சற்று முன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்
Updated on : 11 May 2020

தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோக்கள் பலர் நடித்த திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் நேற்று ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்றில் எளிமையாகத் திருமணம் செய்து கொண்டார்.



 



49 வயதான தில் ராஜு அவர்களின் முதல் மனைவி அனிதா என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதனை அடுத்து அவரது மகள், தந்தையை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது மகளுக்கு திருமணம் நடந்து பேத்தியும் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



 



இந்த நிலையில் மகளின் வற்புறுத்தல் காரணமாக நேற்று நிஜாமாபாத் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடுத்தர வயது பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் பதிவாகி உள்ளது. இன்று முதல் புதிய வாழ்க்கை ஒன்றை தொடங்குவதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திருமணம் அவரது மகள் மற்றும் பேத்தி முன்னிலையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



 





ஊரடங்கு நேரத்தில் இந்தத் திருமணம் நடந்ததால் இருவீட்டாரின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பதும் இருப்பினும் தெலுங்கு திரையுலகில் உள்ள பலரும் தில் ராஜூ அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா