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்   |   

சினிமா செய்திகள்

அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்
Updated on : 11 May 2020

5 ஸ்டார் என்ற படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானாலும் கனிகா அதிகப் புகழ் பெற்றது மலையாளத் திரை உலகில்தான். பல ஹிட் படங்களில் நடித்த அவர் திருமணத்துக்குப் பின் நடிப்பிலிருந்து விலகினார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் மகனுடன் சில வீடியோக்களை வெளியிட்டு வந்த கனிகா, தற்போது ஒரு குறும்படத்தை முதன்முறையாக இயக்கியுள்ளார். மா என்று பெயரிடப்பட்ட அந்த ஷார்ட் ஃப்லிமை மிகவும் பொருத்தமாக அன்னையர் தினத்தன்று வெளியிட்டார் கனிகா. ஐந்து நிமிடம் இருபது நொடிகள் ஓடக் கூடிய இந்த குறும்படத்தில் தாயின் சிறப்புக்களை வாய்ஸ் ஓவர் மற்றும் பின்னணி இசையுடன் நெகிழ்ச்சியாக எடுத்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர் கூறியிருப்பது, 

 

 ஒரு தாயின் தோற்றத்தினாலோ அவளது நடவடிக்கைகளினாலோ ஒருபோதும் அவளை தீர்மானிக்க வேண்டாம் ... அவள் என்னவிதமான கஷ்டத்தில் இருக்கிறாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். எல்லா அம்மாக்களுக்கும், அம்மாவாகப் போகிற அம்மாக்களுக்கும், அனைத்து சிங்கிள் மதர்ஸுக்கும், கண்ணாடியில் உங்களை ஒரு முறை பார்த்து புன்னகைத்து, என்ன ஒரு அற்புதமான பெண் நீங்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய  அனைத்து அம்மாக்களுக்கும்’ என்று பதிவிட்டு தனது குறும்படத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் கனிகா. இந்த குறும்படம் கனிகாவுக்கு இயக்குனராக ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், இதை எழுதும் போது,  43523 பார்வையாளர்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா