சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள்
Updated on : 11 April 2020

சித்ரா என்று சொன்னால் தெரியாதவர்கள் கூட ’முல்லை சித்ரா’ என்று சொன்னால் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் சட்டென்று நினைவுக்கு வந்துவிடுவார். ஆம், அந்த அளவுக்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பெரியவர்கள் முதல் இளசுகள் வரை என அனைத்து தரப்பினர் மனதிலும் அவர்கள் வீட்டு பெண்ணாகவே சித்ரா இடம்பிடித்துவிட்டார்.



 



இந்த தொடரில், மூன்று அண்ணன் தம்பி தம்பதியர்கள் கதாப்பாத்திரம் இருந்தாலும், மூன்றாவது ஜோடியாக வரும் கதிர் - முல்லை தம்பதியின் ரொமான்ஸும், அவருகளுக்கு இடையிலான கெமிஸ்ட்ரியும் தான் ரசிகர்களை சீர்யல் பார்க்க ஈர்க்கிறது, என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு இந்த ஜோடியின் காதல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.



 



இப்படி முல்லையாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் சித்ரா, ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றியவர், பிறகு சில சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர், தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மூலம் முக்கியமான டிவி நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.



 



சித்ராவுக்கு என்று தனி ரசிகர் வட்டம் இருப்பதோடு, சமூக வலைதளங்களில் அவருக்காக தனி பட்டாளமே இயங்குகிறது. அவர்கள் சித்ரா குறித்து அனைத்து தகவல்களையும், அவரது சீரியல் எப்பிசோட்கள் மற்றும் அதில் அவர் நடித்த விதம் என அனைத்தையும் வெளியிட்டு டிரெண்டாக்கி வருகிறார்கள். அதேபோல், சித்ராவும் ரசிகர்களுடன் அவ்வபோது சமூக வலைதளங்கள் மூலம் பேசுவதோடு, அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.



 



இந்த நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் சித்ரா சாட்டிங் செய்யும் போது ரசிகர் ஒருவர், “அக்கா உங்களது பழைய புகைப்படங்களை வெளியிடுங்கள்” என்று கேட்க, அந்த ரசிகரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சித்ராவும் தனது பழைய புகைப்படங்களை வெளியிட்டார்.



 



தற்போது இருப்பதை விட, கொழுக்கு மொழுக்கு என்று சித்ரா இருக்கும் அந்த பழைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.



 



இதோ அந்த புகைப்படங்கள்,



 





 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா