சற்று முன்

சாதி மாற்று திருமணத்தால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படம்   |    ஏடிஎம் மையத்தில் வெளிவந்த போலி ரூபாய் நோட்டுகள் - 'பவர் ப்ளே'   |    சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அமைச்சருடன் ஆலோசனை   |    முதல்வருக்கு திரையுலக தலைவர்கள் வாழ்த்து   |    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கொரோனோ நிதி வழங்கிய படக்குழுவினர்   |    லிவ்விங் டு கெதர் என படு பிசியாக இருக்கும் கன்னிமாடம் புகழ் நடிகர் ஸ்ரீ ராம் கார்த்திக் !   |    காதலும் இல்லை, காதல் காட்சிகளும் இல்லை, மனதை வருடும் வித்தியாசமான கதை 'ஒற்று'   |    செய்தித்துறை அமைச்சருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து   |    இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் ரைட்டர்   |    ‘தமிழ் ராக்கர்ஸ்’ தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் - எச்சரிக்கை விடுத்த ஜாக்குவார் தங்கம்   |    திரையுலகினர் பாராட்டு பெற்ற 'முதலும் முடிவும்' காதல் மொழி பேசும் சுதந்திர இசை ஆல்பம்   |    ஹிப் ஹாப் ஆதியின் “தீ வீரன்” ஆவணப்படம் இணையத்தில் வைரல்!   |    ராட்சச குரங்கு நடிக்கும் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்!   |    ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் படம்!   |    நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது   |    சிவகார்த்திகேயன் பாடிய 'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது   |    மூன்று நண்பர்களை காதலிக்கும் மேக்னா 'நான் வேற மாதிரி'   |    கௌதம் கார்த்திக் நடிக்கும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' தீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில்   |    சிலம்பரசன் ‘மாநாடு’ படப்பிடிப்பில் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி   |    நான் பேபி நயன்தாரா இல்லை, இனிமேல் மிஸ் நயன்தாரா சக்ரவர்த்தி - ரஜினி பட குழந்தை நட்சத்திரம்   |   

சினிமா செய்திகள்

கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்
Updated on : 02 April 2020

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ், ‘நடிகையர் திலகம்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ’மகாநதி’ படத்திற்காக தேசிய விருது பெற்றார். அதே ஆண்டு, விஜயின் ‘சர்கார்’, ‘சண்டக்கோழி 2’, ‘சீமராஜா’ ஆகிய படங்களில் நடித்தவர், அதன் பிறகு அவரது நடிப்பில் வேறு எந்த தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. இதற்கிடையே, பாலிவுட் சினிமாவுக்காக உடல் எடையை குறைத்ததோடு, சில தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களையும் நிராகரித்த கீர்த்தி சுரேஷ், திடீரென்று பாலிவுட் படத்தை நிராகரித்து விட்டு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்படி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘பென்குயின்’, ரஜினியின் ‘அண்ணாத்தே’ ஆகிய படங்களிலும், சில மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க-வில் உள்ள பெரிய தொழிலதிபரின் மகனை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய இருப்பதாகவும், அதற்கான பேச்சு வார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும், 2021 ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. தற்போது கோலிவுட்டில் வைரலாகி வரும் இந்த தகவல், உண்மையா அல்லது வதந்தியா என்பதை கீர்த்தி சுரேஷ் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா