சற்று முன்

ஜனவரி 15 அன்று பூஜையுடன் தொடங்குகிறது பிரபாஸின் - சலார்   |    தமிழக முதல்வர் வெளியிடும் பட பாடல்!   |    எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் !   |    அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா   |    விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன   |    விஜய்க்காக தயார் செய்த கதையில் சிவகார்த்திகேயன்   |    சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்   |    விஜய்யுடன் ஆண்ட்ரியாவின் மாஸ்டர் பட புகைப்படம் வைரல்   |    கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’   |    பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்   |    ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் தனுஷ்   |    என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது - ஷகிலா   |    இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!   |    கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களை கதறவிடும் ஹரிஷ் கல்யாண்   |    சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?   |    சைக்கோ கிரைம் திரில்லர் படத்தின் மூலம் இணையப்போகும் ஸ்ரீகாந்த், வெற்றி   |    சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரிஷா படப்பாடல்   |    சித்ரா கணவர் ஹேம்நாத் திடீர் கைது - விசாரணையில் கசிந்த தகவல்   |    திண்டுக்கல்லில் மிஸ்கின் படத்திற்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான செட்   |    ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா
Updated on : 11 May 2020

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் லீடிங்க ரோலில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா, சினிமாவில் மட்டுமின்றி மேடை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அண்மையில் புரோக்கன் விங்ஸ் என்ற தலைப்பில் கவிதை வெளியிட்டார் ஆண்ட்ரியா. மேலும் திருமணமான நபர் ஒருவருடன் கொண்ட தொடர்பால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு ஆளானதாகவும் கூறினார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யார் அந்த நபர் என்ற சர்ச்சையும் எழுந்தது. கிட்டதட்ட ஓராண்டாக படங்களில் நடிக்காமல் சிகிச்சை பெற்று வந்த ஆண்ட்ரியா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. கடந்த மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப் படம் லாக்டவுனால் இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது தயாருடன் இருக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்தார். 

 அதில் நேற்று என் அம்மா இந்த போட்டோவை எனக்கு அனுப்பி அன்னையர் தினத்தில் இந்த போட்டோவை நீ போஸ்ட் செய்யலாம், நாம் இருவருமே நல்லா இருக்கோம் என்றார். அதனால் இந்த போட்டோவை நான் இங்கு ஷேர் செய்கிறேன். சென்டிமென்ட்ஸ்கெல்லாம் நான் ஆளில்லை, ஆனால் எல்லா அம்மாக்களும் ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் அடிக்கடி கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆகையால் அன்னையர் தின வாழ்த்துகள் இன்றும் மற்றும் எல்லா நாட்களும் என குறிப்பிட்டுள்ளார். அனைவரையும் போலவே தனது லாக்டவுன் நாட்களை வீட்டில் கழித்து வருகிறார் ஆண்ட்ரியா. இருப்பினும், அவர் மியூஸிக் மற்றும் குறும்படங்களில் பிஸியாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு, அவர் புதிய சிங்கிள் ஒன்றை ரிலீஸ் செய்தார். முன்னதாக லாக் டவுனின் போது, ஆதவ் கண்ணதாசன் இயக்கிய ‘லாக் டவுன்' என்ற குறும்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா