சற்று முன்

சீனுராமசாமி தன் உடன்பிறப்புக்கு கூறிய வாழ்த்து   |    நயன்தாராவின் மிரட்டலான படம்   |    லேடீஸ் circle இந்தியா சார்பாக அண்ணபூரணா டிரைவ் வழங்கிய உதவி   |    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்   |    விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்   |    அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்   |    படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்   |    ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா   |    நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி   |    ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்   |    குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை   |    குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம்   |    நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை   |    குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி   |    தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல்   |    அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி   |    Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல்   |    முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள்   |    கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர்   |    அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |   

சினிமா செய்திகள்

நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி
Updated on : 11 May 2020

கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்காக தனது சம்பளத்தில் 40 சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக நடிகர் உதயா சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் எந்த தயாரிப்பாளரும் மகிழ்ச்சியடையவில்லை என்பது கோலிவுட்டுக்கே தெரிந்தாலும், வெளியே சொல்ல முடியாத சூழ்நிலை தான். இதற்கிடையே, தென்னிந்திய நடிகர்கள் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் விஷயத்தில் நடிகர் உதயா தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, தமிழக அரசின் சிறப்பு அதிகாரியிடம் வசை வாங்கி அசிங்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணியில் இருந்த உதயா, அங்கிருந்து வெளியேறி தற்போது பாக்யராஜ் மற்றும் ஐசர் கே.கணேஷ் தலைமையிலான அணியில் செயல்பட்டு வருகிறார். அந்த அணியின் தலைமையான கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் அமைதியாக இருந்தாலும், உதயா மட்டும் அவ்வபோது அறிக்கை வெளியிட்டுக் கொண்டும், நடிகர் சங்கம் பற்றி பேசிக் கொண்டும் இருப்பார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிகர் சங்க உறுப்பினர்களுக்காக நிவாரண பொருட்கள் வழங்கினார். அதை அரசின் சிறப்பு அதிகாரி பொருப்பில் நடிகர் சங்க ஊழியர்கள் உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்கள். நேற்று விடுபட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க சிறப்பு அதிகாரி கீதா நடிகர் சங்க அலுவலகத்திற்கு வந்த போது, நடிகர் உதயாவும் அங்கே வந்திருக்கிறார். அப்போது, நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 100 உறுப்பினர்களை மருது பாண்டி என்பவரது தலைமையில் அழைத்து சென்று அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும், என்று உதயா கூறியிருக்கிறார். சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு தன்னால் நிவாரண பொருட்கள் வழங்க முடியாது, என்று சிறப்பு அதிகாரி தெரிவிக்க, அதை ஏற்காத நடிகர் உதயா, வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.  ஒரு கட்டத்திற்கு மேல் பொருமை இழந்த சிறப்பு அதிகாரி கீதா, ”அரசால் நியமணம் செய்யப்பட்ட எனது பணியில் முன்னாள் நிர்வாகிகள் யாரும் தலையிடுவதில்லை. ஆனால், நீங்கள் தான் அடிக்கடி, நடிகர் சங்க அலுவலக பணிகளில் குறுக்கிட்டு இடையூறு செய்கிறீர்கள்” என்று கூறி நடிகர் உதயாவை வெளுத்து வாங்கி விட்டாராம். சிறப்பு அதிகாரி இப்படி கோபப்படுவார், என்று எதிர்ப்பார்க்காத உதயா, தனது ஹீரோயிஷம் பலிக்காமல் போனதால் அசிங்கப்பட்டு அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. மேலும், உதயா, சங்கீதா உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வாங்காதவர்களின் பெயர்களில், சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு பிரச்சினை முடித்து வைக்கப்பட்டதாம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா